Author: admin

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த இளைஞனே கழுத்தில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது. பிடியாணை உத்தரவை நிறைவேற்றும் முகமாக யாழ்ப்பாண பொலிஸாரினால் இளைஞன் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த இளைஞன் தனது உடமையில் இருந்த பிளேட்டினை எடுத்து, தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார் என கூறி பொலிஸாரினால் யாழ். போதனா வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்-

Read More

இலங்கையின் மிகப்பெரிய சிறுவர் வைத்தியசாலையான லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்து வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இந்நிலையில் நலம் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகளை கோருகின்றது. இது தொடர்பில் வைத்தியாலை வெளியிட்டுள்ள கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் மிகப்பெரிய மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை இதுவாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சை அளித்து நிர்வகிக்கிறது. இது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆண்டுதோறும் நிர்வகிக்கிறது மற்றும் ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கையாளுகிறது. உங்களால் முடிந்தால் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு தொடர்ச்சியான நோயாளிகளின் பராமரிப்பு சேவைகளுக்கு நன்கொடையாக பின்வரும் பொருட்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Read More

MACO என அழைக்கப்படும் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் இன்று பொதுமக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்

Read More

வாஷிங்டனில் இருந்து இலங்கை ஊடகவியலாளர்களுடன் நிதியமைச்சர் அலி சப்ரி நடத்திய செய்தியாளர் சந்திப்பின் ஐந்து முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு. மத்திய நிதியமைச்சர் அலி சப்ரி, கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்காக, மத்திய காலத்திற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்காக (EFF) இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார். இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக இருந்ததையும் அவர் உறுதிப்படுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள அதிகாரிகள் ஒரு நிலையான தீர்வைக் கண்டறிவதற்கான முயற்சிகளில் நாட்டிற்கு உதவுவதற்கான வழிகளைத் தேடுவதில் இதயம் கனிந்து பச்சாதாபம் மற்றும் உறுதியுடன் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார். EFF ஐப் பாதுகாப்பதில் கடன் நிலைத்தன்மையை நிரூபிக்கும் சுமை இலங்கைக்கு அதிகம் என்று அவர் மேலும் கூறினார். அந்த நம்பகத்தன்மையை நிலைநாட்டியதன் மூலம், குறுகிய காலத்திற்கு விரைவான நிதிக் கருவியை (RFI) இலங்கை பாதுகாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். எவ்வாறாயினும், ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவும்…

Read More

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வண. தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று காலை அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Read More

சென்னை: கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், மாஸ்க் அணிவது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் கொரோனா காரணமாக அப்போது நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகமானது. அந்த சமயத்தில் தினசரி கொரோனா பாதிப்பு லட்சத்தைத் தாண்டியது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் அலை டெல்டா கொரோனாவை போல இல்லாமல் விரைவாக முடிவுக்கு வந்தது. இந்தச் சூழலில் வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து பல மாநிலங்களிலும் மாஸ்க் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அதேநேரம் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருவோரின்…

Read More

ஆசிரியர் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு… இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்,எதிர்வரும் திங்கட் கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள்..! இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாத காரணத்தினால் பாடசாலைகளை நடத்தும் முன்மொழிவை நிராகரித்தமைக்கு அடிப்படையாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 50 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு வருகை தருவதாக கூறிய அவர் இந்த நெருக்கடிக்கு தாங்கள் வழங்கிய யோசனையை கல்வி அமைச்சு கணக்கில் எடுக்கவில்லை என அவர் கூறினார்.

Read More

பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களால் உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன பாராளுமன்ற குழுவினரே இந்த 21 ஆவது திருத்தத்திற்கான யோசனையை கையளித்துள்ளனர்.

Read More

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டின் போது நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. றம்புக்கணை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் சி டி விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகி உள்ளார். றம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் வாக்குமூலம் ஒன்்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகி உள்ளார். சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு சம்பவ இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்கவுள்ளது. றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நாரண்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷான் என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் நெருக்கடி காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் தொடர்ச்சியாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளமையால் சுமார் 15 அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூன்று 300 மெகாவோட் இயந்திரங்கள் மூலம் தேசிய கட்டமைப்பிற்கு சுமார் 900 மெகாவோட்களை சேர்க்கின்றன. மேலும் ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் அவ்வப்போது அகற்றி பராமரிப்பது வழக்கமான நடைமுறை என்று இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்தளவிலேயே குறைந்துள்ளதுடன், அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அன்றாட மின் தேவைக்கு போதுமானதாக இல்லை. இதனால் நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூலம் உற்பத்தியாகும் மெகாவோட் மின்சாரம் முழுவதையும்…

Read More