Author: admin

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க மே மாதம் 3 ஆம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை பொதுமக்களிடம் அவர் முன்வைக்கவுள்ளதாக அவர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே தனது டுவிட்டரில் நேற்றைய தினம் அவர் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார். குறித்த பதிவில் ‘உரிமையாளர்களும் கேட்டவர்களும் மே 3 ஆம் திகதி விழிப்புடன் இருக்கவும்´ என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்நாட்டு மக்கள் எதிர்காலத்தில் உணவு நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. கடந்த பெரும்போகத்தில் இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமையால் நாட்டின் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக உணவு நெருக்கடி ஏற்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதேவேளை, சந்தையில் தற்போது அதிக விலைக்கு விற்கப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபையினால் பெறப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை சதொச மற்றும் கூட்டுறவு உள்ளிட்ட பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனை செய்வதன் ஊடாக விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். பெரும் போகத்தில் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கான…

Read More

ஜனாதிபதியை அரசாங்கத்திலிருந்து வெளியேறு மாறு கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையின் கண்களை கறுப்பு நாடாவால் மூடியுள்ளனர். அதன் எதிரே ‘எழுந்திரு’ என்ற வாசகம் வைக்கப்பட்டி ருந்தது.

Read More

இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் இன்று (30) நள்ளிரவு முதல் நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகராக போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்காமல் இருப்பதற்கு எதிராக விடயத்துக்குப் பொறுப் பான அமைச்சருடன் நேற்று (29) நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவுக்கு வந்ததாக அதன் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.

Read More

காபந்து அரசாங்கம் ஒன்றை நிறுவி பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குடிமக்கள் படும் துன்பங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். 1982 ஆம் ஆண்டுக்குப் பின்னர் , நிபுணர்கள் பரிந்துரைத்தபடி இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு எதிராக நாடு திறந்த சந்தையில் இருந்து கடன்களைப் பெற்றது எனவும் அவர் தெரிவித்தார். பெறப்பட்ட கடன்கள் நெடுஞ்சாலைகள், தாமரை கோபுரம், மாநாட்டு அரங்குகள், நடைபாதைகள் மற்றும் அத்தியாவசியமற்ற இடைச் சாலைகள் புனரமைக்க பயன்படுத்தப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தன என்றும், தற்போதைய அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் காபந்து அரசாங்கத்தை நோக்கி நாட்டை வழிநடத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Read More

தமிழ்நாட்டிற்கு அகதிகளாக செல்வதற்காக கடற்கரையில் காத்திருந்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழமுடியாது தமிழ்நாட்டிற்கு அகதிகாக செல்லும் நோக்கில் புறப்பட்டு கடற்கரையில் காத்திருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

உலகத் தொழிலாளர் நாளாகிய 2022 மே-1 ஐ துன்பியல் நாளாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்ட அறிக்கை வருமாறு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். 2022 மே:1 ஐ துன்பியல் நாளாக பிரகடனம். உலகத் தொழிலாளர் நாளாம் மே:1 உலகில் வாழும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எழுச்சி நாளாகும். இந்நாளில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுச்சியை வெளிப்படுத்தும் நாளே மேதினம். இலங்கையில் வாழுகின்ற அத்தனை தொழிலாளர்களும் தற்போது வாழ்வதற்கு வழியின்றி வாழ்க்கைக்காக போராடுகின்றனர். ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளமாக இரண்டு லட்சம் தந்தாலும் இன்றைய நிலையில் வாழ முடியாது. அது போன்று அத்தனை உழைப்பாளர்களும் அடுத்த வேளை உணவுக்கு அலையும் நிலை இன்று உருவாகியிருக்கின்றது. இந்த நிலைக்கு இலங்கையில் உள்ள அத்தனை அரசியல் கட்சி உறுப்பினர்களும் காரணம் என்பதனை வலியுறுத்தி இளையோர் இன்று வீதியில் இறங்கியுள்ளனர். வருடந்தோறும் நாம் நடாத்தும் மேதின பேரணியாலோ, கூட்டங்களாலோ எதுவும் நடந்துவிடப்…

Read More

நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியே காரணம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சந்தையில் உதிரிப் பாகங்களின் விலை கூட வேகமாக உயர்ந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போதைய நிலைமை காரணமாக தமது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார். உதிரிப் பாகங்கள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு பகுதி பயணிகள் பேருந்து துறை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். உதிரிப் பாகங்கள் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், ஒட்டுமொத்த போக்கு வரத்து துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Read More

இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசு இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார். அதற்கமைய, 80 கோடி ரூபா பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா 15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதேவேளை, இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 50 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சியின் துணைத்தலைவர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிதெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது, தாம் வழங்க முன்வந்திருப்பது முதற்கட்ட உதவி என்றும், தேவையேற்படின், அடுத்தகட்டமாக உதவுவதற்கும்…

Read More

ராஜபக்சாக்கள் அரசியலில் இருந்து விலகவேண்டும் என பத்தில் ஒன்பது இலங்கையர்கள் கருதுவது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மாற்றுக்கொள்கை நிலையத்தின் சோசியல் இன்டிகேட்டர் பிரிவு முன்னெடுத்த ஜனநாயக ஆட்சி மீதான நம்பிக்கைகள் குறித்த கருத்துக்கணிப்பிலேயே மக்கள் இவ்வாறு கருதுவது தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் மக்களின் எதிர்ப்பு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை; பொருளாதார அரசியல் நெருக்கடி குறித்து நாடாளாவிய ரீதியில் எதிர்ப்புணர்வு காணப்படுகின்றது என்ற செய்தியை அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் வகையில் காணப்படுகி;ன்றது. தற்போதைய நெருக்கடி காரணமாக நாட்டின் அனேகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருவரோ எரிபொருள் சமையல் எரிவாயு அத்தியவாசிய பொருட்களை பெறுவதற்காக கடந்த மாதம் வரிசையில் நின்றுள்ளதாக கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 88 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தனது அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பத்தில் ஒன்பது பேர் தெரிவித்துள்ளனர். தற்போதைய…

Read More