Author: admin

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனூடாக நிமிடத்திற்கு 19,200 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, தெதுரு ஓயாவுக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் நீர்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

சீரற்ற காலநிலையினால், பேராதனை-தவுலகல பிரதேசத்தில் மதிலொன்று இடிந்து வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

முல்லைத்தீவு, வசந்தநகர் பகுதியில் செயலிழந்த நிலையில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரி மற்றம் 57 ஆவது படைப்பிரிவு கட்டளை அதிகாரி ஊடாக பொலிஸாருக்கு இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி வசந்த நகர் பகுதியில் குறித்த அகழ்வுப்பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, செயலிழந்த நிலையில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

Read More

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் பதவிக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இராஜாங்க அமைச்சுக்கென தனியாக நிதி ஒதுக்கப்படாது எனவும் குறிப்பிடப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் தனது அமைச்சரவை அமைச்சருக்கு சொந்தமான அமைச்சின் கீழ் பணியாற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, நிரந்தர அமைச்சரவை நியமனத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவினால் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள சிலருக்கு வெளியிடப்பட்டுள்ள எதிர்ப்பே இந்த அமைச்சரவை நியமனத்தில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தற்போதைய 18 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் இல்லை எனவும், புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே அமைச்சரவையில் இணைவார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும், இலங்கையின் வெளிவிகார கொள்கை பெரியளவில் மாற்றப்படவில்லை. மாற்றங்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையை பாதுகாக்குமா என்ற கேள்வி எழுகின்றது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. அன்றைய தினத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையும் சமர்பிக்கப்படவுள்ளது. இதன் போது இலங்கை இதுவரை என்ன செய்தது என்பது தொடர்பில் ஆராயப்படும். காணாமல்போனோருக்கான அலுவலகத்தை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. கோட்டாபய அரசாங்கம் ஜெனீவா தீர்மானங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தது. தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். நாடு பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள போது தங்களுக்கு எதிரான தீர்மானம் பாரதூரமான…

Read More

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஜெனரேட்டர் தற்போது கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் வருடாந்தம் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதாலும் மின்வெட்டு காலம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Read More

தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக நேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில், 2ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் தொடரும் நிலையில், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். QR முறையின் கீழ் முச்சக்கரவண்டிக்கு வாராந்தம் 5 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுவதுடன், அது போதாது என தொழில்சார்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் எரிசக்தி அமைச்சு இதுவரையில் எரிபொருள் ஒதுக்கீட்டை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Read More

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். அதற்கமைய, இன்றும் நாளையும் ‘இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் போஷாக்கின்மை நிலைமைகள்’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இன்று மு.ப 10.30 மணி முதல் 10.45 மணி வரை சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன. மேலும் 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

Read More

ஐக்கிய தேசிய கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைவமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்றது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் பிற்பகல் 2மணிக்கு ஆரம்பமாக இருக்கும் கட்சியின் ஆண்டு நிறைவு விழா “இணைந்து கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. இதில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். மேலும் 1948ஆம் ஆண்டு நாட்டை கட்டியெழுப்ப டி.எஸ். சேனாநாயக்க அன்று அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்ததுபாேன்று எமது கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றாக பயணிக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 100க்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை…

Read More