Author: admin

பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. அதன்படி, வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர் ஒருவர் அந்தப் பாடசாலையின் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்குச் செய்த இந்தச் செயல் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்தது. மாணவியை தவறு செய்ய தூண்டும் நோக்கில் ஆசிரியர் தொடர்ச்சியாக வட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாக சந்தேகிக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆசிரியை அனுப்பிய செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை மாணவி தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்த நபர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு…

Read More

எட்டுவயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 70 வயதான தேரரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹெட்டிப்பொல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபரான அந்த ​பௌத்த தேரர், இரண்டு மாதங்களாக அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பௌத்த தேரர் அங்குள்ள விஹாரையிலே​யே தங்கியிருப்பவர் என்றும். எனினும், தற்போது தலைமறைவாகிவிட்டார் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Read More

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01) பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து எதிர்ப்பை வெளியிடுவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. மின்சாரம், பெற்றோலியம், நீர், துறைமுகங்கள் மற்றும் வங்கிகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளன. 18 அரச மற்றும் தனியார் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், இலங்கை வங்கியின் தொழிற்சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்க கூறியுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கறுப்பு பட்டி அணிந்து அல்லது கறுப்பு ஆடை அணிந்து கடமைக்கு சமுகமளிப்பார்கள் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின்…

Read More

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 17வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட யாசிர் பாபா அப்துல் ரவூப் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த வழக்கு விசாரணையை மார்ச் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (28) தீர்மானித்துள்ளது. வழக்கின் 17ஆவது பிரதிவாதி கடந்த 5ஆம் திகதி உயிரிழந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர, குறித்த பிரதிவாதி உயிரிழந்துள்ளதால் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பின்னர் திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையில் திருத்தம் செய்தது. இதையடுத்து, விசாரணையை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது எனும் தலைப்பில், தனியார் ஊடகமொன்றின் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் ​பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது. அந்த இணையளத்தள செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த நாட்டின் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடொன்றில் இன்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என்றும் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது என பொலிஸ் தலைமையக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்காக அந்த குழு சூழ்ச்சிகளை செய்துள்ளது என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதைப் ​போல, படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் எந்தவொரு தகவலும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை. அதேபோல, செய்தியில் கூறப்பட்டுள்ளதைப் போல விசாரணைகளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால்…

Read More

சூரியவெவ முதுநாகல பிரதேசத்திலுள்ள விவசாயத் தோட்டத்தில், 20 ஏக்கரில் மாங்காய் மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. அந்த தோட்டத்துக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மாங்காய்கள் பறிக்கப்பட்டுள்ளன. அந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை சந்​தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை (27) மாலை 6 மணியளவில் வானொன்றில் வந்த இந்த நபர்கள், தோட்டத்துக்குள் நுழைந்து மாங்காய்களை பறித்துள்ளனர். இதுதொடர்பில் தோட்டத்தின் உரிமையாளருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பிரதேசவாசிகளுடன் தோட்டத்துக்குச் சென்று அந்த நால்வரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேகநபர்கள் சூரியவெவ மற்றும் ஹொரனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்று தெரிவித்த சூரியவெவ பொலிஸார், அந்த நால்வரில் ஒருவர் 14 வயதான மாணவன் என்றும் தெரிவித்தனர்.

Read More

நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10 மணிக்கு விசேட மத்திய குழு கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாளைய தின(01) ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் எரிபொருள், துறைமுகம், மின்சார தொழிற்சங்கங்களும் பங்கேற்கவுள்ளதாக துறைமுக இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம்(01) தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்க கூறியுள்ளார்.

Read More

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இன்று சொகுசு வாகனத்தில் வைத்து நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காலை 08.00 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்திற்குள் உயிரிழந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

செந்நெல் கிராமம் அறபா பள்ளிவாசல் பிரதேசத்தில் கல்குவாரியினால் உருவான ஆழமான குட்டையில் நீர் காணப்பட்டதினால் அப்பிரதேசத்தினை சிறுவர் குளிப்பதற்காக குதித்து உயிரிழந்துள்ள சம்பவத்தை அடுத்து குட்டையை மூடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இப்பிரதேசத்தில் இனியும் இடம்பெறக் கூடாது என்பதற்காக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாஇ சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.கபீர்இ சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட்இ பிரதேச சபை உறுப்பினர்களான பீ.எம்.றியாழ்இ எஸ்.நளீம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீல், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல். றாசீக்இ கிராமசேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினருடன் குறித்த இடத்திற்கு இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்பிரதேசத்தில் வாழும் மக்களிடம் சென்று இக்குட்டை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பற்ற வகையில் மூடிதந்தால் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் பாதுகாக்க முடியும் என்று பொதுமக்கள் தவிசாளரிடம் குறிப்பிட்டனர். இதனை…

Read More