Author: admin

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்த அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமூகத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பிள்ளைகளின் போசாக்கு நிலையை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் பிரகாரம் எதிர்காலத்தில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் எனவும் ஆனால் அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை எனவும் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சரியான தொலைநோக்குப் பார்வையின் ஊடாக நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு உறுதியான கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அதற்குத் தேவையான நடவடிக்கையை ஜனதிபதி…

Read More

பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோரைக் கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் நூறு பேரளவிலேயே போதைப் பொருள் வியாபாரிகளாக உள்ளதுடன், விநியோக நடவடிக்கைகளில் முன்னூறு பேரே ஈடுபட்டுள்ளனர்.ஆனால்,ஐந்து இலட்சம் பேர், போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார். போதைப்பொருள் வியாபாரிகளை இல்லாதொழித்து, விநியோக வலையமைப்பை சிதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். போதைப்பொருள் பாவனையாளர்களன்றி போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமென்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பேரிழப்பை பாடசாலை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2019ஆம் ஆண்டு நாம் அரசாங்கத்தைப்…

Read More

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும், முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் மோசடியாக உரிமை மாற்றம் செய்யப்பட்டது. அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்தி பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து மன்றில் முற்படுத்தினர். பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் வழக்கு நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது் அப்போது…

Read More

லாப்ஸ் காஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாக சேகரிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள லாப்ஸ் காஸ் பிஎல்சி நிறுவனம் , இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. லாப்ஸ் காஸ் சிலிண்டர்கள் நிறுவனத்தின் சொத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் லாஃப்ஸ் காஸ் பிஎல்சியின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி சிலிண்டரை சேகரிக்கவோ, விற்கவோ, விநியோகிக்கவோ அல்லது தோற்றத்தை மாற்றவோ எவருக்கும் உரிமை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அல்லது இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை அறிந்தால், 1345 என்ற ஹொட்லைன் மூலம் லாப்ஸ் காஸ் பிஎல்சிக்கு தெரிவிக்குமாறு நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read More

பாடசாலை புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலைமையினால் சிறுவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

பெண் ஒருவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும், பயணிகள் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ஹொரணை – கொழும்பு வீதியில் கும்புக பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோனபொல-கோபிவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். விபத்தையடுத்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தின் போது பஸ்ஸில் பயணிகள் இருந்த போதிலும் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Read More

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்கவை தொடர்ந்து தற்போது தசுன் சானக்க தொடர்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி, சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், அங்கு கிரிக்கட் விளையாட சென்றிருந்த தசுன் சானக்க, காணி வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அங்கு கிரிக்கட் விளையாட சென்றிருந்த விளையாடுவதற்காக சென்றவர் இவ்வாறு காணி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனுஷ்க குணதிலக்க தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வைத்தே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Read More

தெற்கு நகரத்திலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா கூறியதை அடுத்து, கெர்சனைச் சுற்றி கடைசி நாளில் பெரும் வெற்றிகளைப் பெற்றதாக உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது. கெர்சனுக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் உள்ள முக்கிய நகரமான ஸ்னிஹூரிவ்காவை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைனிய துருப்புக்கள் கூறுகின்றன. சில இடங்களில் 7 கிமீ முன்னேற்றங்கள் உட்பட, கெர்சனுக்கு அருகே இரண்டு முனைகளில் பெரிய பரப்பையும் கைப்பற்றியுள்ளன. ரஷ்யா நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கியதாகக் கூறுகிறது. ஆனால் படைகள் வெளியேறும் செயல்முறை வாரங்கள் ஆகலாம். கெர்சனில் இருந்து ரஷ்ய பெருமளவில் வெளியேறியதற்கான உடனடி ஆதாரம் எதுவும் இல்லை. கெர்சனில் இருந்து ரஷ்யா வெளியேறுவதாக விடுத்த அறிவிப்பு, அதன் முயற்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. இந்த அறிவிப்பில், உக்ரைனிய அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருந்தாலும் இது ஒரு பொறியாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.

Read More

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதேவேளை சவாகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் அ. ஜுட்சன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து , சடலத்தை மீட்டு உடல்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

Read More

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு இளைஞர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் இருவருமாக நான்கு பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்று (10) கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து 60 தங்கப்பவுண் நகைகள் மற்றும் ஒருதொகை பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் காரைநகர், புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, வேலணை உள்ளிட்ட பிரதேசங்களில் பகல் நேரங்களில் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்ற வேளைகளில் வீடு உடைந்து நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த…

Read More