Author: admin

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு, கடலோர பாதுகாப்பு படை காவல்துறையினர், மண்டபம் கடற் பரப்பில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது இலங்கை பகுதியில் இருந்து பயணித்த நாட்டுப் படகு ஒன்றை அவதானித்த நிலையில், அதனை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். குறித்த படகில் பயணித்த இருவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது, அவர்கள் இலங்கையில் 14 கோடி ரூபா மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்றமை கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, கைப்பற்றப்பட்ட தங்கத்தையும், படகையும் பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு படை காவல்துறையினர் இரண்டு சந்தேகநபர்களையும் கைதுசெய்து, மேலதிக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Read More

கொழும்பு பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிவு நிலையிலேயே இருந்து வந்தது. கடந்த 3 மாதங்களில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்ற போதும், பங்குச் சந்தை நடவடிக்கைகள் சரிவு தன்மையிலேயே இடம்பெற்றிருந்தன. இதற்கான பிரதான காரணம் பங்குச் சந்தையில் உருவாகி இருந்த எதிர்மறை நிலைப்பாடு என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் அந்த பணிகள் நிறவடையவில்லை. எதிர்வரும் செப்டம்பர் மாதம் அது நிறைவடையும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். செப்டம்பருக்குள் அது நிறைவடையாவிட்டால், நாடு சிக்கலை எதிர்கொள்ளும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இந்த தகவலின் தெளிவற்றத் தன்மையால், அதுகுறித்த அச்சம் நாட்டில் சூழ்ந்துள்ள நிலையில், அது பங்குச் சந்தையையும் வியாபித்துக் கொண்டது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் நாட்டின் வங்கிக் கட்டமைப்பு…

Read More

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி திட்டத்திற்கு கொரிய அரசாங்கம் 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி அபிவிருத்தித் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனமும் (KIAT) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் இன்று கைச்சாத்திட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா ஏரி மற்றும் ஊவா மாகாணத்தின் கிரிப்பன் குளம் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த இரண்டு திட்டங்களும் கொரிய பொறியியல் நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 2024 டிசெம்பர் மாதத்திற்குள் இத்திட்டத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி செயலாளருடைய இல்லத்திற்குள் நுழைய முற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி சமன் ஏக்கநாயக்கவின் பாணந்துறை பின்வத்தை இல்லத்துக்குள் நேற்று (30.05.2023) பகல் நுழைய முயன்ற நபரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேகநபர் வீட்டின் சுவரில் ஏறி குதித்து தோட்டத்துக்குள் நுழைந்த சந்தர்ப்பத்தில், அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரை பிடித்தபோது சந்தேகநபர் அவரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பின்வத்தை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸ் குழுவொன்று அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் வெறிச்சோடிய வீடு ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் காலி பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் எனவும், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Read More

முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர் பேலியகொடையில் வைத்து நேற்று மாலை 400 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பேலியகொடை துட்டகைமுனு பிரதேசத்தில் நேற்றையதினம் இரண்டு சுற்றிவளைப்பு தேடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, போதையூட்டும் குளிசைகள் 400 யை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர். 28 வயதான இருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Read More

ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உட்கொண்ட பின்னர், உணவு நஞ்சானதால் பாதிக்கப்பட்டு 40 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய 40 மாணவர்கள் அந்த ஹோட்டலின் உணவை உட்கொண்டதன் காரணமாகவே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது இதனையடுத்து, குறித்த ஹோட்டலை ஹிக்கடுவைப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டனர். இதன்போது ஹோட்டலின் நீர்த்தாங்கி மாசடைந்து, நீண்ட நாட்களாக சுத்திகரிக்கப்படாத நிலையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் மாதிரிகளை களுத்துறை சுகாதார பரிசோதகர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

Read More

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 10,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக பதிவாகி இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 30.6 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம், ஏப்ரலில் 21.5 சதவீதமாக குறைந்துள்ளது.

Read More

இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில்,  நேற்றைய தினம் (30.05.2023) ஒரே நாளில் மட்டும் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா – நீர்கொழும்பில் பாதசாரிகள் இருவரை லொறி மோதியதில் இருவர் மரணமடைந்துள்ளார். மூன்று வயது ஆண் குழந்தையும், அவரின் 29 வயதான தந்தையுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். கண்டி – கம்பளையில் போருந்து மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். பேருந்தை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்டவேளை அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். குருநாகல் – குளியாப்பிட்டியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி மரணமடைந்துள்ளார். 42 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். புத்தளம் – ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வான் மோதியதில் பாதசாரி ஒருவர் மரணமடைந்துள்ளார். 68 வயதான வயோதிபரே உயிரிழந்துள்ளார். கொழும்பு – வெள்ளவத்தையில் தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற…

Read More

பௌத்தம் மற்றும் பிற மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மே 26 அன்று தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் ஊடாக, குற்றப் புலனாய்வுத்துறை தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு அவர் கோரியுள்ளார். இந்த அடிப்படை உரிமைமீறல் மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸார் அதிபர், கண்காணிப்பாளர் உட்பட்டவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைது செய்வதற்கான முயற்சி, சட்டவிரோதமானது எனக்கூறியுள்ள போதகர், தனது கருத்துக்கள் நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மே 14 அன்று அவர் சிங்கப்பூருக்குச்…

Read More