Author: admin

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் சற்று முன்னர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் வௌிநாட்டில் இருந்து மூன்றரை கிலோ தங்கம் கடத்தி வந்தபோது சுங்கத்திணைக்கள அதிகாரிகள் அதனைக் கண்டறிந்து அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து மூன்றரை கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

6 புதிய முதலீட்டு வலயங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் குறித்த முதலீட்டு வலயங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாய ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்டு முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Read More

இலங்கையில் நேற்று (22) மேலும் 03 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் 672,380 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை போக்குவரத்து சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் பாடசாலை பருவச் சீட்டுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான பருவச் சீட்டுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புதிய கட்டண அதிகரிப்புக்கு அமையவே, பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளை இல்லாது செய்வதா? அல்லது தொடர்வதா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலும், நியூ டயமண்ட் கப்பலும் ஆபத்தில் சிக்கிய போது வழங்கிய உதவிக்காக இந்திய அரசாங்கத்திற்கு 890 மில்லியன் இந்திய ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலம் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். “முதன்மையாக, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க எங்கள் கோரிக்கையின் பேரில் பணியாற்றின. சுற்றுச்சூழல் பாதிப்பு மேலும் தீவிரமடையாமல் தடுக்க. பங்களிப்பு குறித்து. இந்திய கடற்படை, எங்களிடம் 400 மில்லியன் இந்திய ரூபாய் கேட்டுள்ளனர். இலங்கை மதிப்பில் 1,400 மில்லியன்கள். இது வதந்திகள் அல்ல. அனுப்பிய ஆவணமும் கோப்பில் உள்ளது.…

Read More

அவசர நிலையை கையாள்வதற்கு தேவையான வைத்தியர்கள் அடங்கிய சுகாதார குழுவொன்று பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றா நோய் பிரிவும், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் இணைந்து பணிகளை முன்னெடுத்துள்ளதாக அந்த பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார். “தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவாக, நாடளாவிய ரீதியில் உள்ள 73 வைத்தியசாலைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் பதிவாகி வருகின்றது. ஐ.டி.எச் வைத்தியசாலை அல்லது தொற்று நோய்த் திணைக்களம், தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு ஒவ்வொரு நாளும் அவதானிக்கப்படுகின்றது. தற்போது, ​​400 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் முழு நாட்டையும் உள்ளடக்கி தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் தொற்று நோய்கள் நிறுவகம் ஆகியவற்றினால் பயிற்சியளிக்கப்பட்டு…

Read More

தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் ஆய்வுகூடம் பராமரிப்பு இன்மையால் ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இதய நோய்களுக்கு தேவையான சுமார் ஆயிரம் பரிசோதனைகள் நடத்த முடியவில்லை என அங்குள்ள வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கான திகதி அறிவிக்கப்படும் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். இதேவேளை, இலகுவாக தரமுயர்த்தக்கூடிய தேசிய வைத்தியசாலையில் உள்ள உயிர்காக்கும் இயந்திரம் பழுதடைந்து சுமார் ஒரு வருட காலமாக திருத்தப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பாதுகாப்பு இல்லாமல் அந்தப் பணிகளை வைத்தியசாலை ஊழியர்கள் மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாகக் கூறி, நுண்ணுயிரிகளை கையால் கழுவ உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், சிறுவர் வைத்தியசாலையில் உள்ள சிறு குழந்தைகளுக்கான சிறுநீரகச் செயற்பாடுகளை அளவிடும் இயந்திரம் சுமார் இரண்டு மாதங்களாக செயலிழந்துள்ளதாக சுகாதார வல்லுனர்கள் அறிஞர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கண்டி வைத்தியசாலையின் புற்றுநோய்…

Read More

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாழடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் அவசர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மாகாண கல்வி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், பாடசாலைகளின் பெறுபேறுகளை தொடர்ச்சியாக ஆராயும் முறைமை ஒன்றை அமைக்கவும் அமைச்சர் வலியுறுத்தினார். நேற்றுமுந்தினம் (21) நடைபெற்ற மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேசங்களின் கல்விக் கட்டமைப்புக் குழுக்களில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: தற்போது பாடசாலைகளில் அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் ஏராளம். எங்களுக்கு பொருளாதார பலம் அதிகம் இல்லை. எனவே இவற்றை கட்டி முடிக்க ஏற்பாடு இல்லை. இவை முன்பு தொடங்கப்பட்ட கட்டுமானங்கள். நான் மாகாணசபையில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட “எங்கள் பாடசாலையை – நம் கைகளால் காப்பாற்றுவோம்” என்ற செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்.

Read More

அண்மையில் சீன அரசாங்கத்திடம் இருந்து இலவசமாக கிடைக்கப் பெற்ற மண்ணெண்ணெய், மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு (23) காலை 8 மணியளவில் பாணந்துறை மீன்படி வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன் ஆகியோரின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது, மண்ணெண்ணெய் எரிபொருளைப் பயன்படுத்தும் 26,000 படகுகளுக்கு 150 லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Read More