Author: admin

பொதுமக்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 டொலர்களில் இருந்து 10,000 டொலர்களாகக் குறைக்கப்பட்டுளளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அவ்வாறு பணமாக வைத்திருக்கும் டொலர்களை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்புச்செய்வதற்கோ அல்லது ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச்செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இருவார கால அவகாசம் இருவாரத்தின் பின்னர் வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படுவதுடன், அது கைகளில் வைத்திருக்கும் தொகையைவிடவும் அதிகமானதாக அமையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என ரணில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கைது செய்யப்பட்ட மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்ணான்டோ மற்றும் டேன் பிரியசாத் உட்பட 6 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்கள் ஒவ்வொன்றும் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Read More

உரம் தொடர்பில் தீர்மானம் எடுக்க பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு பல விஷேட தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் இரசாயன உர மூட்டை ஒன்றினை 10,000 ரூபாவிற்கு விவசாயிக்கு வழங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த குழு குறிப்பிட்டுள்ளது.. விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்களை சலுகை அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க இதனை தெரிவித்தார். சுகாதார அமைச்சகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் சுகாதார ஊழியர்களுக்கான சம்பளம் குறைப்புக்கு தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே அவ்வாறான சம்பள குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுமாயின் எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னர் எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. அதுவரை சுகாதார அமைச்சுக்கு கால அவகாசம் அளித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

எதிர்வரும் காலங்களில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதோடு, நாளாந்தம் உணவைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும் நெருக்கடி ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், உலகத்தில் ஏற்படவுள்ள பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகி வருவதாக அமெரிக்காவின் நிதியமைச்சர் ஜனட் எலன் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலகின் பல நாடுகளில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாகவும் அதில் இலங்கையும் உள்ளடங்குவதாக தெரிவித்தார். நாட்டின் பல பகுதிகளில் உணவு கிடைக்காமல் போவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். எனவே, உணவுத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, ஜூன் நடுப்பகுதி வரை எரிபொருள் இருப்பதாகவும், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த இதர அரச பணியாளர்கள் சேவைக்கு வருவது தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Read More

இன்று முதல் நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை லிட்ரோ நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அதேநேரம், 3, 800 மெட்ரிக் டன் அளவிலான எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் 2, 800 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, அதிலிருந்து சமையல் எரிவாயு தரையிறக்கப்பட்டதுடன், தாங்கி ஊர்திகள் ஊடாக கெரவலப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் திட்டமிட்டப்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த எரிவாயு விநியோகம் தடைப்பட்டிருந்தது. அதேவேளை நேற்றைய தினம் 8, 000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

Read More