Author: admin

நாட்டில் 286 பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் எந்தப் பிரச்சினையும் வராது என நம்புகிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். செலவழிக்க வேண்டிய டொலர்களின் அளவு இதன்போது, சுமார் 286 பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் மீண்டும் தளர்த்தப்பட்டுள்ளன, மேலும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் படிப்படியாக முடிவுக்கு வர உள்ளன. இது நமது அந்நியச் செலாவணி கையிருப்பை கடுமையாகப் பாதித்து மேலும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில். இதை நாங்கள் மிகவும் கவனமாகச் செய்து வருகின்றோம். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாயை அதிகரிக்க வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனத் துறைசார் மேற்பார்வைக் குழுவொன்றில் கூறப்பட்டிருப்பதை ஊடகங்களில் காணக்கூடியதாகவிருந்தது. இருப்பினும், இதுபோன்ற கோரிக்கைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். அந்த 286 பொருட்களின்…

Read More

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, விசேட அதிரடிப்படையின் தலைமையில், விசேட பொலிஸ் குழுக்களை களமிறக்கி பாதாள உலகக்கும்பல்களை தேடும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கை இந்த நடவடிக்கைகள் தற்போதைக்கு தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தென்மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தகவல் வழங்கியுள்ளர். இதன் பிரகாரம், தப்பியோடிய மற்றும் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக்கும்பல் அங்கத்தவர்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Read More

களனி பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. களனிய பிரதேசத்தின் அருகே உள்ள திப்பிட்டிகொட பகுதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

Read More

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மீண்டும் நீடிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது. எனினும் புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான சிபாரிசுகள் எதுவும் இதுவரை அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அத்துடன் எதிர்வரும் நாட்களில் அரசியலமைப்புப் பேரவை திடீர் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் இல்லை என்றும் அறியக் கிடைத்துள்ளது. அவ்வாறான நிலையில் தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு இன்னுமொரு பதவி நீடிப்பு வழங்கப்படலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

அலவத்துகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அக்குறனை துனுவில பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. டி-56 துப்பாக்கி தோட்டாக்கள் 11, அலைபேசிகள் 29, இராணுவ ஜெக்கெட், ​ஹெரோய்ன் 2070 மில்லிகிராம், தடைச்செய்யப்பட்ட கத்திகள் 7 மற்றும் 17,040 ரூபாய் பணம் என்ப​ன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் சனிக்கிழமை (24) இரவு 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.. கைது செய்யப்பட்ட நபருடன் இருந்த பிரதான சந்தேக நபர், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் தீகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. பிரதான சந்தேக நபரான 43 வயதான நபர், ஈசி கேஷ் முறைமையின் ஊடாக போதைப் பொருள் விநியோகிக்கும் நபர் என்றும் அறிய முடிகின்றது. அவரிடமிருந்த கைக்குண்டு கொழும்பு பிரதேசத்தில் உள்ள நபரொருவரிடம் இருந்து விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்பது…

Read More

கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் சுமார் 9,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இணையவழி விண்ணப்பம் மூலம் மொத்தம் 9,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றார். திணைக்களம் ஜூன் 15 ஆம் திகதி கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை வெளியிட்டது, விண்ணப்பதாரர் தங்கள் கை ரேகையினை பதிவு செய்ய நியமிக்கப்பட்ட 51 பிரதேச செயலக அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிட வேண்டும். இணையவழி அல்லது BOC கிளைக்குச் சென்று பணம் செலுத்தலாம். இணையவழி பயன்பாடுகள் மூலம் இரண்டு வகையான சேவைகள் கிடைக்கின்றன. அவசர சேவைக்கு ரூ. 15,000 மற்றும் கடவுச்சீட்டு 3 நாட்களுக்குள் கூரியர் மூலம் அனுப்பப்படும். சாதாரண சேவையின் மூலம், கடவுச்சீட்டு 14 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பப்படும் மற்றும் அதற்கு ரூ. 5,000 ரூபாவும் அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மின்கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சிறப்பு பொது கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் கருத்தறியும் அமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்கட்டண உயர்வு அல்லது குறைப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட எவருக்கும் இதற்கான கருத்துக்களை வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் ஏனையவை தொடர்பில் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இம்மாத இறுதிக்குள் நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

Read More

மதுபானம் விற்கும் கடைகளில் ஸ்ரிக்கர் இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் மதுபான உரிமத்தை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்யும் உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசியப் பொருளாதாரம் மற்றும் இயற்பியல் திட்டமிடல் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இத்தகைய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பாரியளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டிய வரிகளை விரைவாக அறவிடுமாறு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம பணிப்புரை விடுத்துள்ளார். பல வருடங்களாக கலால் திணைக்களத்தின் வருமானம் அதிகரிக்கவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மதுவின் விலை உயர்வினால் மட்டும் வருமானம் குறைந்துள்ளதை அவதானிக்காமல், இந்நாட்டில் உள்ள பாரிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சரியான முறையில் வரி வசூலிக்கப்படுவதிலும் கவனம் செலுத்துவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கை கலால் திணைக்களம் டிஜிட்டல்…

Read More

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 8 அரச அடுக்குமாடி குடியிருப்புகள் பாரியளவில் பாழடைந்து காணப்படுவதால், அந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அந்த வீட்டுத் தொகுதிகளை இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வகந்த அடுக்குமாடித் திட்டம், பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை வீடமைப்புத் திட்டம், சிறிதம்மா மாவத்தை வீடமைப்புத் திட்டம், கந்தேபுர அடுக்குமாடித் திட்டம், B36 மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டம், ஜி.எச்.ஜே.கே. எம். மற்றும் என். மிஹிந்து மாவத்தை வீடமைப்புத் திட்டம் ஆகிய எட்டு வீட்டுத் தொகுதிகள் இவ்வாறான நிலையில் காணப்படுகின்றன. இந்த வீட்டுத் தொகுதிகளை இடித்துத் தள்ளுமாறு வீடமைப்பு அமைச்சிடம் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

அவிசாவளை – குருகல்ல பகுதியிலுள்ள 12 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 12 இளைஞர்கள் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் இருந்ததாகவும் , அந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடுதியின் உரிமையாளர் பேஸ்புக் ஊடாக இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Read More