Author: admin

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் வங்கி முறைமை வீழ்ச்சியடையக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) பாராளு மன்றத்தில் தெரிவித்தார். அப்படியானால், அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கலாம், அதற்குத் தீர்வாக பாதுகாப்பு வலை அமைக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். “அது இப்படித்தான். எங்கள் வங்கிகளைச் சரிபார்க்கவும். இந்த வங்கி உடைந்து போகலாம். அல்லது ஒரு நிதி நிறுவனம் சரிந்தால் நமக்கு பெரிய பிரச்சினை ஏற்படும். எனவே ஒரு வலையை வைக்கவும். வங்கிகளைப் பாதுகாக் கவும். இல்லையேல் அதை இழக்க நேரிடலாம்” என்றார்.

Read More

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு வாரங்கள் வரை விலை திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா IOC (LIOC) ஆகியவற்றின் எரிபொருட்களின் விலைகளை இணையான விலைக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.எனவே, இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் கையளிக்கப்படும் என்றார். ஒரு வெளிப்படையான எரிபொருள் விலை திருத்தம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மக்களின் தோள்களில் சுமையை விட்டுவிடாமல் டொலர் சந்தைக்கு ஏற்ப CPC மற்றும் LIOC இரண்டின் விலைகளையும் பாதிக்கும் என்றார். சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்பி மக்கள் தவறாக நடக்க வேண்டாம் எனவும், அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு இணங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read More

சந்தையில் கொள்வனவு செய்வதற்கு போதிய எரிவாயு சிலிண்டர்கள் இல்லாவிட்டாலும் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு எரிவாயு கிடைப்பதாக மாத்தறை பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 10,000 முதல் 12,000 ரூபா வரையிலான விலையில் காஸ் சிலிண்டர்கள் கொள்வனவு செய்யப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் காஸ் விநியோகஸ்தர்கள் காஸ் கையிருப்பை மறைத்து இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு காஸ் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனையோர் சந்தையில் எரிவாயுவை கொள்வனவு செய்து மீண்டும் விற்பனை செய்வதன் மூலம் ரூபா 4000 முதல் 5000 வரை இலாபம் ஈட்டுவதாக மாத்தறை எரிவாயு பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாத்தறை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Read More

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனத் தெரிவித்து தொழிற்சங்கங்களால் எதிர்வரும் 06 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் ஹர்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளவிய ரீதியாக இடம்பெறும், ஹர்தாலுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை அறிவித்து பாடசாலைக்குச் செல்லாது ஆதரவு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கோட்டாபய மற்றும் அவர் சார்ந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் இடைக்கால அரசாங்கம் அமைய வேண்டும் எனவும் அதில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் யாரும் இடம்பெறக்கூடாது எனவும் தெரிவித்து மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் பதவி விலகப்போவதில்லையென கோட்டாபய திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து மகிந்தவும் தனது பதவி விலகல் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கை வெளியிடவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே…

Read More

பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு நேற்று தீ வைத்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 மற்றும் 07 வயதுடைய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. சில தவறுகளுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாடசாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கொள்ளுபிட்டிய பகுதியில் அலரிமாளிகைக்கு முன்பாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் சகல கட்டமைப்புக்களையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மைனா கோ கம என்ற பெயரில் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ளதாக பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Read More

பிரதமர் பதவி விலகுவதால் மட்டும் இலங்கையில் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது, அரசின் கொள்கைகள் மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வரும் மாதங்களில் நாட்டில் விலைவாசி உயர்ந்து நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் ரணில் கூறினார். இலங்கையில் 4 முறை பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, அதிக காலம் அந்தப் பதவியில் இருந்தவர். கடைசியாக 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரை பிரதமராக இருந்தார். தற்போதைய அரசை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்று கூறியிருக்கும் ரணில், போராடும் மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை எனில் அரசு பதவி விலக வேண்டும் என் தெரிவித்தார். இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஒரு எல்லை உண்டு என்று கூறிய அவர், இலங்கையை தன்னையே சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ▶️கே: இலங்கைக்கு இந்த சிக்கல் ஏன் ஏற்பட்டது? ⏩ப: ஏனெனில்…

Read More

நாட்டில் எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லை என, இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளதாக, இலங்கை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர், “நாட்டில் தற்போது தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இல்லை. காரணம் முன்னொருபோதும் இல்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிகளை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம். இவற்றிலிருந்து மீள்வதற்கான வழி தொடர்பிலேயே அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தோடு மக்கள் தற்போது தேர்தலைக் கோரவில்லை. அவர்கள் தமது வாழ்வாதார பிரச்னைகளுக்கான தீர்வினையும், அத்தியாவசிய பொருட்களையுமே கோருகின்றனர். எதிர்தரப்பிலும் பெரும்பாலானோர் இது தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தருணமல்ல என்று தெரிவித்துள்ளனர்” என்றார்.

Read More

2022 ஆம் ஆண்டிற்காக வரவு செலவு திட்டம் இனி யதார்த்தமானது அல்ல என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்று (04) காலை பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதனால் விரைவில் புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இதனூடாக வருமான வரியை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய நிலைமையை இலங்கை உடனடியாக முகாமைத்துவப்படுத்த வேண்டும் எனவும், நாடு பேரழிவின் விளிம்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட அனைவருக்கும் தேசிய பொறுப்பு உள்ளது எனத் தெரிவித்த அவர், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறி எனவும் அவர் மேலும் தெரிவித்தார். “தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஓரிரு வருடங்களில் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை. கடந்த காலங்களில் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டிய காலப்பகுதியில் அரசாங்கம்…

Read More

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து GMOA பிரிவுகளுடன் இணைந்து இன்று எதிர்ப்புப் பிரசாரத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய , கேகாலை மாவட்டத்தின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக வைத்தியர்கள் எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக GMOA தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடியை நிவர்த்தி செய்வதுடன் உடனடித் தீர்வுகளை வழங்குமாறு நாட்டின் தலைவர்களை வலியுறுத்தும் நோக்கில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது முன்னெடுக்கப்படவுள்ளதாக GMOA குழுவின் உறுப்பினரான வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார். சமூக ஆர்வலர்கள் உட்பட எந்தவொரு தனி நபரும் போராட்டங்களில் இணையலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read More