Author: admin

இலங்கை மத்திய வங்கி இன்று 15.05.2023 வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.63 சதம் மற்றும் விற்பனை பெறுமதி 320.97 சதம். கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304.84, விற்பனை பெறுமதி 318. சம்பத் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 மற்றும் விற்பனை பெறுமதி 321. மக்கள் வங்கியில் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373.28 சதம் மற்றும் விற்பனை பெறுமதி 396.70 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326.60 சதம் மற்றும் விற்பனை பெறுமதி 347.04 சதமாகவும் பதிவாகியுள்ளது. கடந்த வாரத்துடன் (மே 12) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது.

Read More

லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. 06 ரூபாவால் குறைக்கப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி இன்று (15) முதல் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், லங்கா சதொச பால் மாவின் 400 கிராம் பொதியின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1080 ரூபாவாகும்.

Read More

5000 முச்சக்கர வண்டிகளை – 5 வருடங்களுக்குள் மின்சார வாகனங்கள் அல்லது இலத்திரனியல் இயக்கத்தில் – மாற்றும் திட்டம் நேற்று (11)ஆம் திகதி பிலியந்தலையில் உள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கைக்கு நிலைபேறுமிக்கதும் நெகிழ்ச்சியாதுமான எதிா் காலத்துக்காக ஏனைய உலக நாடுகளைப் போல இலங்கையும் பசுமையானதும் துாய்மையானதுமான அனுகுமுறைகளை கடைபிடிப்பதற்கான செயற்பாடுகளை முன்நெடுத்து வருகின்றது. நாட்டில் நிலவும் சமூக பொருளாதார நெடுக்கடிகளுக்கு மத்தியில் நிலைபேறு மிக்க இயக்க அனுகுமுறைகளை பின்பற்றுவதற்கு தம்மை மாற்றிக் கொள்வதை பசுமை மீட்பு செயற்பாட்டினை அடையாளம் காணப்பட்டது. இலங்கைக்குள் குறைந்தளவு கார்பன் வெளியீடு அவைகளுடன் உள்ளடக்கு தன்மை மற்றும சமத்துவமான அபிவிருத்திக்கான பாதை சீராக்கப்பட்டு மேம்படுத்துவதற்காக ஒரு வழிமுறை பெற்றோல் முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றுவதற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டமானது முன்னோடி கட்டம் செயல்விள்க்க கட்டம் மற்றும் வரைவுபடுத்தப்பட்ட கட்டம் என மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது.…

Read More

இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர வெளியிட்டுள்ளார். பல்வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணங்கள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் குறைக்கப்படும். எரிபொருள் விலை இரண்டு கட்டணங்களாக குறைக்கப்படும். எரிவாயு விலைகளும் மேலும் குறைவடையும் என சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் கொடுப்பனவு வழங்கப்படும். பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 3000, 5000, 8000 மற்றும் 15000 ரூபா என்ற அடிப்படையில் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Read More

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்தவேண்டும் என பிரபல சிங்கள நடிகை உபேக்‌ஷா சுவர்ணமாலி குறிப்பிட்டுள்ளார். யூ டியூப் செனல் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றமையை தடுக்க நாட்டில் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமா என கேட்கப்பட்டமைக்கு பதில் அளித்த அவர் , தான் குவைத்தில் வளர்ந்த பெண் என்பதனால் அங்கு பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு தொடர்பில் தானும் தனது தாயும் நன்கு அறிந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குற்றம் 200 % வீதம் நிரூபிக்கப்பட்டால் அரபு நாடுகளில் போன்று இதுபோன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதாக அதிகாரத்திற்கு வந்த மைத்திரிபால சிரிசேன கடைசியில் மரண தண்டனை கைதியை விடுதலை செய்துவிட்டு வீடு சென்றார் என அவர் குறிப்பிட்டார்.

Read More

# இலங்கையில் சம்பவம் 33 வருடங்களுக்கு முன்னர் தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை கொலை செய்ததாக நபர் ஒருவர் ஊருபொக்க காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது வலதுகுறைந்துள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கமைய, அவரது மகன் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தததுடன், தனது தந்தை கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கழிவறை குழியையும் அவர் காவல்துறை அதிகாரிகளிடம் அடையாளம் காட்டியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதனையடுத்து, ஊருபொக்க காவல் நிலையத்தினர், நீதிமன்றில் அறிவித்துள்ளதோடு, உடல் எச்சங்கள் இன்று (15) நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பணத்தில் படித்து வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்ற போதிலும் எதிர்காலத்தில் அது சாத்தியப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை சனத்தொகையுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக இருப்பதாக அவர் கூறினார். அதன்படி, அந்த நிபந்தனைகளை கருத்தில் கொண்டு இளைஞர்களை இலக்கு வைத்து தற்போது தயாரிக்கப்படும் வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றார். அகுனகொலபல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

வேலையற்ற இளைஞர்கள், விவசாய நடவடிக்கைகளுக்காக மானிய வட்டி வீதத்துடன் கடன்களை பெற்றுக்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக அரச வங்கிகளில் கடன் பெற முடியாத விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இளைஞர்களிடையே இதுபோன்ற ஆர்வங்களை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும், ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஆர்வமுள்ளவர்கள் சொந்தமாக பண்ணை அல்லது கால்நடை வளர்ப்பை அனுமதிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தினது ஒரு பகுதியாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 50 இளைஞர்களுக்கு, 6.5% என்ற வட்டி வீதத்தில் 10 இலட்சம் மற்றும் 20 இலட்சம் ரூபாவை வழங்குவதுடன், அரச வங்கிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Read More

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை நாட்டில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் சார்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. ஜனக ரத்நாயக்கவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து, குறிப்பாக அண்மைய மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பாக இந்த அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை வெளியேற்றுவதற்கான பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேரணைக்கு ஆதரவளிக்க விரும்பவில்லை என உறுதியாகக் கூறியுள்ளது, இது பிரச்சினையில் சாத்தியமான அரசியல் பிளவைக் குறிக்கிறது. ஜனக ரத்நாயக்கவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் சில காலமாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. சமீபத்திய மின் கட்டண உயர்வு…

Read More