Author: admin

எரிவாயுவை கோரி வீதியை மறித்து தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தின் போது Slave Island பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

Read More

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பொருட்படுத்தாமல் ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொள்வதுடன், சட்டம், ஒழுங்கைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், நாட்டின் பொதுச் சட்டத்தை அவமதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு அன்புடன் கேட்டுக்கொள்கிறது. ஜனநாயக கட்டமைப்புக்குள் அமைதியான முறையில் தமது போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தும் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையை நாம் அனைவரும் மதிக்கின்றோம் என்பதை குறிப்பிட வேண்டும். இருந்த போதிலும், விசேடமாக கடந்த சில நாட்களாக அமைதிப் போராட்டமாக நடைபெற்று வந்த போராட்டத்தை மாற்றி மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சி…

Read More

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்தை விரட்டியடிப்போம்; அரசியல் முறையைக் கவிழ்ப்போம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்து செங்கலடி சந்திவரை சென்று அங்கு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், பௌத்த தேரர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணிக்கு ஒன்றிணைந்தனர். இதனையடுத்து உணவு இல்லை, பால்மா இல்லை, எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை, கொள்ளைக்கார பொருளாதார முறைமைக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கொடு, அடிக்காதே அடிக்காதே விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, போன்ற அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து செங்கலடி சந்தியை…

Read More

நாட்டில் இரசாயன உரங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கப்பட்ட உள்ளதாக உர இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கடனுதவி கிடைக்காமையால் எதிர்வரும் பருவத்திற்கு தேவையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் தற்போது கிடைக்கும் உரத்தினளவு எதிர்வரும் விவசாயப் பருவத்தில் பயிர் செய்வதற்கு போதுமானதாக இல்லை என உர இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுஜிவ வலிசுந்தர தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் உரத்தின் விலையும் விவசாய சமூகத்தின் விலைக்கு எட்டாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்றார். இதேவேளை, அடுத்த பருவத்துக்கான சேதன உர விநியோகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவியின் கீழ் அடுத்த பருவத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More

பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பி.பி.சியிக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போதிய வருமானமின்றி வரிச்சலுகை வழங்கும் அரசின் முடிவு சரியல்ல என்றும் அவர் கூறினார். உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் பொருளாதாரத்தில் பணத்தை மீள முதலீடு செய்யுமென்ற நம்பிக்கையில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதி நம்பியவாறு அது நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று ரூபாயை மிதக்கவிடுமாறு பொருளாதார நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையை அரசாங்கம் ஏன் பின்பற்றவில்லையென ஊடகவியலாளர் நாமல் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார. இதற்குப் பதிலளித்த நாமல், அதற்கு முடிவெடுப்பவர்களும் பொறுப்பென்று கூறினார். அரசியல்வாதிகள் பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையே இதற்கு காரணமென அவர் தெரிவித்தார். அதிகாரிகள் தவறான அறிவுறுத்தல்களை வழங்கியதை தற்போதைய நிதியமைச்சர் அலி சப்ரியும் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அனுராபுரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) சென்றிருந்தார். பிரதமரின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த , அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார். திங்கட்கிழமை (9) முக்கிய அறிவிப்பொன்றை விடுவார் உள்ளிட்ட செய்திகள் கடந்த சில நாட்களாக பரவின. அதுமட்டுமன்றி பாராளுமன்றத்தில் கடந்த 5 அல்லது 6 ஆம் திகதியன்று உரையாற்றுவார் என்றும் தகவல்கள் கசிந்திருந்தனர். எனினும், பிரதமர் உரையாற்றவில்லை. இதனிடை​யே பதவி விலகுமாறு ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தவில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Read More

நாளை (09) முதல் ஒரு வார ‍காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அவசரகாலச் சட்டங்களை விதித்து போராட்டங்களை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராகவே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

Read More

எதிர்வரும் வாரம் முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தியொன்று குறிப்பிடுகிறது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை அறிய ஊடகங்கள் இலங்கை மின்சார சபையிடம் வினவியது. இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி, குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இதுவரையில் இலங்கை மின்சார சபையினால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இலங்கை மின்சார சபை இன்று (08) கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்தச் செய்தி தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவிடம் ஊடகங்கள் வினவியபோது, 10 மணித்தியால மின்வெட்டு தொடர்பில் தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Read More

இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இடம்பெற்றது போல ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணிநேரம் முக்கிய வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களிற்கும் நாடாளுமன்றம் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் கடமை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பொலிஸார் படையினர் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் அவசரகாலநிலையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தனியாக அதிகாரிகளை சந்தித்தார் என அவர் தெரிவித்துள்ளார். நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Read More