Author: admin

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் ‘தி லெஜண்ட்’. ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப் படம் உருவாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28ஆம் திகதி வெளியாகி இரு வகை விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில், லெஜண்ட் சரவணன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் ,இயக்குனரிடம் சமூக அக்கறையுள்ள படமாக அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்து லெஜண்ட் சரவணன் தற்போது கதை கேட்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த சுப்பம்மா என்பவர் அவருடைய மருமகள் வசுந்தராவின் தலையை வெட்டி, அதனை பையில் போட்டு எடுத்துக்கொண்டு வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனால் சுப்பம்மாவை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக வசுந்தராவின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்து சுப்பம்மாவை தாக்கியதாக தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பம்மா நேற்று மாலை யாரும் இல்லாத நேரத்தில், வசுந்தராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றவே, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மருமகளின் தலையை வெட்டி தனியாக எடுத்த சுப்பம்மா, அந்த தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

அரசாங்க ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அழைப்பது கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்கு தணிக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் இயங்கி வருவதால், வாரத்தின் ஒவ்வொரு வேலை நாட்களிலும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள், அரச அலுவலகங்களுக்கு செல்கின்றனர். அதற்கமைய, அரச அலுவலகங்களின் செயற்பாடுகளை வழமையாகப் முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், காலதாமதத்தைக் குறைக்கும் வகையில், வாரத்தின் ஐந்து நாட்களும் அரசாங்க ஊழியர்களை பணிக்கு அழைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, கடந்த ஜுலை மாதம் 24ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு அரச ஊழியர்களை அழைப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த கால அவகாசம் முடிவடைந்ததன் பின்னர், நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு…

Read More

வார இறுதி நாட்களில் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் குறைந்தளவான பயணிகளின் வருகையும் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Read More

உள்ளூர் சந்தைகளில் மீன் மற்றும் காய்கறிகளின் விலை இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பேலியகொட மீன் சந்தை வளாகத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி கூறுகையில், தற்போது 1 கிலோ கிராம் சாலயா ரூ. 1000 மற்றும் 1200 இற்கு விற்பனையாகிறது.

Read More

இலங்கையின் சுகாதாரத் துறையானது குரங்கம்மை பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். குரங்குக் காய்ச்சலை பரிசோதிக்க உலக சுகாதார நிறுவனம் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக டாக்டர் ஹம்தானி தெரிவித்தார். உரிய உபகரணங்களை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

இலங்கையின் வேலையின்மை வீதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4.3 சதவீதமாக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டை போன்றே 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் வேலையின்மை வீதம் 5.7 சதவீதமாகும் . புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் 373,272 தனிநபர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகையில் 4.3 சதவீதமாகும். 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் பொருளாதார ரீதியாக இயங்குவோர் தொகை 8,761,803 ஆக இருந்தது. அதில் 64.6 வீதம் ஆண்களும், 35.4 வீதமானவர்கள் பெண்களுமாவர். பொருளாதார ரீதியில் இயங்கும் மக்கள் தொகையில், 4,884,513 க்கும் அதிகமானோர் பணியாளர்களாகவும், 226,907 பேர் முதலாளிகளாகவும், 2,804,934 பேர் சொந்த தொழில்புரிபவர்களாகவும், 472,176 பேர் குடும்பப் பணியாளர்களாகவும் பணிபுரிகின்றனர். இலங்கை சனத்தொகையில் 1,253,145 பேர் அரச துறையில் பணியாற்றுவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களிலும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலையிலும் இரண்டு நாட்கள் இணையவழி ஊடாகவும் / வீட்டில் இருந்தும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மிகவும் ஆழமாக சிந்திப்பதும் உங்களை சோர்வடையச் செய்யும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அலுவலகத்தில், ஒருநாளின் முடிவில் நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் அதிகமாக யோசித்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். சாம்பல் நிறத்தின் பயன்பாடு எந்த விடயத்துக்கும் சாம்பல் நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துவது மன சோர்வுக்கு வழிவகுக்கும். அத்துடன் முடிவுகளை எடுப்பதை கடினமாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானிகள், வேலை நாளின் போது இரண்டு குழுவினரின்; மூளைகளில் உள்ள வேதியியல் கலவையை ஆய்வு செய்துள்ளனர். சோர்விற்கான அறிகுறிகள் ஒரு குழுவிற்கு எளிதான பணிகள் வழங்கப்பட்டன, மற்றொரு குழுவுக்கு அறிவாற்றல் பணிகளை மேற்கொள்ளும்படி கூறப்பட்டது. இதன்போது சோர்வுக்கான அறிகுறிகள் மிகவும் சிக்கலான பணிகளைச் செய்யும் குழுவினர் மத்தியில் இருந்தே கண்டறியப்பட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Read More

கிளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லிகள் பதிவாளரின் பரிந்துரையின் பேரில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தின் படி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு களைக்கொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும் இறப்பருக்கு கிளைபோசேட் பயன்பாடு மூன்று ஆண்டுகளுக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் மலர் வளர்ப்புத் தொழிலில் நோய் நீக்கம் மற்றும் நோயுற்ற கரும்புச் செடிகள் மற்றும் தென்னை மரங்களின் இலைவாடல் நோயை அகற்றுவதற்காக கட்டுப்பாட்டு அளவில் கிளைபோசெட்டை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் 100 % இயற்கை விவசாயத்திற்கு செல்ல அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்ததால் 2021 ஆம் ஆண்டில் கிளைபோசெட் மீண்டும் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து, களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை கடந்த 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More