மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேலும், 180 மின் அலகுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் பொதுநோக்கு பிரிவின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, 10 ஓகஸ்ட் 2022 முதல் அமுலுக்கு வரும் வகையில், பொருந்தக்கூடிய கட்டணமாக ஒரு மின் அலகுக்கு 32/- ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளதாகவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
Author: admin
நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாத் நபி தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை 10 ம் திகதி வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை போயா தினம் என்பதால் இந்த விசேட விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது….
கொழும்பு, உலக வர்த்தக மையத்தில், ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்தி, பெருந்தொகை பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன், தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என்று ராஜபக்ச தரப்பினர் அறிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. திலினி பிரியமாலிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் தொடர்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த செய்தியும் அதனுடன் பிரசுரிக்கப்பட்ட புகைப்படங்களும் ஆதாரமற்றவை என்று ராஜபக்ச அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்ஷ கலந்து கொண்ட இரண்டு நிகழ்வுகளில் பிரியமாலியும் பங்கேற்றமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ராஜபக்ச அலுவலகம், குறித்த நிகழ்வுகளில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமையவே, ஷிரந்தி ராஜபக்ஷ அந்த நிகழ்வுகளில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில் 226 மில்லியன் ரூபாய், 60,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை மோசடி செய்தார்…
இந்தாண்டு இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 30,000இற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் ஜீ.எஸ்.யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். அதில் பெரும்பலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் இதுவரையில் அதிக எண்ணிக்கையிலானோர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்
வருடா வருடம் கோலாகலமாக நடாத்தப்பட்டு வரும் நபிகளார் நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெரும் மாபெரும் மீலாதுன் நபி விழாக் கொண்டாட்டம் இவ்வருடம் Dr. அஷ்ஷெய்க் அஷ் செயித் மௌலானா சிஸ்தி ஸல்லமல்லாஹு வஜியஹு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. வருடாந்த மீலாதுன் நபி விழா நடைப்பயணம் – பள்ளிவாசல் துறை – அல் ஹதாக்கியா குர்ஆன் மதரஸாவில் இருந்து இடம்பெற்றது…
வலஸ்முல்ல வராபிட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தம்கல்லென ரஜமஹா விகாரையின் எசல பெரஹெர திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (07) கதிர்காமம் தேவாலய பெரஹெர வீதி உலா இடம்பெற்றது. இதன்போது, குறித்த ஊர்வலத்தில் சென்ற யானை ஒன்று குழப்பம் விளைவித்தமையால் பதற்றம் ஏற்பட்டது. ஊர்வலத்தில் பயணித்த காவடி நடனக் குழுவினர் நுளம்பு விரட்டி மருந்தை தெளிக்கும் போது, அங்கு தீ ஏற்பட்டதன் காரணமாக யானை இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தியது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏற்பாட்டுக் குழுவினர் யானையை கட்டுப்படுத்தியதையடுத்து ஊர்வலம் வெற்றிகரமாக வீதிகளில் சுற்றிவந்து நிறைவுபெற்றதாக ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – அரியாலையில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த போல் தனஞ்சயன் (வயது -78) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். வியாபார நோக்கமாக துவிச்சக்கர வண்டியில் அரியாலையில் ஏவி வீதியில் சென்ற பொழுது பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றது. வயோதிபருக்கு ஏற்கனவே ஒரு கண் பார்வையில்லாமலும் காது கேட்காத நிலையிலும் கடவையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 50 வீதமான பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையும் கால்நடை தீவன தட்டுப்பாடும் இதற்கு முக்கிய காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி – கர்ப்பலா பிரதேசத்தில் வீதியால் சென்ற 14 வயது சிறுவன் மீது, 20 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவ தினமான நேற்று மாலை சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். இதன் போது வீதியில் நின்ற இளைஞன், சிறுவனைப் பார்த்து “என்னடா என்னை பார்க்கின்றாய்” என கேட்டுக் கொண்டு சிறுவன் மீது கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்டார். இதனையடுத்து சிறுவன் கத்தியதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்ததுடன், கத்திகுத்து தாக்குதலை நடத்திய இளைஞனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்ததுடன், இவர் போதைப்பொருள் பாவிப்பதாகவும் இதனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை…
வல்வெட்டித்துறையில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி, இரண்டு பேர் பருத்தித்துறையில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் நேற்று மாலை திருடப்பட்டது. சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், அதே மோட்டார் சைக்கிளினை பயன்படுத்தி பயணித்த இருவர், நேற்று மாலை பருத்தித்துறை திக்கம் பகுதியில் வீதியில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர். அத்துடன், வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை ஆகிய இருவேறு இடங்களில் வழிப்பறி கொள்ளைக்கு முற்பட்ட போதும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சாதூரியமாகச் செயற்பட்டதால் கொள்ளை சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.