Author: admin

கரடியநாறு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை பிரதேசத்தில் யானை தாக்கியதில் வயோதிப பெண் ஒருவர் நேற்று (01) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெபியபுல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான (42) வயதுடைய நவரெட்ணம் புஸ்பவதி என்பவரே இவ்விபத்தில் மரணமானவராவார். கடந்த 28ஆம் திகதி தனது வதிவிடத்தில் இருந்து கோப்பாவெளி பிரதேசத்தில் உள்ள கோயிலுக்கு வழிபாட்டிற்காக சென்று கொண்டிருக்கும் போது வீதியோரத்தில் மறைந்திருந்த யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தனே, வங்கதேசத்திற்கு எதிரான “அற்புதமான சண்டையில்” வெற்றி பெற்று, “உலகத் தரம் வாய்ந்த ஆட்டத்தை” வெளிப்படுத்தியதற்காக, இலங்கை கிரிக்கெட் வீரர்களை சமூக ஊடக தளமான ட்விட்டரில் பாராட்டி மகிழ்ச்சியடைந்தார். இந்த விர்ச்சுவல் நாக் அவுட் போட்டிக்கான உற்சாகத்தை கூட்டிய போட்டிக்கு முந்தைய சர்ச்சையை அடுத்து ஜெயவர்த்தனே சில வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தார். பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய அணியின் இயக்குநருமான காலித் மஹ்முத், இந்த இலங்கை அணியில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாததை சுட்டிக்காட்டி, போட்டிக்கு முன்பு ஜெயவர்த்தனேவை கோபப்படுத்தினார்.

Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான யாப்பை திருத்தியமைப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. கட்சி தலைவருக்கான அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில் முக்கியமான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. உப தலைவர்கள் மற்றும் பொருளாளரை நீக்கும் அதிகாரம் தலைவருக்கு இருக்கின்றது. இந்த யோசனைக்கு மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அத்துடன், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 இல் இருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட உப தலைவர்கள் மற்றும் உப தலைவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கட்சி யாப்பில் மேலும் சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

Read More

மாதிவெல சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தினுள் சொகுசு ஜீப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொகுசு ஜீப் வாகனம் மீது மோதியதில் முச்சக்கர வண்டி ஒன்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. விபத்து தொடர்பில் ஜீப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நேற்று(31) காலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்தார். குறித்த பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு  ஸ்தலத்தில்  மரணமடைந்திருந்ததுடன்  சம்பவ இடத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவியின் கணவர் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி 5ஆம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய  அக்பர் அலி பாத்திமா அஸ்பா  என்பவராவார். இந்நிலையில்.சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்டார். இதையத்து நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் …

Read More

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நன்மைகள் மற்றும் பணியமர்த்தும் பதிவுக்கான சந்திப்புகளை பதிவு செய்ய, தொழிலாளர் அமைச்சகம் 1958 ஹாட்லைனையும், பொது மக்களுக்கு நியமனம்.labourdept.gov.lk என்ற இணைய போர்ட்டலையும் நிறுவியுள்ளது. காலையில் கோப்பினை சமர்ப்பித்தால் மறுநாள் மாலை வரை வேலைகளை முடிக்க முடியாமல் வரிசையில் நின்று வீணடிக்கப்படுவதாக தொழிலாளர் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேரம். இதன் விளைவாக ஆன்லைன் சந்திப்பு அட்டவணையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார். பொதுமக்கள் நேரத்தை வீணடிப்பதை விரும்புவதில்லை, எனவே அவர்கள் இப்போது தொலைபேசி அல்லது ஆன்லைன் வழியாக சேவை, நாள் மற்றும் நேரத்தை இரண்டு நிமிடங்களில் முன்பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கூறினார். இந்த நடவடிக்கையானது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான சேவைகளை அணுகுவதற்கு மக்கள் காத்திருக்க வேண்டிய வரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சேவையின் மூலம்,…

Read More

வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ கைத்தொழில் துறைக்குத் தேவையான சீமெந்து, இரும்பு போன்ற மூலப்பொருட்களின் விலை தொடர்பில் நிலவும் பிரச்சினையை தீர்க்க எதிர்வரும் வாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்புக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும் நாட்டில் உற்பத்தியை உயர்த்தி தன்னிறைவு நிலையை உருவாக்கி உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை வரலாற்றில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அரிசி தட்டுப்பாடு நிலவுவதாகவும் உணவு இருப்பு வைத்து நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 1, 2022 வரை கான்பூர், ராய்ப்பூர், இந்தூர் மற்றும் டேராடூனில் நடைபெறவுள்ள சாலை பாதுகாப்பு உலகத் தொடரின் (RSWS) இரண்டாவது பதிப்பில் நடப்புச் சாம்பியனான இந்தியா லெஜண்ட்ஸை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வழிநடத்துவார். தொடக்க ஆட்டத்தை கான்பூரும், இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை ராய்ப்பூரும் நடத்தும். நியூசிலாந்து லெஜண்ட்ஸ் இந்த பதிப்பில் புதிய அணியாகும், மேலும் அவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய லெஜண்ட்ஸ் அணிகளுடன் இணைந்து 22 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதன்மையாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். நாடு மற்றும் உலகம் முழுவதும் சாலைப் பாதுகாப்பு உலகத் தொடர் (RSWS) ஆனது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் & விளையாட்டு அமைச்சகத்தால் ஆதரிக்கப்படுகிறது. 27th Sports,…

Read More

பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உதவிகளைப் பெறுவதில் தவறில்லை எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து உதவிகளைப் பெற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

சிகரட்டுக்களின் விலை அவற்றின் வகைகளுக்கு அமைவாக விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 3, 5, 10, 15 ஆகிய விலைகளினால் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் வெட் வரி 12 வீதம் முதல் 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More