Author: admin

கொழும்பு தொட்டலங்கா – கஜிமாவத்தை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் அந்தந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், உடமைகள் அல்லது உயிர் சேதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் நீத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு எகட் கரிடாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாஸன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் கலந்து கொண்டு 90 குடும்பங்களுக்கு 30 இலட்சம் ரூபா நிதி நிதியுதவியினை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்விற்கு எகட் கரிடாஸின் கொழும்பு கிளை இயக்குனர் லோரன்ஸ் ராமநாயக்க மற்றும் சியோன் தேவாலய பிரதம போதகரின் மனைவி திருமதி ரொசான் மகேசன் மற்றும் சியோன் தேவாலய போதகர் திருகுமரன் மற்றும் பொதுமக்கள் எனபலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.v

Read More

சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 2023 ஆண்டில் சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் பல்வேறு துறைகளிலும் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டேரஸை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளர். இலங்கை எதிர்கொள்ளும் சமூக பொருளாதார நிலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கைக்கான உதவிகளை அணிதிரட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் ஆதரவு வழங்கப்படும் என அன்டோனியோ குட்டேரஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.

Read More

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் அனைத்து மருந்தகங்களிலும் மருந்துகள் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் மருந்துகளை வாங்குவதற்கு பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே, மருந்து வாங்க விரும்புபவர்கள் அருகில் உள்ள மருந்தகம், அந்த மருந்தின் விலை, எப்படி வாங்குவது போன்ற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மொபைல் போன் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மொபைல் போன் அப்ளிகேஷனுக்கு “மெடி சர்ச்” என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் தகவல்களை எளிதாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மொபைல் போன் அப்ளிகேஷன் முறை அறிமுகப்படுத்தப்பட்டமை மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

இரண்டு கிலோகிராம் நிறையுடைய 8 தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவந்த விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவரை இன்று (27) பகல் சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களின் மொத்த பெறுமதி சுமார் 2 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் கைதான நபர் களனி பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (27) காலை டுபாயில் இருந்து வந்த இந்திய பயணியொருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு பயணிகள் முனையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரியிடம் குறித்த தங்க பிஸ்கட்டுகளை வழங்கியிருக்கலாம் என சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தனது காற்சட்டைப் பையில் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்து விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள சுங்க வளாகத்தை கடக்க முற்பட்ட போது சுங்கப்…

Read More

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடம் டிசம்பர் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதன் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட 6 மாதங்கள் ஆனதாகவும், 3 மாதங்களில் மீண்டும் அதே பரீட்சையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். எனவே க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

கொழும்பு – வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறான காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புத்திக்கா ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வத்தளையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் பல நாட்கள் உயிருக்கு போராடி வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் உறவு முறை சகோதரர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “இவர் எனது உறவு முறை சகோதரி புத்திக்கா ஹர்ஷனி தர்மவிக்ரம.இன்று அவரது பிறந்த நாள் ஆனால் அவர் சவப்பெட்டியில் வீட்டிற்கு வந்துள்ளார். மருத்துவரின் தவறால் எங்கள் தேவதையை இழந்துவிட்டோம்” என அவர்…

Read More

தெமட்டகொட புகையிரதப் பகுதிக்குள் பயணித்த புகையிரதமொன்று தண்டவாளத்தை விட்டு விலகி பழைய கட்டிடமொன்றுக்குள் புகுந்ததில், குறித்த கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட புகையிரதமானது நிறுத்தல் வரம்பை மீறியதால் இந்த விபத்து ஏற்பட்டதோடு, இதனால் அருகில் உள்ள கட்டித்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புகையிரத சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணமென விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் புகையிரத திணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவம் குறித்து எந்தவொரு நபரின் பெயர்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read More

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி வருவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். மாவடிப்பள்ளி பாலம், சம்மாந்துறை பகுதி, ஒலுவில் பகுதி, நிந்தவூர். மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கிட்டங்கி, நாவிதன்வெளி உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர். இம்மாவட்டத்தில் உள்ள வாவிகள், குளங்கள் மற்றும் களப்புக்களில் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் முதலைகளினால் இரைக்குள்ளாவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய அறிவுறுத்துதல்களோ எச்சரிக்கை பலகைகளோ இதுவரையும் வைக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் மக்கள்…

Read More