Author: admin

பதுளை – ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறான பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியிலுள்ள நீர் வடிகானுக்கு அருகில் குறித்த நபர் நின்றிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மின்னல் தாக்கியதில் அவரது கையடக்க தொலைபேசியும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சடலம் நீதவான் பரிசோதனைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

Read More

பொது சுகாதார பரிசோதகர்களால் செல்ல முடியாத உயரமான கட்டிடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் இன்று (20) டிரோன் கமெராக்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டது. அத்தகைய கட்டிடங்களில் நுளம்புகள் தொற்றக்கூடியவை தண்ணீர் நிற்கும் இடத்திற்கு ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி BTI துகள்களும் தெளிக்கப்பட்டன. நாட்டில் தற்போது டெங்கு பரவும் சூழ்நிலை குறையும் வரை இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் உள்ள ஒவ்வொரு வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் உரிய ஆளில்லா விமானத்தை நாளாந்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை 35,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Read More

பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை ஓட்டுகிறார்களா? என்பதை கண்டறியும் வகையில் நேற்று (19) இரவு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வெல்லம்பிட்டிய பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. நேற்று இரவு முதல் இன்று (20) காலை வரை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​போதையில் பேருந்துகளை செலுத்திய மூன்று சாரதிகளும் பேருந்துகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் இன்று (20) ஜீப் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று (20) காலை இந்த விபத்து குருநாகல், உஹுமிய, டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. அந்த விபத்தில் குறித்த பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சித்துமினி ராஜகுரு என்ற 17 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குருநாகலுக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்த போதே குறித்த மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார். வீதியில் பயணித்த ஜீப் ஒன்று, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், வீதியை விட்டு விலகி, மாணவி மீது பாய்ந்து, தொலைபேசி கம்பத்தில் மோதி நின்றது. சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More

காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் நேற்றிரவு (19) கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாயுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இவற்றை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் அவர்கள் பயன்படுத்தி உள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read More

இந்த ஆண்டு மே மாதம் வரை 2726 இலங்கை தொழிலாளர்கள் தென் கொரிய வேலை வாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட வேலை ஒப்பந்தங்களின்படி, 2694 இளைஞர்களும் 32 யுவதிகளும் உற்பத்தி, மீன்பிடி மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் கொரிய வேலைகளுக்கு சுமார் 8000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அந்நாட்டு மனிதவளத் துறை ஒப்புக்கொண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நிலவரப்படி தற்போது நடைபெற்றுவரும் கொரிய மொழி தேர்வுக்கு 84886 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்தை, மருந்துகளுக்கான கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வாமை ஏற்பட்டமையினால் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்தில் கிருமித்தொற்று காணப்படுவதாக ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த மருந்துகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

களுத்துறை மாவட்டத்தில் குடிபோதையில் புதல்வன் தன் தகப்பனை அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்னை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாய்த்தர்க்கம் தந்தையும், மகனும் மது அருந்திவிட்டு வீடு வந்திருந்த நிலையில் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது தந்தை மீது மகன் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக அதே இடத்தில் 73 வயதான தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து 32 வயதான மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

நானுஓயா ரயில் நிலையத்தின் முன் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொட்டக்கலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள ஸ்லீப்பர் கட்டைகளை ஏற்றிச் சென்ற ரயிலில் தண்டவாளத்தில் தலை வைத்து உயிரிழந்துள்ளார். நீண்ட நேரம் காத்திருந்து யாரும் கவனிக்காத நேரத்தில் நடைமேடையில் இருந்து வேகமாக பாய்ந்து ரயில் பெட்டிகளுக்கு கீழே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து ரயில் சக்கரத்தில் சிக்கி இளைஞன் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியா லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோவன் கோவர்தனன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் , தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அந்நாட்டில் உள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியா சென்றுள்ளது. சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவரும் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார். இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள பல கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டிக்கு திரும்ப உள்ளனர். தற்போது, ​​இந்தியாவில் 03 கோழிப்பண்ணைகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதுடன், போதிய அளவு இல்லாததால், சில புதிய பண்ணைகளை அடையாளம் காண்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். அதன்படி நாளாந்தம் சுமார் ஒரு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Read More