பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலஙகைக்குமிடையே உள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்ட, இலங்கையில் உள்ள துறைமுகங்களில் மிக முக்கியமான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, மேலும் இந்த திட்டேத்தினை செயல்படுத்தும் முகவர் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகும். இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டதுடன் டொலர் கடன் வரி ஒப்பந்தம் 2018 ஜனவரி 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இந்தியாவிலிருந்து நேரடியாக பொருட்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும், மேலும் இது உள்நாட்டு துறைமுகங்களுக்கிடையில் போருட்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை திறம்பட செய்யும் என…
Author: admin
கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு பின்னர் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். பெற்றோருக்கு ஒரே பிள்ளையான குறித்த 15 வயது சிறுமி வீட்டிலிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார் . குறித்த சிறுமி கண்டி புஸ்ஸலாவவை பகுதியை சேர்ந்தவர் எனவும், புஸ்ஸல்லாவ காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதிச் செயலாளர் கிருஷாந்த கபுவத்த தெரிவித்தார். கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பான வழக்குக்கு செலவழிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் நிதி ஒதுக்கீடு இல்லை என அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதிச் செயலாளர் கிருஷாந்த கபுவத்த தெரிவித்துள்ளார். தனுஷ்க குணதிலக்கவை காப்பாற்ற முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் அதற்கான தீர்வுகளை அவரிடமிருந்து பின்னர் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
புத்தளம் – உடப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (14) மாலை உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதி கஜித் (வயது 28) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடப்பு – பாரிபாடு கடற்கரையோரத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நால்வரே மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழந்த நபரின் சடலம் உடப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த வழிப்பறி தொடர்பான சி.சி.ரி.வி. பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது. சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளுக்கு தேவையான அறிவு, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் புரிதலை வழங்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (14) சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனவும் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி பயிராக இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டததை முன்வைத்து உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.
இன்று (14ம் திகதி) கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் கிலோ மீன்கள் வலையில் சிக்கியதாக வாத்துவ தல்பிட்டிய பகுதி மீனவர்கள் தெரிவிகின்றனர். இன்று அதிகாலை வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் இராணுவ சுற்றுலா விடுதிக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் இந்த மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன . இத்தகவல் அறிந்து வட்டுவ தல்பிட்டிய கடற்கரைக்கு மீன்களை கொள்வனவு செய்ய பெருமளவிலான மக்கள் வந்திருந்தனர், மேலும் வலையில் சிக்கிய மீன்களின் சில்லறை விற்பனை ரூபா ஒரு கோடியை நெருங்கும் என்று கூறப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பஸ்கள் அனைத்தும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) முதல் இயங்காது என கூட்டுப் போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர்.சம்பத் ரணசிங்க தெரிவித்தார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவானது நெடுஞ்சாலை பஸ்களில் நியாயமற்ற முறையில் டெண்டர் கட்டணத்தை அறவிடுவதாகவும் அதற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் இயங்கும் அனைத்து பஸ் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அந்த கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய தொலைபேசி பழுதுபார்க்கும் நபர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியொருவர் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் தனது தொலைபேசியை பழுது பார்க்க கொடுத்து சில மணித்தியாலங்களின் பின்னர் அதனை வாங்கியுள்ளார். இதன்போது கைத்தொலைபேசியை சோதித்த போது தொலைபேசியில் இருந்து தனது முகநூல் கணக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன நீக்கப்பட்டிருந்தமையினால் மீண்டும் குறித்த நபரிடம் கூறி புதிய மின்னஞ்சல் முகவரி, முகநூல் கணக்கென்பனவற்றினை உருவாக்கியுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, பலர் சிறுமியை தொலைபேசியில் அழைத்து, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்யாதீர்கள்” என்று திட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சந்தேகமுற்று சிறுமியின் முகப்புத்தக கணக்கினை சோதித்த போது காசுக்காக விற்பனை செய்பவர் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், சிறுமியின் முகப்புத்தக கணக்கினை பின்…