யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது. நேற்று (22) மாலை இளைஞர்கள் சிலர் தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இதன்போது ஒரு இளைஞர் தவறி விழவே ஏனையவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு தவறி விழுந்துள்ள நிலையில் இளைஞனைத் தேடும் பணியில் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். தப்பி சென்றுள்ளவர்களில் மூன்று இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Author: admin
உலகக்கிண்ண உதைபந்து போட்டி கட்டாரில் கடந்த 20 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். உலகக்கிண்ண உதைபந்து போட்டி தொடங்கிய நாளன்று தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் டி-சர்ட்டுகளை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர். அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லத்தில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் எத்தனை பேருக்கு காயம் ஏதும் ஏற்பட்டது? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. உள்ளூர் பிரமுகர் ஒருவர் இரு அணி ரசிகர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்த மோதல் தொடர்பாக புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோல்…
8-வது T 20 உலககிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றயது.. அந்தவகையில் 9-வது T 20 உலகக்கிண்ணத் தொடரை மேற்கிந்திய தீவுகள் , அமெரிக்கா நாடுகள் இணைந்து 2024-ம் ஆண்டில் நடத்தவுள்ளன. முந்தைய இரு உலகக்கிண்ணப் போட்டிகள் முதல் சுற்று, அதன் பிறகு சூப்பர்12 சுற்று, அரைஇறுதி, இறுதிப்போட்டி என்ற முறையில் நடத்தப்பட்டன. ஆனால் 2024-ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த உலகக்கிண்ணத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டியல் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும். அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும். இந்த போட்டிக்கு ஏற்கனவே 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன.…
சிறுவர்களுக்கு இன்ப்ளுவென்சாவுக்கு இணையான வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருவதாக விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்த தொற்றுக்கு உள்ளாகும் சிறார்களுக்கு காய்ச்சல், தலைவலி, தடிமன், தும்மல், உடல் வலி, வாந்தி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் எனவும் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறார்களுக்கு நுரையீரலுடன் தொடர்புடைய நோய் நிலைமைகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கார்கில் மாவட்டத்தில் இன்று காலை 10.05 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் கார்கிலுக்கு வடக்கே 191 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சுதந்திர தினத்தன்று கட்டண அறவீடுகளின்றி தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்கும், கட்டணக்கழிவுடன் திரைப்படங்களை பார்க்கவும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. அதன்படி, இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்/இடங்களை இலவசமாகப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. அத்துடன், அன்றைய தினம் நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளில் 50% கட்டணக் கழிவுடன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ தீர்மானிக்கவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த பிரதேசங்களில் இதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கும் இந்த கொடுப்பனவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி, இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனை அண்மித்த கடல் எல்லைகளின் பாதுகாப்பிற்காக முப்படையினரையும் அழைக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானியின் மூலம் இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினர் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இப்போது வடக்குக்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள தானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐ.நா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார். வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை ஐக்கிய நாடுகள் சபையே இன்று புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி…
குஜராத், ஹிமாசல பிரதேசம் தவிர்த்து நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிவைக்கவுள்ளார். மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த ஒக்டோபரில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார். இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது கட்டமாக 71,000 பேருக்கு காணொளி முறையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால், இவ்விரு மாநிலங்கள் தவிர்த்து நாடு முழுவதும் 45 இடங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.