மக்கள் ஆணையைப் பெற்றே தேர்தல் முறைமை உள்ளிட்ட அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை குறைத்தல் உள்ளிட்ட தேர்தல் சட்டச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாகவே கருதப்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே, தேர்தல் ஒன்றை நடத்தி புதிதாக அமையும் அரசாங்கமே அந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Author: admin
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி, பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான விமான போக்குவரத்தினை எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். குறித்த விமான சேவை தொடர்பில் இந்திய விமான நிறுவனத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில், விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைபொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (11) பூந்தோட்டம் கண்ணன்கோட்டம் பகுதியில் மடுகந்த விஷேட அதிரடி படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைபொருளை தனது உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து 3கிராம் 770மில்லிக்கிராம் ஹெரோயின் போதைபொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 32 வயதுடைய மகாரம்பைக்குளம் பகுதியை சேர்ந்தவரை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
போராட்டங்களில் குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை , பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் பிள்ளைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என பெற்றோர் மற்றும் முதியவர்களிடம் தலைவர் உதயகுமார அமரசிங்க கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் போராட்டங்களுக்கு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட பல சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளமை அதிகாரசபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குழந்தைகளை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதால், தாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் மற்றும் ஒரு சிறப்பு வழக்காக அதை விசாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
வெனிசூலாவில் பெய்துவரம் தொடர் மழை காரணமாக தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள லொஸ் டெஜீரியாஸ் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், வீடுகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், மேலும் 56 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. லொஸ் டெஜீரியாஸில் 300க்கும் மேற்பட்ட வீடுகள், 15 வணிக நிறுவனங்கள் மற்றும் ஒரு பாடசாலை முற்றிலும் அழிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிய வீடுகள் வழங்கப்படும் என்று கூறிய அவர், அந்த நகரம் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வரும் என்றும், யாரும்…
கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான கட்டணத்தை இதுவரை செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 10 ஆம் திகதி நாட்டை அண்மித்த இந்த கப்பலில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டு வரப்பட்டது. அதற்கமைய, குறித்த கப்பலானது நாட்டை அண்மித்து 32 நாட்களாகின்றன. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எக்ஸ்ரோ எனப்படும் இந்த மசகு எண்ணெய் ஊடாக டீசல் மற்றும் பெட்ரோலை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் தற்போது 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 30 இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தனர் என்றும் ஆனால் அந்த தொகை தற்போது 96 இலட்சமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைச் சமூகத்தில் வாழும் சுமார் 42 வீதமான மக்கள் தற்போது வறுமையில் வாடுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் 26 வீதமான மக்கள் வறுமையில் வாடுவதாக அண்மையில் உலக வங்கி ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது என்றும் ஆனால் இன்னும் பலர் உண்மையில் வறுமையில் வாழ்கிறார்கள் என்பது ஆய்வில் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைபெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து தேவையான பாதுகாப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
பாடசாலை கற்றல் செயற்பாடுகளின் பின்னர் மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்தில் உள்ள 07 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார். குறித்த மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக பொழுதுபோக்கு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு இராணுவ ரீதியாக மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண் கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதி செய்யும் நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தும் போது அரச பொறிமுறையில் ஏற்பட்ட வீழ்ச்சிக் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் உருவாகுமாயின் அதனை சரிசெய்வதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் தலையிடுவதற்குத் தயார் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கூடாக விவசாயத்தை நவீனமயப்படுத்தல் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை இயற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி வலியுறுத்தினார். “எந்தவொரு பிரஜையும் உணவின்றி பசியால் வாடக்கூடாது” என்ற தொனிப்பொருளில் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்கு கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையத்தை பலப்படுத்தும் பல் துறைகளின் ஒன்றிணைந்த பொறிமுறையொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின்பேரில்…