Author: admin

மோட்டார் சைக்கிள் துப்பாக்கிதாரிகளால் ஜூன்- ஜூலை மாதங்களில் மாத்திரம் 17 பேர் சுட்டுக்கொலை செய்தி தொகுப்பு : நியூஸ் 1st தமிழ்

Read More

காலி முகத்திடல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் கடற்பகுதியில் இன்று அதிகாலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் 40 வயதுடைய ஒருவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

Read More

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் அலுவலகத்திலுள்ள கழிவறையில் இருந்து எரிபொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, அலுவலக கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், 10 லிட்டர் பெட்ரோல், 10 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 50 லிட்டர் டீசல் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், இது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read More

இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் மரணம், டுபாய் இருந்து கேரளாவுக்குத் திரும்பிய 22 வயது இளைஞரே இவ்வாறு மரணித்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதே வேலை, குரங்கு அம்மை பாதிப்பை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை அத்துடன் யாருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Read More

நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகை மீனவர்களுடன் மீட்ட இலங்கை கடற்படையினர் படகின் பழுதை சரி செய்த பின் படகில் இருந்த மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக ராமேஸ்வரம் திருப்பி அனுப்பியுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த மனிதாபிமான செயல் ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (30) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் திடீரென படகொன்றிலுள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகில் கடல் நீர் புக ஆரம்பித்தயைடுத்து படகு மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்க தொடங்கியது. அதை கவனித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் உடனடியாக மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் பழுதான படகை இலங்கை கடற்படை வீரர்கள் சர்வதேச கடல் எல்லை வரை…

Read More

நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரம் அல்லது QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த நடைமுறை தவிர்ந்த ஏனைய அனைத்து திட்டங்களும் இரத்து செய்யப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் இருப்புகளை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

ச்செசி (Chassi) இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாத வாகனங்களை வாகன வருமான அனுமதி பத்திர இலக்கத்தை கொண்டு QR முறைமைக்கு பதிவு செய்ய முடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நாளை (31) முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துவிட்டு பெற்றோருடன் வாழ்ந்து வரும் தனது மனைவியை வீடு புகுந்து கடத்திச் சென்ற குறித்த பெண்ணின் கணவர் அவருடைய பெற்றோர் உட்பட கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் முடித்துள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவனைவிட்டு பிரிந்து சென்று தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்ற அவர் கணவனிடம் இருந்து விவாகரத்து கோரி அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று (29) காலையில் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்த கணவர் அவரது பெற்றோர் உட்பட…

Read More

மெதிரிகிரிய மஹா அம்பகஸ்வெவ பிரதேசத்தில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ள ரைஸ் குக்கரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக நேற்று (29) காலை மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நாகரபுர மஹா அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். மெதிரிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அனுமதிப்பத்திரமின்றி, பாதுகாப்பற்ற முறையில், எரிபொருளை சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெயாங்கொடை – நயிவல பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் 71 லீற்றர் டீசலும், 105 லீற்றர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருந்த 24 பேர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, 6,610 லீற்றர் டீசலும், 606 லீற்றர் பெற்றோலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Read More