Author: admin

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் அரசுடமை ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த போது அறிவிக்கப்படாத மூன்றரை கிலோ தங்கத்தை வைத்திருந்த நிலையில் அலி சப்ரி ரஹீம் எம்.பி இலங்கை சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள், சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி உதவிகளை ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நலன்புரி பயனாளிகள் தமது கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்குகள் இல்லாத பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன சுட்டிக்காட்டினார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்காக ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு வலையமைப்பின் ஒரு கட்டமாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் மேற்பார்வையின் கீழ் நிதி அமைச்சு உள்ளிட்ட தொடர்புள்ள அமைச்சு அதிகாரிகளின் பங்களிப்புடன் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ், 40% குறைந்த…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 9 பேர் பலாலி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தையிட்டியில் நீதிமன்ற உத்தரவை மீறி விகாரை காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் இன்று (23) மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சட்டத்தரணி ஒருவரும், நான்கு பெண்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Read More

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக யாஹூ நிதி இணையத்தளம் காட்டியுள்ளது. இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கை 17வது இடத்தைப் பெற்றுள்ளது. 2021ல் இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5555 அமெரிக்க டொலர்களாக இருப்பதை இது காட்டுகிறது. இந்த தரவரிசையில் முதல் இடத்தை வட கொரியா பெற்றுள்ளதுடன்  2021 இல் அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி  931 டொலர்களாகும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் பெற்றுள்ளன. அந்த நாடுகளின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையே 1149 மற்றும் 1561 அமெரிக்க டொலர்களாகும்.

Read More

இந்தியாவின் பாண்டிச்சேரி – காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார். இந்திய மத்திய அரசாங்கத்தின் இறுதிக்கட்ட அனுமதி இதுவரை பெறப்படாததால் குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பட்டார். இந்தக் கப்பல் சேவையை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததது. பின்னர், மே மாத நடுப்பகுதி வரை கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதன் ஆரம்பத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Read More

தங்கவேலு நிமலன் என்ற நபருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக வெடிபொருட்கள் மற்றும் 2 மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இரண்டு மைக்ரோ பிஸ்டல்கள், 1 1/2 கிலோ C-4 ரக உயர் வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி, குற்றவாளிக்கு கடூழிய வேலையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

Read More

தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19, 20 மற்றும் 21 வயதுடைய தயாளன், ஜோன் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியுள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மூன்று இளைஞர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த நிலையில் அவர்கள் சிறு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதேவேளை, இவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, ​​கையடக்கத் தொலைபேசியில் சில காட்சிகளை எடுக்க முற்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல்…

Read More

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு தனது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸை கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் பாடாசலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (22) திருகோணமலை நீதவான் நீதிமன்றின் முன் அழைக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் தரப்பானது திறந்த நீதிமன்றில் முன்மொழிந்திருந்தது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியையோடு கலந்தாலோசித்த ஆசிரியையின் சட்டத்தரணிகள் பின்வரும் நிபந்தனைகளை அதிபரும் பாடசாலை சமூகமும் ஏற்பின் இணக்கமொன்றுக்கு வர சாத்தியமிருப்பதாக கூறி அதனை நீதிமன்ற வழக்கேட்டிலும் பதிவு செய்திருந்தனர். 1) இனி எக்காலத்திலும் சண்முகா கல்லூரிக்கு கற்பிக்க செல்கின்ற முஸ்லிம் ஆசிரியைகள் தமது ஆடையாக அபாயாவை அணிவதற்கு தன்னாலோ தனது பாடாசாலை சமூகத்தாலே எவ்வித தடங்கல்களும்; ஏற்படுத்தப்பட மாட்டாது…

Read More

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (மே 23) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் வங்கி ; நேற்று 297.32 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 297.31 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 314.29 ரூபாவிலிருந்து 313.30 ரூபாவாக குறைந்துள்ளது. கொமர்ஷல் வங்கி : நேற்று 298.90 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 298.18 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 312 ரூபாவிலிருந்து 310 ரூபாவாக குறைந்துள்ளது. சம்பத் வங்கி : நேற்று 300 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 299 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 312 ரூபாவிலிருந்து 311 ரூபாவாக குறைந்துள்ளது.

Read More

ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan) அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலீத் நாசர் அல் அமெரியினால் நேற்று (22) ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP 28) எதிர்வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உலகத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்துஜீவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறும். காலநிலை மாற்றம் மற்றும் நாடுகள் அதை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளன என்பது குறித்த உரையாடலுக்கான முன்னணி சர்வதேச தளமாக காலநிலை மாற்ற உச்சிமாநாடு செயல்படுகிறது. மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய…

Read More