அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர் இனவெறி காரணமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் உடலில் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் உள்ளதாக, அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சிட்னியில் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் 28 வயதான இந்தியர் சுபம் கார்க், கடந்த 6ஆம் திகதி தாக்குதலுக்கு இலக்காகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக்ராவில் வசிக்கும் அவரது பெற்றோர், இது இனவெறித்தாக்குதல் எனவும், கடந்த ஏழு நாட்களாக விசாவுக்காக போராடி வருவதாகவும் கூறினர்.
Author: admin
பப்புவா நியூ கினியா அருகே உள்ள நியூ அயர்லாந்து தீவு பிராந்தியத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது. நில நடுக்கம் 100 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதன் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் மோசமான பாதிப்பு உருவாகுமென பெற்றோலியக் கூட்டுத்தா பனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். நாட்டில் ஒருநாளில் 450 முதல் 500 மெற்றிக் தொன் வரை மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால், நாளொன்றுக்கு 50 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை வடக்குத் தெருவை சேர்ந்த மணிமுத்துவின் மனைவியான 88 வயதான அன்னம், இவர்களது மகன் கண்ணன் (55). அன்னம் தனது சகோதரர் மகளான கவிதா என்பவரை கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தனது சொந்த அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்ததால் கவிதா மீது அன்னம் பாசமாக இருந்து வந்துள்ளார். சமீப காலமாக கவிதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு ள்ளது. இதனால் அன்னம் மனமுடைந்து காணப்பட்டார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அன்னத்தின் கனவில் அவர் இறந்தால் உனது மருமகள் உடல் நலம் சீராகும் என அசரீரி தோன்றியதாக தனது மகன் கண்ணனிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அன்னம் நேற்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கடையம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது…
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் நேற்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாகச் சென்று வாகனமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் தப்பிச்சென்றுள்ள அதேவேளை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென்பதுடன் அதிகவேகத்துடன் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 18வயதுடையவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான சுவாச நோய்களுக்கான மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மருந்துகள் தேவையற்றதாகி விட்டதால், குழந்தைகளின் சுவாச நோய்களுக்காக வாங்கப்பட்ட சுவாச மருந்துகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பக்வெல தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கை கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் பாவிக்கும் பழக்கம் ஏற்பட்டதென்றும் அதன் காரணமாக அனைத்து சுவாச நோய்களும் குறைந்துவிட்டன என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதி மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் சிறிய ரக வாகனங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதியின் இரு புறங்களும் நீரில் மூழ்கியுள்ளமையினால், வாகன போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபருக்கு வழங்குவதற்காக ஐஸ் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்குப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரட்டடுவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயது பெண் என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டு, இன்று அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ள நிலையில், அவரை பார்க்கச் சென்ற குறித்த பெண் தீப்பெட்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்துக் கொண்டுச் சென்ற ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியதோடு குறித்த பெண்ணையும் கைது செய்தனர். இந்நிலையில் குறித்த பெண்ணையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் இன்று(14) காலை 6.30 மணிக்கு அறிவித்துள்ளது களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகிறது. இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலப்பாத்த, அயகம, கிரியெல்ல, பெல்மெடுல்ல, நிவித்திகல, கலவான ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு ஆபத்து காணப்படுகின்றது.
தேசத்தை ஸ்திரப்படுத்துவதற்கான தேசிய கொள்கை கட்டமைப்பை வகுத்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எனவே, எதிர்வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் நடத்தப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘இது தேர்தலை நடத்துவதற்கான நேரம் அல்ல என்றும் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பவர்கள் நாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள் என்றும் அவர் சாடியுள்ளார். தேசத்தை சீர்குலைக்க நினைக்கும் இந்த சக்திகளின் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்படும் என்பதோடு, அவர்கள் விரைவில் மூலையில் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ‘உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 8000 என்ற நிலையில் இருந்து 4000 ஆகக் குறைப்பதும், ஆட்சியின் அனைத்து அடுக்குகளிலும் உள்ள விருப்பு வாக்கு முறைமையை ஒழிப்பதும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விவேகமுள்ள எவரும் இதை எதிர்ப்பார்கள் என தான் எண்ணுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.