நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் மற்றும் வீதித் திட்டங்கள் நிர்மாணிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. ஒப்பந்ததாரர்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நிர்மாணத் துறையை தொடர்ந்து செயற்படுத்தல் மற்றும் இத்துறையின் தொழில் பாதுகாப்பிற்காக பின்பற்றப்பட வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்த ஜனாதிபதி, இது தொடர்பில் மேலும் கலந்துரையாடி பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் முன்மொழிந்தார். நிர்மாணத்துறையின் மேம்பாட்டிற்காக விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்குமாறும் களப்பணியாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்…
Author: admin
காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது. குறைந்த தேவை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கோவிஷீல்ட் உற்பத்தியை நிறுவனம் நிறுத்தியது என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா, அஸ்ட்ராஸெனெகாவின் வக்ஸெவ்ரியா உள்ளூர் தடுப்பூசி அளவை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் டோஸ்களில் 90 சதவீதத் க்கும் அதிகமானவை கோவிஷீல்ட் ஆகும். இந்தியா இரண்டு பில்லியனுக்கும் அதிகமான அளவு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இந்திய மக்கள்தொகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தது இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 2022இல், இந்தியா சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கும் பூஸ்டர்களை வழங்கத் தொடங்கியது. இது பின்னர் அனைத்து பெரியவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் (2023) ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வவுனியா குடாகச்சக்கொடியவில் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காட்டு யானைகள் கிராமங்களில் பயிர்ச்செய்கை மட்டுமல்ல மக்களையும் தாக்க ஆரம்பித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த கிராமத்தில் விவசாயிகளின் வாழைத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் உள்ளிட்ட பல பயிர்களை காட்டு யானைகள் நேற்று இரவு துவம்சம் செய்துள்ளன. இரவு நேரங்களில் கிராமத்திற்குள் புகும் காட்டு யானை கடந்த வாரம் ஒருவரை தாக்கியதில் முதுகில் பலத்த காயத்தை ஏற்படுத்தியதுடன், குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இக்கிராமங்களை சுற்றி யானை வேலி அமைத்து தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதுவரை தீர்வை வழங்கவில்லை என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதாகவும், இம்முறை பயிர்கள் விளைய ஆரம்பித்துள்ள நிலையில் காட்டு யானைகளினால் சேதங்கள் அதிகரித்துள்ளதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எரிசக்தி துறையின் மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தேசிய சபைக்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய சபையின் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் கலந்துகொண்டனர். இதேவேளை, இலங்கை சூரிய சக்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு ஆற்றல் உற்பத்தித் திட்டங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேசிய சபைக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குழுவுக்கு அறிவித்துள்ளார்.
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படியாக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கருதுவதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஜனநாயக இலட்சினங்களை கொண்டிருந்தது என்றும் 22ஆவது திருத்தச் சட்டமூலம் முற்போக்கான விடயங்களை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். 22ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை. என்பதோடு, அமைச்சரவை நியமனம்,அமைச்சின் செயலாளர் நியமனம் உள்ளிட்ட முக்கிய பல நியமனங்கள் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டி்காட்டினார். மேலும் ஒருசிலரின் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் 22ஆவது திருத்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில்…
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்ட இட்டுகம (செய்கடமை) கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயற்பாடுகள், நிறுத்தப்பட்டுள்ளன. இதன்படி, சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கான, இலங்கை வங்கியின் கணக்கு இலக்கமான 85737373, அக்டோபர் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் தாரக லியன பத்திரன, பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். எனவே இனிமேல் இந்த நிதிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட்-19 சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு மொத்தம் 2,207,164,785.58 (இரண்டு பில்லியன் இருநூற்று ஏழு மில்லியன் நூற்று அறுபத்து நான்காயிரம், எழுநூற்று எண்பத்தைந்து ரூபா மற்றும் ஐம்பத்தெட்டு சதம்) நன்கொடைகளை கிடைத்தன. இந்தத் தொகையில் 1,997,569,456.56 (ஒரு பில்லியன், தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு மில்லியன், ஐந்நூற்று அறுபத்து ஒன்பதாயிரத்து நானூற்று ஐம்பத்தாறு…
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கட்டட பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. குறித்த திருட்டு சம்பவமானது அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் அதன் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் அமைந்துள்ள குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மாலை விற்பனை நிலையத்தினை பூட்டி விட்டு சென்ற அரை மணி நேரத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் விற்பனை நிலையத்தின் மதிலை ஏற்றி பாய்ந்து விற்பனை நிலையத்தில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருடி சென்றுள்ளார். குறித்த திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமராவில் பதிவான நிலையில் அதனை ஆதாரமாக கொடுத்து உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ், தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார். எண் 10, டௌனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தமது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தாம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அரசர் சார்லசிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார். இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை. எனவே, இவரது பிரதமர் பதவிக் காலம்தான் வரலாற்றிலேயே மிகக் குறுகிய பிரிட்டன் பிரதமர் பதவிக் காலமாக இருக்கும்.