அனைத்து அரச ஊழியர்களும் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை எட்டியவுடன் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் நேற்று (05) குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த உத்தரவு எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Author: admin
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க அவசியமான சிறு, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மா பாவனையை குறைப்பதற்காகவும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவே குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. சிறு, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தவிடயம் தொடர்பில், இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையும், இந்தியாவின் அமுல் பால் நிறுவனமும் இணைந்து திரவப் பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான…
தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில்.சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும், அவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதுதொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிக்கையில், நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உட்பட 27 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடஅந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைவிருத்தி அடைந்துள்ளது. அது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்குப் பகுதியை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம்காரணமாக 07 ஆம், 08 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் அவ்வப்போது அதிகரித்து வீசக் கூடிய பலமான காற்றுடன் மிகவும் கொந்தளிப்பான கடற்பரப்புகளும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அவதானமாக இருக்குமாறு…
அக்மீமன – மாதொல பிரதேசத்தில் மனைவியைக் கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தில் தாக்கி கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இக்கொலைச் சம்பவம் இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் வீட்டின் சமையலறையிலும் கணவரின் சடலம் வீட்டின் அறையொன்றிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை பதவியிலிருந்து விலகுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் “BIGGBOSS அப்பக்கடை” எனும் பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் பெயரானது இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் பெயராக இருப்பதால் திறந்த இன்றையதினமே கடையானது பிரபல்யம் அடைந்துள்ளது. இதனால் குறித்த கடையில் மக்கள் பலர் வந்து அப்பம் சாப்பிடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை லங்கா ஐஓசி நிறுவனமும் ஒட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளது.
கொழும்பு- புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றின் வழக்கு பொருள்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 8 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்ககட்டிகள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வாழைத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த வழக்கு பொருட்கள் களஞ்சியசாலைக்கு பொறுப்பானவரால் இந்த மாதம் முதலாம் திகதி மாலை வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்த பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 79.80 கிராம் நிறையுடைய தங்ககட்டி, பொரல்ல பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட104.39 கிராம் நிறையுடைய தங்ககட்டி மற்றும் உருக்கப்பட்ட 204.24 கிராம் நிறையுடைய தங்கமும் இவ்வாறு காணாமல் போயுள்ளது என உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபாய் செலவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனினும், சராசரியாக அலகொன்று 29.14 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மின்சார சபைக்கு சுமார் 423 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.