Author: admin

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விஐபி பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் விமானப் பயணிகளின் பயணப் பொதிகளை பரிசோதிப்பதற்காக அதிநவீன தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் இருப்பதாகவும், ஆனால் பிரமுகர் பயணிகள் முனையத்தில் அவ்வாறான வசதிகள் இல்லை எனவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக சிறப்பு பயணிகள் முனையம் வழியாக வரும் விஐபிக்களின் லக்கேஜ்கள் சோதனை செய்யப்படுவதில்லை என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான வெளிநாடுகளில் உள்ள சிறப்பு பயணிகள் முனையங்களிலும், சிறப்பு விசேட பயணிகள் முனையங்களிலும் உயர் தொழில்நுட்ப ஸ்கேன் ஆய்வு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஐபி முனையத்தினூடாக சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு வரப்படுவதை…

Read More

உயர்தர விடைத்தாள் மதிப்பீடுகளை திட்டமிட்டபடி நடத்துவதில் பரீட்சை திணைக்களம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய நிதி நெருக்கடி அதற்குக் காரணம். பத்தொன்பதாயிரம் ஆசிரியர்கள் மதிப்பீட்டுக்காகக் கோரிய முன்பணத்தை இதுவரை திணைக்களத்தினால் செலுத்த முடியவில்லை. ஒரு பகுதியினருக்கு மட்டுமே முன்பணம் செலுத்த முடிந்தது. முன்பணம் பெறாதவர்கள் நேற்று (26) மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகினர். முற்பணம் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் இவர்கள் மீண்டும் மதிப்பீடுகளுக்காக இணைந்துள்ளனர். ஆனால், முன்பணம் வழங்க, துறையிடம் பணம் இல்லை என, குறித்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அறுபத்து மூன்று பாடங்களுக்கான மதிப்பெண் நடைமுறைகள் தயாரிக்கப்பட்டு பன்னிரெண்டு பாடங்களின் மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்த போதிலும் இதுவரை அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் நடைமுறைகள் தயாரிக்கப்படவில்லை அல்லது திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

இளைஞர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன. அதன்படி, பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை, தெமோதர பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகள் இந்த இரு பெண்களையும் கைது செய்தனர். சந்தேகநபர்கள் இருவரும் பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாளை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். குறித்த சந்தேக நபர்களைத் தவிர, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தொடர்பிலும்…

Read More

இந்த வருட இறுதிக்குள் நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார். இதனால் பல கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 2 வருடங்களில் நாட்டின் மருந்துகளுக்கான தேவையில் 70 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார். நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றிற்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக டொக்டர் சமன் ரத்நாயக்க கூறினார்.

Read More

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவுள்ள பரீட்சார்த்திகளின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்கு கால அவகாசம் காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒன்லைன் ஊடாக திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதனால் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு சமுகமளித்தோ அல்லது மின்நகலினூடாகவோ அதனை செய்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பரீட்சை மண்டபங்களுக்கு சென்று திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அதனூடாக சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார். இதேவேளை, எவ்வித காரணங்களுக்காகவும் சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சில பாடசாலைகளில் பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டு பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை அதிபர் வழங்கவில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.…

Read More

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்று வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம் )

Read More

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா தொடர்பில் இறுக்கமான பல கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் அதிகரிக்கும் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டு வருகின்ற கடுமையான திட்டங்களின் ஒரு பகுதியாகவே மாணவர் விசா மீதும் கடும் போக்கைக் கடைப்பிடிக்க பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மாணவர் விசா தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (23) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை அழைத்து அவர்களோடு இணைந்து கொள்வதை (family reunification for foreign students) பெருமளவில் கட்டுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்வதற்கு முன்பாகவே மாணவர் விசாவைத் (student visa) தொழில் விசாவாக (work visa) மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் வெகு விரைவில் நிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிகளை அனுப்பிவைப்பதற்கான ஒரு பயண வழியாக மாணவர் விசாவைப் பயன்படுத்துகின்ற சர்வதேச முகவர்களை இது கட்டுப்படுத்தும் என பிரித்தானிய…

Read More

சிங்கப்பூரின் புகழ்பெற்ற “ஒன் வேர்ல்ட் டூட்டி ஃப்ரீ” குழுமம், இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகரமான கொழும்பில் வரியில்லா வணிக வளாகத்தை நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, ஒன் வேர்ல்ட் டூட்டி ஃப்ரீ குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெய்ரா ஷான் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரியத் பந்துவிக்ரம ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு துறைமுக நகர அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இன்றி தென்கொரியாவிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிய கொரிய பிரஜை ஒருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் இன்று (26) காலை கைது செய்துள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Read More