Author: admin

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி நுவரெலியா காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை வேளைகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிகமாக இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கையின் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுற்றுலா பயணி ஒருவர் அம்புலுவாவ கோபுரம் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவை டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ரி டுவிட் செய்துள்ளார். இதன் மூலம் இலங்கையின் புகழ் பெற்ற சுற்றுலா தளமான அம்புலுவாவ கோபுரம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறித்த காணொளியை இதுவரை 3.4மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Read More

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி மொஹம்மட் அம்ஜத் கான் நியாஸி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கைக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையிலான கடல்சார் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Read More

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார். எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், எண்ணெய், எரிபொருட்கள் அல்லது நிலக்கரி ஆகியவற்றை வெளியேற்றல், தரையிறக்குதல், சேமித்தல், விநியோகம் செய்தல் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன. சுங்க கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக (அத்தியாயம் 235), வீதிகள், பாலங்கள், கல்வெட்டுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் பாதைகள் உட்பட வீதிகள், ரயில் அல்லது விமானம் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தலையும் ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

Read More

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. முன்னதாக, பெற்றோர் சம்மதம் இருந்தால், 16 அல்லது 17 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்படாத இளைய சிறுவர்களுக்கு விழாக்களுக்கு எதிராக எந்தச் சட்டமும் இல்லை. புதிய சட்டம் சட்டப்பூர்வமற்ற விழாக்களையும் உள்ளடக்கியது. ]இந்த மாற்றங்கள் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதில் இருந்து பாதுகாக்க உதவும் என்று அரசாங்கம் கூறியது. முன்பு கட்டாயத் திருமணம், மிரட்டல் போன்ற வற்புறுத்தல்களைப் பயன்படுத்தினால் மட்டுமே குற்றமாக இருந்தது. ஆனால், திருமணம் மற்றும் குடிமை கூட்டு (குறைந்தபட்ச வயது) சட்டத்தின் கீழ், எந்த சூழ்நிலையிலும், பலவந்தமாக பயன்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது இப்போது சட்டவிரோதமானது. குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் நாடாளுமன்றத்திற்கு தீவைக்க கூறிய லால் காந்தவிடமும், ஹந்துன்நெத்தியிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இது அனுரவின் டீல், இது எப்படி நடந்தது என முடிந்தால் அனுர பதில் கூறட்டும் எனவும் சவால்விடுத்துள்ளார். திஸ்ஸமஹாராம மகளிர் தொகுதி கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ”2009 அல்லது 2010 இல் திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற பிரதான கூட்டத்தில் உரை நிகழ்த்த வந்தேன். அன்றும் நான் ஜே.வி.பி பற்றிப் பேசினோம். இன்று பெருந்தொகையான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஜனநாயகம் பற்றி அநுரவின் கட்சியால் மாத்திரம் தான் பேச முடியுமா? அவ்வாறு நினைத்துத் தான் அவர் செயற்படுகிறார். அவர் அவதூறு பேசலாம், பொய் சொல்லலாம், கூட்டங்கள் நடத்தலாம், ஆனால், கூட்டம் நடத்தி, நாம் ஏதாவது சொன்னால், அனைவரும் தம்மைக் குறை சொல்வதாக கூறுவார்.…

Read More

எரிபொருள் விநியோகத்துக்கான தேசிய பாஸ் QR முறையை ஏப்ரல் 10 முதல் இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தரவு பகுப்பாய்வு செய்யப்படும் அத்துடன் அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

Read More

பூமியின் மையத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடிக்காத புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளனர். நமது பூமியின் மையத்தில் மாபெரும் நெருப்பு கோளம் உள்ளது. பூமியின் சூட்டை காப்பது அதுதான். சமீபத்தில் இந்த நெருப்பு கோளம் குறித்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியானது. இந்த கோளம் தனியாக உட்பகுதியில் சுற்றிக்கொண்டு இருக்கும். அதாவது ஒரு பந்துக்குள் இன்னொரு பந்து இருப்பதைப் போன்றது. மேலே இருக்கும் பந்து ஒரு வேகத்தில் சுற்றுகிறது. உள்ளே இருக்கும் பந்து இன்னொரு வேகத்தில் சுற்றுகிறது. அப்படிதான் பூமியின் மையத்தில் இருக்கும் இந்த கோளமும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பூமி மையத்தில் இருக்கும் கோளத்திற்கு உள்ளே இன்னொரு கோளம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். Nature Communications என்ற ஆய்வு பத்திரிகையில் வெளியாகி இருக்கும் கட்டுரையில் இந்த தகவல் இடம்பெற்று உள்ளது. தற்போது வரை பூமியில் crust அதாவது வெளிப்பகுதி, mantle என்ற உட்பகுதி…

Read More

உள்ளூராட்சிதேர்தலிற்கான போராட்டத்தில் எந்த வழிமுறையையும் பயன்படுத்தி வெற்றிபெறுவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். லிப்டன் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கருத்து வெளியிட்ட அவர், உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கத்தை நடத்தச் செய்வதற்கான போராட்டத்தை கண்ணீர் புகைபிரயோகத்தின் மூலம் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தலை ஒருமாதத்திற்கோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கோ ஒத்திவைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முடியாது. மேலும் அதிகளவான பொதுமக்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More

பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளை பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்ததாக அளுத்கம தெரிவித்துள்ளார். பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று பிற்பகல், 9 வயது மகனையும், 1 வயது மற்றும் 6 மாதங்களேயான பெண் குழந்தையையும் அழைத்துச் சென்று பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு, குறித்த பெண் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து நீரில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்த்தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அருகில் நின்ற இளைஞர் ஒருவர் காப்பாற்றியதாக கூறப்படுகிறது. குறித்த பெண் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு குழந்தைகளையும் அளுத்கம பொலிசார் அழைத்து வந்துள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பானங்களையும் பொலிஸார் வழங்கியுள்ளனர்.

Read More