Author: admin

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து வந்த கப்பலொன்றில் இருந்து சுமார் 65 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது கைப்பற்றப்பட்ட ஹெரோயின், 16,193 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. துறைமுக சுங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, நீண்ட விசாரணையின் போது, ​​கப்பலின் குளிர் கொள்கலன் பெட்டியொன்றில் இந்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More

பாணந்துறை நடமாடும் விபச்சார மையத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு பயங்கரமான பாலியல் வியாதி தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரகலய உறுப்பினர் ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குறித்த விபச்சார மையத்தில் இருந்து கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்களில் ஒரு பெண் சமூக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மருத்துவ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

Read More

சுகாதார அமைச்சுப் பதவியில் தொடர்ந்தும் நிலைத்திருப்பது குறித்து தனக்குள் அதிருப்தி இருப்பதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்குப் போதுமான நிதி கிடைக்கவில்லை என்றால், அமை்சசுப் பதவியில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான எதிர்பார்ப்புகள் இல்லை என்றும் கெஹலிய ரம்புக்வல்ல நாடாளுமன்றத்தில் இன்று (22) வலியுறுத்தியுள்ளார். மருந்துப் பற்றாக்குறை தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரமதாச முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய அமைச்சர், அமைச்சரவை ஊடாக இதற்கான விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். இதன்படி எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து ஆரம்ப பிரிவினருக்கு அடிப்படை மட்டத்திலும் தரம் 6 இலிருந்து ஜப்பானிய மொழியை ஒரு பாடமாக கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜப்பானிய சந்தையை இலக்காகக் கொண்டு 5000 ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளர்களைக் கொண்ட குழுவை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Read More

நாட்டில் பொது அமைதியை நிலைநாட்ட சகல ஆயுதப்படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை குறைக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதல்ல, கால்நடை வளர்ப்புத் திட்டத்தை வெளிநாட்டு சந்தைக்கு வழங்கும் திட்டமாக மாற்றுவதே தமது நோக்கம் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். முட்டையின் விலை 50 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையும் 1,600 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் நேற்றைய ஊடக சந்திப்பில் கேள்விகள் எழுந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவை வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை முன்வைக்கும் போதே பிரதி உயர்ஸ்தானிகர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்டம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களை பாதுகாப்புப் படையினர் கையாண்ட விதம் தொடர்பில் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தனது ஆட்சேபனையையும் தெரிவித்துள்ளார். போராட்டத்தின் தலைவர்கள் கைது, நகைச்சுவை நிகழ்ச்சியின் போது பேசியதற்காக ஆட்களை கைது செய்தல்,…

Read More

துப்பாக்கிப் பாவனையினால் அதிகரித்து வரும் கொலைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றவியல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வழங்கிய நேர்காணலில் வெளிநாட்டவர்கள் இந்நாட்டில் முதலீடு செய்யும் போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதாகக் தெரிவித்திருந்தார். 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கையை விடவும் இவ்வருடம் இதுவரை அதிக எண்ணிக்கையிலான மனிதக் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சமூகத்தின் பாதுகாப்பு அழிந்து வருவதாக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். சமுதாயத்தில் பெருமளவில் துப்பாக்கி புழக்கம் அதிகரித்துள்ளதால், நகர்ப்புற சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் தானியங்கி ஆயுதங்களை களைய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் இரவு நேரங்களில் பல பகுதிகளில்…

Read More

67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை, கொத்தட்டுவை, மஹரகம ஆகிய டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

அம்பன்பொல ஆகரே பிரதேசத்தில் துப்பாக்கியொன்று இயங்கியதால் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அம்பன்பொல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் கெத்தபஹுவ, அம்பன்பொல பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஆவார். உயிரிழந்த சிறுவன் தனது தந்தை மற்றும் தாயுடன் ஆகரே பிரதேசத்தில் தென்னை பயிரிடும் காணிக்கு சென்றுள்ளார். அங்கு சிறுவனை நிறுத்திவிட்டு தாயும் தந்தையும் அருகில் உள்ள வயலுக்கு சென்றுள்ளனர். அப்போது, ​​சிறுவன் நின்றிருந்த பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதுடன், அங்கு சென்று பார்த்த போது மகன் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் விழந்து கிடந்துள்ளார். அவரின் அருகில் இருந்து குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி தவறுதலாக வெடித்து இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Read More