Author: admin

சர்வகட்சி அரசாங்கத்தில் இணையும் அனைத்து தரப்பினரும் தாராள மனப்பான்மையுடன் தியாயம் செய்பவர்களாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே அந்த அரசாங்கத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் பல இடதுசாரி – வலதுசாரி மற்றும் மிதவாதி கட்சிகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான கலப்பு அரசியல் திட்டத்தில் ஒவ்வொரு தரப்பினரும் தமது பெருமைகளை மறந்து நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து காப்பாற்ற தியாகம் செய்ய வேண்டும். இல்லையேல் இந்த சர்வகட்சி அரசாங்கம் மற்றுமொரு பேச்சுக் கூடமாகவே இருக்கும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

Read More

July 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்டங்கள் சில பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை (05) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (அ) மற்றும் 365 (ஆ) சரத்துகள் நீக்கப்பட்டு அதே பிரிவின் 408 மற்றும் 410 முதல் 420 வரையான சரத்துகள் அவசரகாலச் சட்டங்கள் தொடர்பாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவுகளின் கீழ், குற்றவியல் சட்டத்தின் 365, 365 (அ) மற்றும் 365 (ஆ) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

Read More

தற்போதைய ஆட்சி முறையையும் மற்றும் அரசாங்க அமைப்பையும் மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொஸ்கம பொரலுகொட ஸ்ரீ வர்தனாராமயே விகாரையின் விகாராதிபதியின் நலன் விசாரிப்பதற்காக சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கை வருவதற்கான திகதியை கூறவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடியது ஏன்? என மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, “கோட்டாபய தப்பிச் சென்றுள்ளார் என குற்றம் சுமத்துவது யார்?” என பதில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஊடகவியலாளர் மக்கள் தான் குற்றம் சுமத்துகின்றனர் என கூறியுள்ளார் . “யார் என்ன வேண்டுமானாலும் கூறட்டும் எனினும் அவை அனைத்தும் கட்டுக்கதைகள்” என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். . “கோட்டாபய ராஜபக்ஷ மருத்துவ பரிசோதனைகளுக்காகவே வெளிநாடு சென்றுள்ளார். அவர் என்னிடமும் கூறிவிட்டு தான் சென்றுள்ளார். எனினும் அவர் நாடு திரும்பும் திகதியை எனக்கு கூறவில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

ஸ்டேட் வங்கியில் ரூ.68,340,000 பண மோசடி செய்ய உதவிய பெண் ஒருவர்  கோட்டை பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தில் உள்ள அரச வங்கியொன்றில் இருந்து 48 தனிநபர் கடன் கோப்புகள் ஊடாக பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இது தொடர்பான நிதி மோசடியில் ஈடுபட முன்வந்த வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குற்றத்திற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட பெண், சம்பந்தப்பட்ட வங்கியின் கடன் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவிப் பொது மேலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய சந்தேகநபர் ஆவார், கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More

மத்திய வங்கியின் வெளிவிவகார பிரிவின் தரவுகளின் படி இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒவ்வொரு மணித்தியாலயத்திலும் 30 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது கடல் வழியாக சட்டவிரோதமாக தென்னிந்தியா அல்லது அவுதிரேலியாவிற்கு தப்பிச் செல்லும் எண்ணிக்கையை விட அதிகமாகும். வெள்ளிக்கிழமை, அவுஸ்திரேலிய எல்லைப் படை சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 46 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது. அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களின் இந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கை 183 ஆகும். உடல் ரீதியான துஷ்பிரயோகம், கொள்ளை, நீண்ட வேலை நேரம், மனித உரிமை மீறல்கள், ஊதியம் இல்லாமை அல்லது குறைவான ஊதியம், இறப்பு மற்றும் ஊனம் போன்ற ஆபத்துகள் இருந்தபோதிலும், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களும் ஆண்களும் இந்த ஆண்டு நான்கு மடங்காக அதிகரித்துள்ளனர்.

Read More

மழையுடனான காலநிலை காரணமாக விளைச்சல்கள் சேதமடைந்துள்ளமையினால் எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலை 40 முதல் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் குழு தெரிவித்துள்ளது. மலைநாட்டு மரக்கறிகளின் விலை 60 முதல் 70 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்று அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஒரு கிலோகிராம் கரட் மொத்த விற்பனையின் கீழ் 260 ரூபா முதல் 290 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவா ஒரு கிலோகிராம் 230 ரூபா முதல் 260 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. லீக்ஸ் 130 ரூபாவிலிருந்து 170 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நாளைய தினம் குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி சுமார் 200 ரூபா அளவில் விலை குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நாளைய தினம், அமைச்சரவையில் இந்த விடயம் முன்மொழியப்பட்டு, விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்ற அடிப்படையில் தேனீர் மற்றும் உணவுப்பொதிகளின் விலையில் குறைப்பு மேற்கொள்ளப்படும் என்று சிற்றுணவு உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Read More

உடுகம்பொல வல்பொல பிரதேசத்தில் இன்று (06) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியின் இலக்கு தவறி எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாத 22 வயதுடைய இளைஞன் ஒருவரின் உயிரை பறித்துள்ளது. இன்று காலை 9.45 மணியளவில் உடுகம்பொல வல்பொல பிரதேசத்தில் அழகு கலை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அங்கிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டிருந்தனர். இதில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரியப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அழகு கலை நிலையத்திற்குள் நுழைந்து கொலை செய்ததன் பிறகு எந்தத் தயக்கமும் இன்றி வெளியே வருவதும் அருகில் இருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய அச்சிர நெத்ருவான் என்ற இளைஞர் ஆவார். குறித்த அழகு கலை நிலையத்தின் உரிமையாளரே துப்பாக்கிதாரியின் இலக்காகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும் அங்கு…

Read More

யாழ் உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை, தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.. மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளதுடன், மகளிடமிருந்த தொலைபேசியை வாங்கிய தந்தை அதிலிருக்கும் விடயங்களை பார்வையிட்டுள்ளார். இதனால் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் மகளின் முன்னால் தந்தையை தாக்கிய தாய் மண்டையை உடைத்துள்ளார். இதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதி.

Read More