Author: admin

இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். நேற்று இரவு (03) நடைபெற்ற 3வது அரையிறுதியில் போட்டியிட்ட யுபுன் அபேகோன் 4வது இடத்தை பிடித்திருந்த போதும், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்திருந்தார். நேரடி தகுதியை பெறாவிட்டாலும், சிறந்த நேரப்பிரதியை கொண்டிருந்ததால், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு இவருக்கு கிட்டியிருந்தது. யுபுன் 100 மீற்றர் ஓட்டத்தின் முதல் சுற்றை 10.06 செக்கன்களில் நிறைவுசெய்திருந்த போதும், அரையிறுதியில் கடுமையான போட்டிக்கு மத்தியில் 10.20 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்து, 4வது இடத்தை பிடித்திருந்தார். அரையிறுதியில் இங்கிலாந்து வீரர் நெதனீல் மிட்செல் பிலெக் முதலிடத்தையும், வேல்ஸின் ஜெரமியாஹ் அஷு இரண்டாவது இடத்தையும், கானாவின் பென்ஜமின் அஷமாட்டி 3வது இடத்தையும் பிடித்துக்கொண்டனர அரையிறுதிப்போட்டிகளின் நிறைவில், சுமார் 2 மணித்தியாலங்களுக்கு பின்னர் இறுதிப்போட்டி இன்று அதிகாலை (04) 02.00 மணிக்கு ஆரம்பமாகியது. இறுதிப்போட்டியை பொருத்தவரை பொதுநலவாய விளையாட்டு விழாவின்…

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

Read More

மின்சார விநியோகம், எரிபொருள் மற்றும் பெற்றோலிய பொருட்கள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இரு நாடுகளுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவைத் தொடர ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியவை நியமிக்க சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார். புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற உள்ளது. சனத் ஜயசூரிய உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர், மேலும் அவர் தானாக முன்வந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளை இலக்காகக் கொண்ட இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

“கோட்டாகோகம” ஆர்பாட்டக்காரர்கள் இன்னும் ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளை காலி செய்ய எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆர்பாட்டக்காரர்களின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் குழு அப்பகுதியில் பொது அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 5.00 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியை காலி செய்யுமாறு ஆர்பாட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை உறுதிப்படுத்தியது.

Read More

மூத்த தொழிற்சங்கவாதியான ஜோசப் ஸ்டாலின் மற்றும் தேசிய பிக்கு முன்னணி பிக்கு கொஸ்வத்தே மகாநாம தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களில் இருவரும் முக்கிய பங்கு வகித்திருந்தனர்.

Read More

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் டீசலை பதுக்கி வைத்து கூடிய விலைக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் (02) செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 1510 லீற்றர் டீசலையும் காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையில் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போது இந்த டீசல் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பிரதேசத்தில் டீசலை பதுக்கி வைத்து கூடிய விலைக்கு விற்பனை செய்வதாக காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இந்த டீசல் கைப்பற்றப்பட்டதாகவும் இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட டீசலையும் குறித்த சந்தேக நபரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது…

Read More

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விருமனின் மதுர வீரன் பாடலின் இசை வெளியீடு இன்று (03) நடைபெறுகிறது. மதுர வீரனின் விளம்பரம் ‘சோனி மியூசிக் சவுத்’தின் யூடியூப் சேனலில் திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. அந்த காட்சிகளில் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் குரல் கொடுத்துள்ள இந்த காதல் பாடலை ராஜு முருகன் எழுதியுள்ளார். பாடல் விளம்பரத்தை இங்கே பார்க்கவும்: இந்த பாடலை ரசிகர்கள் ரசித்து, திரைப்பட வெளியீட்டில் ஆவலாய் உள்ளனர். மேலும், மதுர வீரனில் அதிதியின் குரலைக் கேட்டு அவரது ரசிகர்கள் வியந்துள்ளனர். ஒரு பயனர் எழுதியதாவது, “இந்தப் பாடல் நிச்சயமாக ஹிட். யுவன் மற்றும் அதிதியின் குரல் மிகவும் தெளிவாக உள்ளது மற்றும் பாடலுக்கு கிக் சேர்க்கிறது. சூப்பர்.’’ இன்னொருவர் எழுதினார், “அண்ணன் யுவன் ஷங்கர் ராஜாவின் குரல் சிறந்தது. இந்த நாட்களில் நான் அவருடைய பாடல்களை மட்டுமே கேட்கிறேன். விரைவில் இதையும்…

Read More