சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, குறித்த மின்சார கார்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் ஒன்று, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு இராஜியத்தின் துபாய் நகரில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு மூலைகளிலும் எட்டு மின்சார இறக்கைகள் இந்த காரில் இணைக்கப்பட்டு உள்ளன. அவை இந்த காரை மேலே எழும்ப செய்வதற்கும், தரையில் கீழே இறங்குவதற்கும் உதவி புரியும். மேலும் குறைந்த உயரத்தில் பறக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஒன்றரை மணிநேரம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆளில்லாமல் கார் இயக்கப்பட்டுள்ளது. இதுபற்றி எக்ஸ்பெங் நிறுவனத்தின் பொது…
Author: admin
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்ட நடவடிக்கைகளில், வரி திருத்தமும் ஒன்று என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சமீபத்திய வரித் திருத்தம் பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் இருப்பதாகவும் இது நாடாளுமன்றில் கூட விவாதத்திற்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வரி திருத்தங்கள் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் அமுல்படுத்தப்பட்டால், அது பேரழிவு தரும் சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உத்தேச சர்வாதிகார வரித் திருத்தங்கள் மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் இவை ஓரிரு வாரங்களில் அல்லாமல் படிப்படியாக படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். இதேவேளை உலக வங்கி, ஆசிய வங்கி மற்றும் ஐரிஷ் வங்கிகள் வங்கி ஆகியவற்றின் கதவுகளும் இலங்கைக்கு மூடப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ,ரணித்தா ஞானராஜா,சுரங்க பண்டார,சுவாதிகா ரவிச்சந்திரன் ஆகியோர் மன்றில் தோன்றினர். இதனையடுத்து சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் அவர்களினால் சந்தேக நபர்கள் நால்வர் சார்பான பிணை விண்ணப்பம் திறந்த மேல் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அரசதரப்பு சட்டத்தரணியினால் அரச தரப்பு வாதம் மன்றில் முன்வைக்கப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன சந்தேக நபர்கள் நால்வருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணையினை வழங்கினார். பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத…
போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன என்று கூறிய அவர், போரின் போது மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போலவே பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த செயற்பாட்டை மக்கள் நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா சுந்தரபுரம் அ. த. க பாடசாலைக்கு முன்பாக இன்று (12) பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். வவுனியா சுந்தரபுரத்தில் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்துக்கு நீதி கோரியும், அதிகரித்திருக்கும் போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரியுமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (07.10) பாடசாலை ஆசிரியை ஒருவர், பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் விபத்தினை ஏற்படுத்தியிருந்தார். குறித்த விபத்து தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸாரினால் இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும், சுந்தரபுரம் பகுதியில் அதிகரித்திருக்கும் போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரியும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது பேனை பிடிக்கும் கையில் போதை எதற்கு, அநீதி வாழும் காலம் இதுவா?, சட்டத்தை காப்பவனே குற்றத்திற்கு துணை போகலாமா?, நாளைய தலைமுறைக்கு போதைவஸ்து ஏன் போன்ற பதாதைகளை ஏந்தியவாறான நீதிக்கான போராட்டத்தில் முன்னாள் வடமாகாண…
நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டை விட்டு மூத்த மற்றும் இளம் மருத்துவர்கள் வெளியேறுவதால் சுகாதாரத்துறையில் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சில வைத்தியசாலைகள் மூடப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறானதொரு நிலைமை திஸ்ஸமஹாராம போன்ற வைத்தியசாலையில் ஏற்பட்டால் நோயாளர்கள் கராப்பிட்டிய போன்ற வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நோயாளர்களுக்கு அசௌகரியமான நிலையே காணப்படுவதாகவும் அந்த சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். மிகக் குறைந்த வசதிகளின் கீழ் சுகாதார சேவைகளை வழங்கும் இந்த மருத்துவர்களை இத்துறையில் தக்கவைக்க அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைத்தியர்களின் தொழில் அபிவிருத்தி வாய்ப்புகள் விஸ்தரிக்கப்பட வேண்டுமெனவும் அதற்காக அரசாங்கம் தலையிட வேண்டுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
யாழ்.தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்தி தருமாறு குறித்த இளைஞனின் தாயார் பொலிஸாரிடம் மன்றாட்டமாக கோரியுள்ளார். யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹேரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனின் தாயார் இவரை திருத்தி தருமாறு பொலிசாரிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளார். 28 வயதான குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளுடன் நீண்ட காலமாக தொடர்பை பேணி வந்துள்ளதோடு இதனை பிரதான தொழிலாக கொண்டு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைக்கு அடிமையான 15 வயதான தனது மகனை ”…
முறைகேடுகள் காரணமாக முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ள லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் முறைகேடு உள்ளிட்ட பல குளறுபடிகள் நடப்பதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, நுகர்வோர் அதிகாரசபை, எடை அளவீடுகள் திணைக்களம் இணைந்து கடந்த 5ஆம் திகதி விசாரணைகளை மேற்கொண்டு சீல் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா வரையான வீதத்தில் குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் தங்கத்தின் விலையானது 15 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரையான வீதத்தில் குறைந்துள்ளது இன்றைய தினம் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலையானது ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாவில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபா வரையான வீதத்தில் குறைந்து என செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும் கொள்வனவு செய்ய தங்கம் இல்லாத நிலைமை இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். செட்டியார் தெரு தங்க விற்பனை சந்தையில் கடந்த தினங்களில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ஒரு…