Author: admin

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான வரிகள் அரசாங்கத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு தற்காலிகமாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

Read More

யாழ்ப்பாணம் – காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த கடற்கரை பகுதிக்கு கடந்த 24ஆம் திகதி சென்றுள்ளனர். அதன் போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அவர்களை தகாத வார்த்தையால் பேசி, குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்தாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 13 இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, 4 இளைஞர்கள் அரச தரப்பு…

Read More

சுமார் 17 கோடி ரூபா பெறுமதியான 8.5 கிலோ தங்கத்தை நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட 02 பெண்கள் உட்பட நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினரால் நேற்று -30- கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமானின் மஸ்கட்டிலிருந்து நேற்று அதிகாலை வந்திறங்கிய WY 0371 விமானத்தில் வந்த 04 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கடமையாற்றும் ​​இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள், நேற்று அதிகாலை (30) இந்த விமானத்தில் இலங்கைக்கு வந்த ஒரு பெண் உட்பட முதல் மூன்று பயணிகளை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதன்போது, தங்கத்தை மிக சூட்சுமமாக தகடுகளாக தயாரித்து தங்களது பயணப் பொதிகளுக்குள் மறைத்து விமான நிலையத்துக்கு வெளியே எடுத்துச் செல்ல முற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போதே ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 7.5 கிலோ எடை கொண்ட தங்க…

Read More

சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம் அணுகக்கூடிய உலகம் அல்ல சிறுவர்களின் உலகம். அது மிகவும் எளிமையானது. அவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பெரியவர்களாகிய நாம் இதை புத்திசாலித்தனமாக புரிந்துகொண்டு அவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், சிறுவர்கள் வாழ்ந்த சமூகப் பின்னணியில் இருந்து தற்போதைய சமூகப் பின்னணி மிகவும் வித்தியாசமானது என்பது தெளிவாகிறது. இத்தகைய பின்னணியில், நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் சரியான அளவு கலோரி அடங்கிய ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரச தலைவர் என்ற வகையில் எனது கடமையாகும். நாட்டின் தற்போதைய தலைமுறைக்கு போஷாக்கான உணவை வழங்குவதும், எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதுமே இத்தருணத்தில் எனது நோக்கமாகும். நான் முன்வைத்த…

Read More

சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம் அணுகக்கூடிய உலகம் அல்ல சிறுவர்களின் உலகம். அது மிகவும் எளிமையானது. அவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பெரியவர்களாகிய நாம் இதை புத்திசாலித்தனமாக புரிந்துகொண்டு அவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், சிறுவர்கள் வாழ்ந்த சமூகப் பின்னணியில் இருந்து தற்போதைய சமூகப் பின்னணி மிகவும் வித்தியாசமானது என்பது தெளிவாகிறது. இத்தகைய பின்னணியில், நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் சரியான அளவு கலோரி அடங்கிய ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரச தலைவர் என்ற வகையில் எனது கடமையாகும். நாட்டின் தற்போதைய தலைமுறைக்கு போஷாக்கான உணவை வழங்குவதும், எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதுமே இத்தருணத்தில் எனது நோக்கமாகும். நான் முன்வைத்த…

Read More

சர்வதேச சிறுவர் தினத்தை ஒட்டியதாக கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தின் இஸ்லாமாபாத் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று (30) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதேவேளை, சிறுவர் கலை, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றின் இறுதி நிகழ்வுகள் கோலாகலமாகா எதிர்வரும் 2022.10.07 திகதி இஸ்லாமாபாத் சிறுவர் பூங்கா வளாகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து ஊடக மற்றும் டிஜிட்டல் அனுசரணைகளை வழங்குவோர் Public News.

Read More

சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிடப்பட வேண்டிய 9 லட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணபங்கள் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் செய்யப்பட்ட ஐம்பதாயிரம் அட்டைகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் நாளுக்கு நாள் புதிய சாரதி உரிமங்கள் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். அந்நியச் செலாவணி பிரச்சனை ஓரளவுக்கு தீர்ந்தாலும், குவிந்து கிடக்கும் சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிட்டு வழங்குவதற்கு கணிசமான காலம் எடுக்கும் என பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை – நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக காணப்படுகின்றனர். வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்டு அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.

Read More

ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன், புகையிலை போதைப்பாக்குடன், வந்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். குறித்த மாணவன் புகையிலை போதைப்பாக்குடன் வந்திருந்ததை ஆசிரியர் ஒருவர் கண்டுள்ளார். இது தொடர்பில் பாடசாலை அதிபர் ஆசிரியர் தெரியப்படுத்தியிருந்தார். பின்னர் சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சிறுவனின் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்ற ஊர்காவல்துறை சிறுவர் பெண்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவரை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, அவரை அச்சு வேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

Read More

இன்று பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. பாடசாலையின் அதிபர் திருமதி சோபிதா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சிறுவர் தின கொண்டாட்டம் இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஊர்வலமாக ஆரம்பித்து இன்ஸ்பெக்டர் ஏத்தம் சாலம்பையடி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து அங்கே அப்பாடசாலை மாணவச் சிறார்களுக்கு தாக சாந்தி வழங்கப்பட்டதோடு அங்கே சிறு கூட்டம் இடம்பெற்று பாடசாலை ஆசிரியர்கள் உரையாற்றிய பின்னர் மீண்டும் மாணவர்கள் ஊர்வலமாக மகிழ்ச்சியோடு வீதி வழியாக சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. நிறைந்த சிறுவர்கள் பல வர்ண பலூன்களை கையில் ஏந்தியவாறும் சுலோக அட்டைகளே கையில் ஏந்தியவாறும் வந்து மிகவும் சிறப்பான முறையில் இந்த சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Read More