Author: admin

பல நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை நோய் தொடர்பாக நாட்டு மக்கள் அனாவசியமாக பயப்பட தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரை உலகளாவிய ரீதியாக குரங்கம்மை நோய் காரணமாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோய் அறிகுறி தொடர்பில் சாதாரண PCR பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். தற்போது உலக நாடுகளில் குறைந்த வீரியம் கொண்ட நோயாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர். இலங்கை மக்கள் இது தொடர்பில் அனாவசியமாக பயப்பட தேவையில்லை. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, களைப்பு போன்ற அறிகுறிகள் மூலமே இந்த நோய் ஏற்படக் கூடும். கொவிட்-19 நோயை போன்ற வேகமாக பரவக் கூடிய வல்லமையை இது கொண்டிருக்காது என கலாநிதி சந்திம ஜீவந்ர மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கடந்த 18ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த வெளிவிவகார அமைச்சர், தீர்மானத்தின் உள்ளடக்கம் மற்றும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானுடன் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சட்டரீதியான தாக்கங்கள் கொண்ட இத்தகைய தொழில்நுட்பச் சொற்களை கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர், கனடா அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர் எவரேனும் அதை அங்கீகரிப்பதால் ஏற்படும் ஆபத்துக்களையும் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சர், தீர்மானத்தின் பிழையான மற்றும் பக்கச்சார்பான தன்மை மற்றும் அத்தகைய நடத்தையின் விளைவாக இலங்கை தொடர்பில் பொதுவான சூழலில் உருவாகியுள்ள எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் பிழைகளை சரிசெய்வதற்கு கனடா…

Read More

இது தியதலாவ மருத்துவமனையில் எனது 86 தாவது மரண பரிசோதனையும் மிக வேதனைக்குரிய மரணமுமாகும். பிறந்து இரண்டே நாட்களான இந்தச்சிசுவை தாய்ப்பால் பருகாமல், மஞ்சள் நிறமாகி இரத்தத்தில் சக்கரை அளவு குறைந்ததால் ஹல்தும்முல்ல வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்காக தந்தை பெற்றோல் தேடி ஒரு மணி நேரம் அலைந்து திரிந்து  கொண்டுவரப்பட்டபோது குழந்தையின் இரத்தத்தில் சக்கரை அளவு 22mg/dl. அங்கிருந்து தியதலாவ மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே குழந்தை மூச்சுத் திணறியபடி இருந்திருக்கிறது. தியதலாவ வைத்தியசாலை ETU வில் அனுமதிக்கப்பட்டு அங்கே குழந்தை இறந்து விட்டது. அந்த ஒரு மணி நேரம் பிந்தியிருக்காவிட்டால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம். தங்களுக்கு எதுவும் நேரும்வரை அடுத்தவர் துன்பம் நமக்கு புரியாது. ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்து இரண்டு நாட்கள் கையில் கொஞ்சிய பிஞ்சுக் குழந்தை ஒரு லீற்றர் பெற்றோல் இல்லாததால் இறந்து போனது என்கிற துக்கம் அந்தப் பெற்றோருக்கு  வாழ்க்கை முழுவதும் வதைக்கப் போகிறது. இறந்த பிஞ்சு உடலை வெட்டுவதற்கே…

Read More

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குழாமினரின் நலன் கருதி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. அத்துடன் விசேட பேருந்து சேவைகளும் இன்று முதல் இடம்பெறவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.அதே நேரம், இன்று முதல் நாளாந்தம் 8,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, திட்டமிடப்பட்ட நேர அட்டவணைக்கு அமைய சகல புகையிரதங்களையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி சூழலில் குறித்த பரீட்சையினை தடையின்றி நடத்தி செல்வதற்காக பரீட்சை பணிக்குழாமினர் செல்லும் வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள அனுமதியளிக்குமாறு பொதுமக்களிடம் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நொரோச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்தின் ஜெனரேட்டரின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து இன்று (22) மீண்டும் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக 260 மெகா வாட்ஸ் மொத்த கொள்ளளவு நாளை இரவுக்குள் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும். வரவிருக்கும் நாட்களில் மின்வெட்டு குறையும் என்று நம்புகிறோம்.

Read More

பிரதமர் ரணில் விக்ரசிங்க அலரி மாளிகையில் குடியேறுவதில்லை என தீர்மானித்துள்ளார். பிரதமரின் செயலகத்தின் செலவுகளை 50 வீதமாக குறைக்குமாறு பிரதமர் இதற்கு முன்னர் உத்தரவிட்டிருந்ததுடன் அந்த செலவு குறைப்பு தனக்கும் பொருந்தும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். தான் தனது தனிப்பட்ட சொந்த வீட்டில் குடியிருப்பதாகவும் கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமரின் செயலகத்தில் இருந்து கடமைகளை செய்யவும் முடிவு செய்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போதும், ரணில் விக்ரமசிங்க, அலரி மாளிகையில் குடியிருக்கவில்லை எனவும் அரச பணிகளுக்காக மாத்திரம் அலரி மாளிகையை பயன்படுத்தி வந்தார் எனவும் பிரதமர் செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Read More

பொருளாதாரத்தை ஸ்திர படுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களைச் செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த 36 வயதான நபரொருவர் வெலிக்கடை பிரதேசத்தில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். பண சலவை சட்டத்தின் அடிப்படையில், பணமோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த 36 வயதான நபரொருவர் வெலிக்கடை பிரதேசத்தில் வைத்து, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். பண சலவை சட்டத்தின் அடிப்படையில், பணமோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கு பல நாடுகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டுக்கான மிக மோசமான காலம் இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வாக்குறுதியளித்த பணம் கிடைத்தவுடன் நாட்டுக்கு மருந்து விநியோகத்தை மீண்டும் தொடங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விடயம் தொடர்பாக, இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்ததாகவும், இந்தியாவிடமிருந்து சாதகமான கருத்துக்களைப் பெற்றதாகவும் கூறினார். சில மருந்துகளை கொழும்புக்கு வெளியில் உள்ள வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

Read More

தமிழ்நாட்டின் அத்தியாவசியப் பொருட்கள் இன்று (22) கொழும்பு துறைமுகத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் விநியோகக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான உதவி பொருட்கள் 4 மில்லியன் குடும்பங்களுக்கு நாடளாவிய ரீதியில் விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்களால் இந்த விநியோக நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். முதற்கட்டமாக கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இந்த உதவிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், வடக்கு மற்றும் கிழக்கிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை பகுதிகளிலும் இந்த உதவிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அபேவர்தன மேலும் தெரிவித்தார். இந்த உதவி பொருட்களில் 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால் பவுடர் மற்றும் 25 டன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்…

Read More