ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று (14) காலை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கன்னி வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. அந்த கூட்டத்திற்கு பின்னர், அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்த பின்னர், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்துகொள்ளத் தயாராக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், இந்த வாரத்தில் மேலும் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Author: admin
குவைத் எயார்லைன்ஸ் ஜசீரா எயார்வேஸ் கொழும்பிற்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜசீரா எயார்வேஸ் குவைத்துக்கும் கொழும்பிற்கு இடையில் வாரத்திற்கு மூன்று முறை விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதேவேளை, இந்த புதிய விமானங்கள் கொழும்பில் இருந்து 50க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இணைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பிற்கான மேலதிக விமான சேவைகள் மூலம் இலங்கையில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றார் அமைச்சர். சமீபத்திய வாரங்களில், பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யாவிலிருந்து பல விமான நிறுவனங்கள் கொழும்பிற்கான விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினரும் பொதுச்செயலாளருமான ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். எனினும் அதனை பிற்போடுவதற்காகவே அரசாங்கம் எல்லை நிர்ணய சபையினை ஸ்தாபித்து அதன் மூலம் பிரச்சினையை ஏற்படுத்த முற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும் நாட்டில் ஏற்பட்டிருந்த மக்கள் போராட்டத்தை காரணம் காட்டி மேலும் ஒருவருடத்திற்கு குறித்த தேர்தலை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது என்றும் அவர் சாடியுள்ளார். தேர்தல் ஒன்றுக்கு சென்றால் அரசாங்கம் அதில் தோல்வியை சந்திக்கும் என்ற அச்சத்தினால் இவ்வாறு தேர்தலை பிற்போடும் செயற்பாடுகளில் ஆளுந்தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே உரிய காலத்தில் இனி தேர்தல் நடத்தப்படாவிட்டால், அதற்கு எதிராக தாம் போராட்டங்களை…
அரசாங்க ஊழியர்களின் சம்பள பணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முக்கிய அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தினால் இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக 420 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், அடுத்த வருடம் அது 380 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அதற்கேற்ப அரசு ஊழியர்களின் சம்பளம் அடுத்த வருடத்திற்கான பட்ஜெட்டில் குறைக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேலும் பல அமைச்சர்களை நியமிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாடு திவாலாகும் போது நாட்டுக்கு 70 அமைச்சர்கள் தேவையா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும்,பொருட்களின் விலையை அதிகரித்து அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதனால் ஜனவரி மாதத்திற்கு பின்னர் நாடு பாரிய நெருக்கடியை சந்திக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.-Vaasaham-
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்தமழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நாளை (13) இடம்பெறவுள்ள ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தை அதிகரிக்க சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது. எனினும் இறுதிப் போட்டி நடைபெறும் நாளில் மெல்போர்னில் மழை பெய்ய 100% வாய்ப்பு இருப்பதாக அவுஸ்திரேலிய வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அடுத்த நாள் திங்கட் கிழமை மேலதிக தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதும், அன்றைய தினமும் அதிக மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் வழங்கப்படும் மேலதிக நேரத்தை 4 மணி நேரமாக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. இறுதிப் போட்டியில், இரு அணிகளும் குறைந்தது தலா 10 ஓவர்கள் விளையாட வேண்டும், இன்றைய இறுதிப் போட்டியின் போது மழை குறுக்கிட்டு போட்டி இடைநிறுத்தப்பட்டால் நாளைய தினம் இடைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து போட்டி ஆரம்பிக்கப்படும். மேலதிக நாளிலும் மழை குறுக்கிட்டால் டி20…
நாளிதழ் ஒன்றில் வெளியான திருமண விளம்பரத்தின் படி பெண் பார்க்க சென்ற நபருக்கு மூன்று லட்ச ரூபாயுடன் மணமகளும் காணாமல் போன செய்தி அண்மையில் பதிவானது. கண்டி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் குறித்த நபர் 60 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார். தனது மகன் திருமணமாகி தனித்தனியாக வசிப்பதால் தனியாக வசித்து வந்த அவர், வேறு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அதன்படி நாளிதழ் ஒன்றில் வெளியாகிய திருமண விளம்பரத்தை பார்த்து குருநாகல் பிங்கிரிய பகுதியில் உள்ள கிராமமொன்றுக்கு பெண் பார்க்க சென்றுள்ளார். அவர் பார்க்க சென்ற மணமகள் சுமார் 41 வயது கணவனை விட்டு பிரிந்து சகோதரனுடன் வசித்து வரும் பெண் என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் விருப்பம் ஏற்பட விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் குறித்த மணமகள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி,…
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலங்கையில் சுமார் 4000 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக காச நோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஓனலி ராஜபக்ஸ தெரிவித்தார். அவர்களில் 20 தொடக்கம் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மூன்றில் இரண்டு வீதமானோர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் ஓனாலி ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.
மனித அபிவிருத்தியில் இதுவொரு மைல் கல் என்று குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள், எதிர்வரும் 15ஆம் திகதியன்று உலக சனத்தொகை 800 கோடியை அடையும் என்று கணக்கிட்டுள்ளது. உலக சனத்தொகை, 700 கோடியில் இருந்து 800 கோடியாக உயர்வதற்கு 12 வருடங்கள் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஐ.நா, 900 கோடியாக உயர்வதற்கு இன்னும் 15 வருடங்கள் எடுக்கும் என்றும் கணித்துள்ளது. பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, தனிநபர் சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மனித ஆயுட்காலம் படிப்படியாக அதிகரிப்பது மற்றும் சில நாடுகளில் அதிக மற்றும் நிலையான கருவுறுதல் நிலைகளின் விளைவாகவே சனத்தொகை அதிகரிப்பதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது. நமது மனித குடும்பம் பெரிதாக வளரும்போது, அது மேலும் பிளவுபடுகிறது என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்கின்றனர் என்றும் கடன், கஷ்டங்கள், போர்கள் மற்றும் காலநிலை பேரழிவுகளில் இருந்து நிவாரணத்துக்காக வீடுகளை விட்டு…
நேபாளத்தில் இன்று (12) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் டெல்லியில் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வானது ரிச்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் இரண்டாவது முறையாகவும் இவ்வாறு நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த புதன்கிழமை, நேபாளத்தில் 6.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, டெல்லி, காசியாபாத், குருகிராம் மற்றும் லக்னோ உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.