பங்கீ ஜம்பிங் என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டினை அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் தாமரை கோபுரத்தில் காட்சிப்படுத்துவதற்காக தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் மற்றும் “பன்கீ” நிறுவனம் நேற்று (07) ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இந்த சாகச விளையாட்டில் சுமார் 350 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே குதித்து விளையாடுவது வெளிநாட்டினரால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டாகும். ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் சுமார் 100 முறை கோபுரத்தில் இருந்து கீழே குதிக்கும் நிகழ்வுகளை காட்சிப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும், இரவு வேளைகளில் 40 முறை இந்த சாகச நிகழ்வை காட்சிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தாமரை கோபுரத்தின் முகாமையாளர் தெரிவித்தார். மேலும், இந்த விடயத்திற்காக சுமார் 50,000 பேர் கொண்ட குழுவொன்று நாட்டை வந்தடையவுள்ளதாகவும், இது இலங்கையின் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Author: admin
ரஷ்யாவிற்கும் கொழும்புவிற்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து வரும் பார்வையாளர்கள் மீண்டும் தீவு நாட்டிற்கான பயணத்தைத் தொடர்வதை இலங்கை காணும். ரஷ்யாவின் கொடி கேரியர், ஏரோஃப்ளோட், அக்டோபர் 9, ஞாயிற்றுக்கிழமை முதல் வாரத்திற்கு இரண்டு விமானங்களை இயக்கும். பிராந்திய விமான நிறுவனமான அஸூர் ஏர் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்திற்கு நான்கு பட்டய விமானங்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் பதிவில், ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என்றும், இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகம் இது தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய கடன் வழங்குவதாகவும் பகிர்ந்து கொண்டார்.
செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் கடந்த இருபது நாட்களாக தாமரை கோபுர முகாமைத்துவம் 72.3 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். தாமரை கோபுரத்தில் இருந்து பங்கீ ஜம்பிங் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பயணச்சீட்டுகள், நிகழ்வுகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் மூலம் வருமானம் பெறுவதாக தெரிவித்தார். இதுவரை 127,300 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்
இவ்வருடம் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரையில் 4,96,430 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது ஓரளவு முன்னேற்றம் எனவும், குறித்த சுற்றுலாப் பயணிகளின் மூலம் 893 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் நாடு பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
ஆறு மாத கைக்குழந்தையுடன் 5 இலங்கையர்கள் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். தனுஷ்கோடி ஐந்தாம் மணல் திட்டில் கடந்த இரண்டு நாட்களாக தவித்துக்கொண்டிருந்த நிலையில், தமிழக கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். மன்னாரை சேர்ந்த ஒருவரே தனது குடும்பத்துடன் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இவர்கள் அனைவரும் மண்டபம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 174 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
148ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலகத்தால் இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இரத்ததான முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, அதிகளவான அஞ்சலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தன்னார்வரீதியாக இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வடமாகாண பிரதி அஞ்லதிபதி நாயகம் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாணம் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அனுராத பெர்ணாண்டோ, யாழ். பிரதம அஞ்சல் அதிபர் இ.மணிவண்ணன், தபாலதிபர்கள், வடமாகாண சுங்க திணைக்கள அதிகாரிகள், அஞ்சலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எருமை மாடுகள் கூட்டத்தின் மீது அக்டோபர் 6ஆம் தேதி மோதிய ‘வந்தே பாரத் ரயில்’ ஒன்றின் முகப்பு பகுதி பகுதியளவு சேதமடைந்துள்ளது. இந்தியாவின் அதிகவேக ரயில்களில் குறிப்பித்தக்க வந்தே பாரத் அதி நவீன வசதிகளை கொண்டது. இந்த ரயில் மும்பை மற்றும் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
சதொச விற்பனையகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, உருளைக்கிழங்கு, வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, பருப்பு, கடலை, சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு உருளைக்கிழங்கு 395 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 275 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு 398 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி கிலோ ஒன்று 174 ரூபாவிற்கும் சம்பா அரிசி கிலோ ஒன்று 220 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் கடலை 650 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வேளையில் நாட்டை மீட்க எவரும் முன்வராத நிலையில் தான் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஆனால் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை, அவரை குற்றவாளிகள் ஒன்றாக சேர்ந்து தெரிவு செய்தார்கள் என்பதே எமது நிலைப்பாடாகும். ராஜபக்ஷ அணி அரசியல் ரீதியாக முடக்கப்பட்ட நிலையில், மக்கள் எதிர்ப்பு பலமடைந்த நிலையிலும், ஊழல் குற்றங்களுக்கு எதிராக பலமான நிலைப்பாடொன்று உருவாக்கிக்கொண்டிருந்த நிலையில் அவற்றில் இருந்து தம்மை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ராஜபக்ஷ கூட்டணியால் ரணிலை தெரிவு செய்தனர் என்றார். நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்க எம்மாலும் நாட்டை பொறுப்பேற்க முடியும், ஆனால் அது மக்கள் ஆணையுடன் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். இலங்கைக்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு இருப்பதாக ஜனாதிபதி கூறினாலும், இலங்கைக்கான ஒத்துழைப்பு எவ்வாறானது என்பதை ஜெனிவாவில் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே சர்வதேசம் எமக்கு கூறும் செய்தி என்ன என்பதை இப்போதாவது கருத்தில் கொள்ளவேண்டும்…