Author: admin

2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சையில் பகுதியளவு அல்லது முழுமையாக தோற்றாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் குறித்த பரீட்சையின் செய்முறை பரீட்சைக்கு முழுமையாக தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக செய்முறை பரீட்சையில் தோற்றாத பரீட்சார்த்திகள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சை சுட்டெண், பெயர், பாடம் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் 0718 15 67 17 எனும் வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும். 10ஆம் திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சி, பிரித்தானியர் காலத்திலும், ஒல்லாந்தர் காலத்திலும், போர்த்துக்கேயர் காலத்திலும் ஏற்படாத ஒன்று என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் ரஜரட்ட ஆட்சியில், ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி,தற்போதைய வீழ்ச்சியை ஒத்திருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் இன்றைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுக் காணப்படவேண்டுமானால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு செல்வதை விட வேறு வழியில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இது விரும்பியோ, விரும்பாமலோ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும் என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். 1997ம்ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின்போது, சர்வதேச நாணய நிதியமே முன் வந்து செயற்பட்டது என்றும் ரணில் குறிப்பிட்டார். உடல் சீரின்மையின்போது கசப்பான மருந்தை பயன்படுத்தியேயாக வேண்டும். அதன்படி, எதிர்வரும் 6 மாதக்காலங்கள் கஸ்டமான காலங்களாகவே இருக்கும் என்றும் ரணில் தெரிவித்தார். அத்துடன் 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தை சிறப்பாக காணமுடியாது. 2024ஆம்…

Read More

கர்ப்பிணித் தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் திரிபோஷா மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டலானது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக மேற்கொள்ளப்படும் பாரிய நிவாரணமாகும் என அந்த பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். தாய்ப்பாலூட்டுவதற்கான வசதிகளை கணவன் வழங்க வேண்டும். அத்துடன், தாய்ப்பாலூட்டல் தொடர்பில், மாமனாரும், மாமியாரும், குடும்பநல உத்தியோகத்தர், வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோரின் பொறுப்புகள் தொடர்பில், தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு, 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுவரை, தாய்ப்பாலூட்டுவதே தற்போதைய காலகட்டத்திற்கு அவசியமானதாகும் என குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

போட்டி இல: 01 05.08 .2022 இந்த வாரத்துக்கான கேள்விகள் அண்மையில் கைது செய்யப்பட்ட ‘ரட்டா’ என்கிற ரதிது சுரம்யா எந்த சமூக வலைத்தள பிரபலம்? எந்த கைத்தொழிலுக்கான வெளிநாட்டு உபகரணங்களுக்கு HS CODE மூலம் தீர்வை வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது? 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையை சேர்ந்த யுபுன் அபேகோன் எத்தனை வினாடிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 1-வது சுற்றில் வெற்றி பெற்றார்? போட்டிக்கான நிபந்தனைகள். போட்டியில் எந்த வயதினரும் பங்கேற்க முடியும். போட்டியில் பங்கேற்கும் நபர் பப்ளிக் நியூஸ் வாட்சப் குறுப்பில் இணைந்திருக்க வேண்டும். (ஏதாவது ஒரு குறுப்) போட்டி முடிவுத்திகதி 07 ஆகஸ்ட் 2022  கீழ் காணும் முறை மூலமே கேள்விக்கான பதிலை அனுப்ப வேண்டும். 3 வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும் அத்துடன் சரியான விடை அனுப்பும் நபர்களில் ஒருவர் குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்படுவார். Loading…

Read More

எதிர்வரும் இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More

நாடு முழுதும் பாடசாலைகள் அடுத்த வாரம் நடத்தப்படும் விதம் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த வாரம் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களிலும் பாடசாலைகள் இடம்பெறும். வியாழக்கிழமை வழமையாக பாடசாலை நடத்தப்படுகின்ற போதும், வியாழக்கிழமை (11ஆம் திகதி) போயா தினம் காரணமாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இணைவழியில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

அடுத்த மாதத்திற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எரிபொருள் இருப்பு ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பல்களுக்கான கொடுப்பனவு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. QR குறியீட்டு முறையின் மூலம் எரிபொருள் நிரப்பும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், எதிர்காலத்திலும் இந்த முறை தொடரும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் மாணவர்கள் பாடசாலை பாடத்திட்டத்தின் சில பகுதிகளை தவறவிட்டதா என்பதை அறிய கல்வி அமைச்சு ஆய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளது. வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை பாடத்திட்டத்தின் மிக அத்தியாவசியமான பிரிவுகளை பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

Read More

வடக்கு மாகாணத்தில் திங்கட்கிழமை (8) முதல் போக்குவரத்து பிரச்சினை உள்ள பாடசாலைகள் மூன்று நாட்களும், ஏனைய பாடசாலைகள் ஐந்து நாட்களும் திறக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.

Read More

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஒகஸ்ட் 3ம் திகதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் ஒகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More