Author: admin

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று  முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடந்த வாரம் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை தேவை என அறிவித்திருந்தார். விடுமுறைக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கடமைகளை உள்ளடக்கியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை மேல் மாகாணத்தில் இருந்து நீக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு விடுத்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

Read More

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவனின் பெற்றோர் நேற்று இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போனவர் 15 வயதுடைய பாடசாலை மாணவர் என்றும் இவர் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சில நாட்கள் கழித்து திரும்பி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றர்.

Read More

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். குறித்த கீரை தோட்டத்தை அண்மித்த காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் அஜித் எஸ்.குணசேகர இதனை தெரிவித்துள்ளார். இறக்குமதியாளர்களுக்கு அடுத்த மாதத்திற்குத் தேவையான மூலப்பொருளை இறக்குமதி செய்ய வங்கிகள் மூலம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் கிடைத்தால், அடுத்த ஆறு மாதங்களுக்கு தொழிலை தொடர முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இன்று கோழி உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளதுடன் பண்ணைகள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

இன்று, நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த விடயங்களில் ஒன்றாகும். இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் தற்போது 21ஆவது திருத்தச் சட்டத்தை தயாரித்து வருகின்றோம். இரண்டாவது விடயம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான முயற்சியாகும். அதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. நிறைவேற்றதிகாரத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியை தடுக்கும் வகையில் பாராளுமன்றம் செயற்படவில்லை என்பதே இன்றைய பிரதான குற்றச்சாட்டு. பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் பாராளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை நாம் எப்போதும் பார்க்க…

Read More

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்வியியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை ரூபா 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜாசிங்க இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மக்களின் அன்றாட வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. எனினும் கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு 5,000 ரூபா மாத்திரமே கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கான உணவு உள்ளிட்டவற்றை வழங்குவதில் கல்லூரி நிர்வாகம் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. மேலும் 19 கல்வியியல் கல்லூரிகளில் 12,000 மாணவர்கள் ஆசிரிய பயிற்சி பெறுகின்றனர். நாட்டின் பொருளாதார பிரச்சனை காரணமாக கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாகம் கடுமையான நிதி சிக்கல்கள் முகங்கொடுத்திருக்கிறது. எனவே அவர்களுக்கான கொடுப்பனவை 10 000 ரூபா வரை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

21 ஆவது திருத்த சட்டத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவளிப்பதாக “ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன” தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பல யோசனைகளை அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிடம் இந்த திருத்தத்தில் உள்ளடக்குமாறு அவர் முன்வைத்துள்ளார். 21வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியப்படுத்துவதற்கான கலந்துரையாடலும் அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read More

பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கருத்து தெரிவித்துள்ளார். சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பான சந்தேகத்தின் கீழ் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், கோவிட் பரிசோதனை முடிவுகளுக்காகவும் காத்திருப்பதாக அவர் கூறினார். குற்றப்புலனாய்வு துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அதிபரின் கீழ் செயல்படும் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு மூலம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன அறிவுறுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Read More

ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் புதிய சாம்பியனாக உருவெடுக்குமா அல்லது ராஜஸ்தான் ரோயல்ஸ் தனது இரண்டாவது பட்டத்தை வெல்லுமா என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. உலகின் பிரசித்தி பெற்ற விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் 2022 தொடா் கடந்த ஒன்றரை மாதங்களாக மும்பை, புனேயில் நடைபெற்றது. இந்நிலையில் கொல்கத்தாவில் தெரிவாகும் 1 மற்றும் வெறியேற்றம் போட்டிகள் நடைபெற்றன. அகமதாபாதில் தெரிவாகும் இரண்டாவது போட்டி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று (29) நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் 2008 சாம்பியன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன், முதன்முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது. கடந்த 2008இற்கு பின் தற்போது தான் ராஜஸ்தான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால் அறிமுகமான முதல் தொடரிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குஜராத் அணி. குஜராத் 14 போட்டிகளில் 10 வெற்றியுடன் 20 புள்ளிகளையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் 14 போட்டிகளில் 9 வெற்றியுடன்…

Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை கலைக்க கொழும்பு உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

Read More