Author: admin

இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒருங்கிணைத்து தாக்குதல்களை நடத்துவதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தி இந்து செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தீவு நாடு இரண்டு முறை அவசரநிலையை அறிவித்துள்ள நிலையில், பன்னாட்டுத் தொடர்புகளைக் கொண்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோரில் சில பிரிவினர், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உணர முயல்வதாக வெள்ளிக்கிழமை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. . முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்க தாக்குதல்களைத் திட்டமிடுவது மட்டுமின்றி, தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், செய்தி வாசிப்பாளர் இசைப்ரியா மற்றும் ஏனையோரின் கொலைகளுக்குப் பழிவாங்கவும் முன்னாள் புலிகள் சதித் திட்டம் தீட்டினர். 2009 இல் கடுமையான சண்டைக்குப் பிறகு இன மோதல்…

Read More

எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முக்கிய மூன்று வாக்கெடுப்புகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்றைய தினம் முதலாவதாக பிரதி சபாநாயகர் தெரிவு நடைபெறும். பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவர் போட்டியிட்டால் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பின்னர் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும். இதையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இடம்பெறும் என நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

அத்தனகலு ஓயா, களனி கங்கை, கின் கங்கை, நில்வளா கங்கை, பெந்தர கங்கை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

Read More

பிரதமரின் அதிரடி அறிவிப்பு!!! துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்காக படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் இரத்து. சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகதை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கி கொள்ளப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய வேளைய்யிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கலவரங்கள் மீண்டும் மூண்டால் மாத்திரம் பாதுகாப்பு படையினருக்கு அவ்வாறாண உத்தரவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர்கள் கோரலாம் என்று கூறப்படுகின்றது. புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிப் பக்கத்தில் சுயாதீன அணியாக இருந்து புதிய பிரதமரை ஆதரிப்பதற்கே சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சரவையில் பதவிகளை வகித்தாலும் அவர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக இருந்தே பதவிகளை வகிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் எதிர்க்கட்சிப் பக்கத்தில் தமக்கே பெரும்பான்மை இருப்பதாக காட்டி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது பெரும்பான்மையை சஜித் பிரேமதாசவுக்கு காட்ட முடியாத நிலைமை ஏற்படுமாயின் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்கலாம் என்று…

Read More

இந்த நேரத்தில் பணம் அச்சடிக்கப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் தற்போது 100 பில்லியன் ரூபா மாத்திரமே இருப்பதே இதற்கான காரணம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Read More

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கடிதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார். ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் பிரதமருக்கு நினைவூட்டியுள்ளார். புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதாரம் தொடர்பில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களுக்கு புதிய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் என பிரதமரிடம் அறிவித்துள்ளார்.

Read More

மோசமான தூக்கம் எடை இழப்பை பராமரிக்கும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம், ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறன. அதிக எடை அல்லது பருமனான மில்லியன் கணக்கான மக்களால் ஒவ்வொரு ஆண்டும் உடல் எடையை குறைக்க முடிகிறது. ஆனால் பலர் அடிக்கடி மீண்டும்  உடல் எடை அதிகரிப்பை  எதிர்கொள்கின்றனர். சமீபத்தில் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட உடல் பருமன் குறித்த அறிக்கையின் முடிவுகள், சிறந்த மற்றும் நீண்ட தூக்க முறைகள் எடையை நன்றாகக் குறைக்க உதவும் என்று பரிந்துரைக்கிறது. போதுமான தூக்கம் அல்லது தரம் குறைந்த தூக்கம் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் கொழுப்பு படிவுகளை இரத்த நாளங்களில் உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. போதுமான தூக்கம் கிடைக்காதது நீரிழிவு, உள் வீக்கம் மற்றும் இதய நோய் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. உடல் எடை இழப்புக்குப் பிறகு எடையை மீண்டும் அதிகரிப்பதற்கு மோசமான தூக்கம் ஒரு காரணியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் இப்போது பெருகிய…

Read More

கல்பிட்டி உச்சுமுனை தீவை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. தீவின் குத்தகை மூலம் கிடைக்கும் வருமானம் 417.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளுடன் குத்தகை ஒப்பந்தம் மே 11ஆம் தேதி கையெழுத்தானது, ஒப்பந்தம் கையெழுத்தான இரவோடு இரவாக முகவர்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது. உச்சுமுனை தீவை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் 2021 இன் பிற்பகுதியில் இறுதி செய்யப்பட்டன, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது மட்டுமே எஞ்சியுள்ளது. உச்சுமுனை தீவு சுமார் 1500 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் ஏற்கனவே சுமார் 200 மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. உச்சுமுனை தீவு பல்லுயிர் வளம் நிறைந்த சுற்றுச்சூழல் என்று கூறப்படுகிறது.

Read More

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அச்சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை கூறினார். இதேவேளை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தை ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையிலும் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவிசாய்க்கவில்லை என மஹிந்த ஜயசிங்க குற்றம் சாட்டினார்.

Read More