Author: admin

நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி பணிகளை தேசிய பௌதீக திட்டமிடலுக்கமைய முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டமிடலுக்கு அமைவான வரைவுகள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் சமர்பித்து அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 ஆம் ஆண்டில் நாட்டின் அபிவிருத்திக்கான நோக்கு என்ற திட்டத்திற்கு இணையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் நாட்டின் அதிவேக வீதிகள் நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தேசிய பௌதீக திட்டமிடலின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம் இரு வருடங்களுக்கான முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்பட உள்ளதோடு, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களிலும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில்…

Read More

உயிரிழந்த உறவுகளின் அஸ்தி வைக்கப்பட்டு நினைவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்று தொடர்பில் கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தமது உறவினா்களின் அஸ்தியை அவர்கள் இறந்தபின் நிரந்தர நினைவுப் பரிசாக வைத்திருப்பது இலங்கையர்களுக்குப் பரிச்சயமில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் அஸ்தியை வைத்து நகைகள் மற்றும் நினைவுப் பொருட்களை அணிய விரும்புகிறார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் இந்த சந்தை வாய்ப்பை உணர்ந்த RKS நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையின் கீழ் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அஸ்தியை கொண்டு நகைகள் மற்றும் நினைவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இதுவாகும். தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் நினைவுப் பொருட்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம், அதன் உற்பத்திக்கு நெனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ரோலண்ட் கார்ல் ஷோய்பர் தொிவித்துள்ளாா்.

Read More

யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டிபி ஏவியேஷன் இந்த சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ஜூலை 01ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். வரும் மாதங்களில் மேலும் பல உள்நாட்டு இடங்களுக்கு சேவைகளை முன்னெடுக்க டிபி ஏவியேஷன் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டு விமான சேவைகள் குறித்து டிபி ஏவியேஷன் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் 70 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும். யாழ்ப்பாணம் செல்வதற்கு தனி வழிப் பயணத்திற்கு 22,000 ரூபாவாகவும், இரு வழி பயணத்திற்கு 41,500 ரூபாவாகவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வாரத்திற்கு நான்கு விமானங்கள் சேவையில் ஈடுபடும் என்பதுடன், பயணிகள் 07 கிலோ பொருட்களை எடுத்துச்…

Read More

உலக சந்தையில் இன்று தங்கத்தின் விலை 6 டொலர்களால் அதிகரித்து ஒரு அவுன்ஸ் 1921 டொலர்களாக நிலவுகிறது. கடந்த சிலதினங்களாக தங்கத்தின் விலை குறைவடைந்து வந்த நிலையில் இன்று ஓரளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் தங்கத்தினுடைய விலை எதிர்வரும் நாட்களில் குறைவடையலாம் என தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில், 24 கெறட் தங்கம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும், 22 கெறட் நகை தங்கம் ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாகவும் நிலவின.

Read More

1989ஆம் ஆண்டு, ஜே.வி.பி கிளர்ச்சி காலத்தில், தாம் இராணுவ அதிகாரியாக கடமையாற்றிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட, மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளைத் தடுக்கும் வகையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காவல்துறை பதிவுகளை சிதைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர் குழுக்களின் அறிக்கையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில், கடந்த மூன்று தசாப்தங்களில் சுமார் 20 பாரிய புதைகுழிகள் தோண்டப்பட்டதில், நூற்றுக்கணக்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனினும், அவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், இன்னும் பல்லாயிரக்கணக்கான மனித எச்சங்கள், கண்டுபிடிக்கப்படாத புதைகுழிகளில், தோண்டப்படாமல் இருக்கலாம் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் நிறுவப்பட்ட பல விசாரணை ஆணைக்குழுக்களில் எவையுமே பாரிய புதைகுழிகள் பற்றி ஆராய முன்வரவில்லை. மாறாக, உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகள் தடைபட்டதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. குறித்த…

Read More

எம்பிலிபிட்டிய – பனாமுர – வெலிக்கடையாய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக இன்று (24) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதற்கு பதல் அளிக்கும் விதமாக அதிகாாிகள் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். அவர் முன்னாள் ராணுவ சிப்பாய் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் மினுவாங்கொடை பெஸ்டியன் மாவத்தை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் அம்பலாங்கொடையில் பிரதி அதிபர் ஒருவா் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிா்வு கூறியுள்ளது. அத்துடன் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுத் தொிவித்துள்ளது. மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றானது மணித்தியாலயத்திற்கு 40 முதல் 50 கிலோ மீற்றா் வேகத்தில் வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோாியுள்ளது. (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

கொழும்பு, ஜூன் 23, 2023 அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தின் 247 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஜூன் 22 ஆம் திகதி கொழும்பில் நிகழ்வொன்றை நடத்தினார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த பங்காளித்துவத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவை முன்னிலைப் படுத்த தூதுவர் சுங் இந்த நிகழ்வை நடத்தினார். இவ்விழாவில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டார். உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள், நாட்டின் ஸ்தாபக தந்தைகள் ஜூலை 4, 1776 அன்று பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட கூடினர். பிரகடனத்துடன், அமெரிக்கா ராஜ்யத்தை நோக்கி தனது முதல் படியை எடுத்தது, வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைப் பின் தொடர்தல் மற்றும் ஆளப்பட்டவர்களின் ஒப்புதலால் பெறப்பட்ட அரசாங்க அதிகாரங்கள் உட்பட சில பிரிக்க முடியாத உரிமைகளின் அடிப்படையில். தூதர் சுங்…

Read More

அஸ்வசும திட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறுவோரை தெரிவு செய்யும் கணக்கெடுப்பில் குறைபாடு இருப்பின் அதனை நிவர்த்தி செய்து தருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த வேலைத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை அகற்றுவது எந்த வகையிலும் நடைபெறாது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறுவோருக்கு நன்மைகளை வழங்கும் நோக்கில் இந்த நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். வேலைத்திட்டத்துக்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Read More

இலங்கை போக்குவரத்து சபையில் 520 சாரதிகளுக்கும் 170 நடத்துநர்களுக்கும் வெற்றிடம் நிலவுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு நிலவும் வெற்றிடங்களுக்கு பொருத்தமானோரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கின்றது. நேர்முகத் தேர்வினூடாக சாரதிகள், நடத்துநர்களின் வெற்றிடங்களுக்கு உரியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என சபையின் தலைவர் கூறியுள்ளார். அவர்களுக்கு ஜூலை மாத இறுதிக்குள் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More