Author: admin

நாட்டிற்கு பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்திய முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு உத்தியோகபூர்வ கோரிக்கையை விடுக்க பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். ஆனாலும், அவர் எம்.பி. பதவியில் இருந்து விலகத் தயாராக இல்லை என்று தெரியவருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், அவரை பதவி விலக உத்தியோகபூர்வாக வலியுறுத்த தீர்மானித்ததாக தெரிவித்தார். “ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் அவர் (ரஹீம்) செய்தது கண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். ரஹீம் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா அல்லது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? என்பது பிரச்சினை அல்ல” என காரியவசம் தெரிவித்தார். எவ்வாறாயினும், அத்தகைய கோரிக்கையை கருத்தில்…

Read More

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். அதற்கமைய, நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 கதா’ நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் அருகிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று விரல் அடையாளம் பதித்த பின்னர், ஒன்லைன் முறையின் மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். 50 பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளம் பெறும் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்களை…

Read More

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று (மே 30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைக் கண்ட அமெரிக்க டொலர் மதிப்பு நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்கள் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 287.09 ரூபாவிலிருந்து 288.06 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 302.53 ரூபாவிலிருந்து 303.55 ரூபாவாக அதிகரித்துள்ளது. கொமர்ஷல் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 287.03 ரூபாவிலிருந்து 288.78 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 300 ரூபாவிலிருந்து 301 ரூபாவாக அதிகரித்துள்ளது. சம்பத் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 290 ரூபாவிலிருந்து 291 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 302 ரூபாவிலிருந்து 303 ரூபாவாக அதிகரித்துள்ளது

Read More

இந்தியாவில் உள்ள ஐந்து கோழிப்பண்ணைகளில் இருந்து தினமும் பத்து லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக வணிக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். இந்தியாவில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு விஜயம் செய்த கால்நடை உற்பத்தி திணைக்களம் மற்றும் அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனத்தின் மூன்று அதிகாரிகள் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் மேலும் மூன்று பண்ணைகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாளொன்றுக்கு பத்து இலட்சம் வீதம் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாட்டின் பல இடங்களிலிருந்து இவ்வாறான குழுக்கள் தோன்றி அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் வகையில் திட்டமிட்டு செயற்படுவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இதுபோன்ற நாசகார செயல்களை கண்காணித்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விடயங்கள் சமூகத்தை சென்றடையும் முன்பே தடுக்கும் பொறுப்பு புதிதாக நிறுவப்பட்டுள்ள புதிய பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக புதிய பொலிஸ் பிரிவு மிக விரைவில் ஸ்தாபிக்கப்படும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

Read More

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக விடைத்தாள் திருத்தும் உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க நேற்று (29) முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன . விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜூன் 15 என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்படி உத்தியோகத்தர்கள் தமது விண்ணப்பங்களை onlineexams.gov.lk/eic இணையதளத்தின் ஊடாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்க முடியமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Read More

வேலைவாய்ப்பு என்ற போர்வையில் மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்கள் ஆறு பேர் பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரில் அவர்கள் சிக்குண்டிருந்தநிலையில் மியன்மார் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக மியன்மாருக்கான இலங்கைதூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளை தொடர்ந்தே மியன்மார் அதிகாரிகள் இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தென்கிழக்காசிய நாடுகளில் இயங்கும் திட்டமிட்ட ஆள்கடத்தல் கும்பலிடம் சிக்கிய இலங்கையர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இலங்கையர்கள் கடந்த வியாழக்கிமை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

Read More

16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை சென்னை அணி கைப்பற்றியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இன்றைய இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித் தலைவர் மஹேந்திரசிங் தோனி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். இதற்கமைய, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக சாய் சுதர்ஷன் 96 ஓட்டங்களையும், ரித்திமான் சஹா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். சாய் சுதர்ஷன் 47 பந்துகளுக்கு முகங்கொடுத்து 8 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் சென்னை அணியின் மத்தீஷ பத்திரண இரு விக்கெட்டுக்களையும், தீபக் சஹார் ஒரு விக்கெட்டையும், ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த…

Read More

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)

Read More

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய அமைப்பு என்பன தெரிவித்துள்ளன. 2023 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டுப் பணி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி 3.9 மில்லியன் மக்கள் அல்லது மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் மிதமான கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இது கடந்த ஆண்டு ஜூன்- ஜூலையில் இருந்ததைக் காட்டிலும் 40 சதவீதம் குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடைக் காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னேற்றங்கள் இருக்கின்றபோதும், சில மாவட்டங்களில் குறிப்பாகக் கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது. பெருந்தோட்டத் துறையின், சமூகங்களுக்குள்ளும், அன்றாடக்…

Read More