Author: admin

இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயற்சித்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இச் செயலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான இன்சுலின் ஊசி மூலம் மயக்கமடைந்த பெண் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திருமணமாகி சில காலம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவி மருத்துவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவர் அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை என பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்குரிய வைத்தியர் குழந்தை இல்லாத காரணத்தினாலும் அடிக்கடி தகராறு செய்த காரணத்தினாலும் மனைவியை கொல்லும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பகட்ட…

Read More

டீசலுக்கான விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், பஸ் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொது போக்குவரத்து சேவையை தரமான சேவையாக நடத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைகளையும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனால், பஸ் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Read More

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. பெட்ரோலின் விலையை 7 ரூபாவால் குறைப்பது கட்டணத்தை மாற்றுவதற்கு போதாது என அதன் தலைவர் லலித் தர்மசேன இன்று (01) காலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

Read More

பல்கலைக்கழகங்களில் கலைப் பீடங்களில் சேரும் மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் முதல் 02 பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கலைப் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக தொழில்நுட்பம் மற்றும் கணனி விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைக்கும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதன் முலமாக கலைப் பீட மாணவர்களுக்கு இரண்டு பட்டங்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

Read More

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். அதன்படி, இன்று (01) வெளி மாகாணங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், மாவட்டப் பொறுப்பதிகாரிகளான பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான எஸ்.எஸ்.பி.க்களுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்கியுள்ளது. இதன்படி, நுகேகொட, நுவரெலியா, கண்டி மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள மே மாத பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தேவையான பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் விசேட போக்குவரத்து திட்டமும் திட்டமிட்டபடி பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. கண்டி நகரிலும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், நகரின் ஊடாக பயணிக்க விரும்பும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மாலை வேளையில்இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை விருத்தியடைந்துவருகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது⛽📉 ▫️92 ஆக்டேன் பெட்ரோல்: ரூ. 333/- (ரூ. 7/- குறைப்பு) ▫️95 ஆக்டேன் பெட்ரோல்: ரூ. 365/- (ரூ. 10/- குறைப்பு) ▫️ஆட்டோ டீசல்: ரூ. 310/- (ரூ. 15/- குறைப்பு) ▫️சூப்பர் டீசல்: ரூ. 330/- (ரூ. 135/- குறைப்பு)

Read More

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக திடிரென யானைகள் உட்புகுந்து அட்டகாசம் செய்வதுடன் பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளன. மேற்குறித்த பகுதிகளில் இவ்வாறு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக உட்புகுந்து மதில்கள் கட்டிடங்களை உடைத்து சேதம் விளைவித்து வருகின்றன. மேலும் வேளாண்மை செய்கைக்காக விதைப்பதற்கு வைத்திருந்த முளைநெற்களையும் சேதப்படுத்தி வருகின்றதுடன் பொது மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இது தவிர குறித்த யானைகள் அங்குள்ள பொதுமக்களின் வீட்டுத்தோட்டம் என்பவற்றையும் பிடுங்கி சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் வனபரிபாலன திணைக்களத்திற்கும் பொதுமக்கள் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டனர். மேலும் அண்மைக்காலமாக தினம் தோறும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதனால் யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்தி காட்டிற்கு விரட்டுவதற்கு அவ்விடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களம் வருகை தருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு பொது மக்கள் மத்தியில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்த போதிலும், உழைக்கும் மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட நிதியை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Read More

கொரோனா வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் (28) உயிரிழந்ததாகவும், மற்றுமொரு நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (29) உயிரிழந்துள்ளதாகவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் மீண்டும் நாடு முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக முகமூடி அணிந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் பொருத்தமானது என்றும் மரண பரிசோதகர் மேலும் தெரிவித்தார். மருத்துவமனை வட்டாரங்களின்படி, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் ஊழியர்களும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More