Author: admin

இரத்தினபுரி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் களு கங்கை கசிவு மட்டத்தை எட்டியுள்ளதால் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரியுள்ளது. கனமழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வரா தெரிவித்துள்ளார். இரத்தினபுரியின் மேல் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நிலைமை பெரும்பாலும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களும், அப்பகுதிகளின் ஊடாக பயணிப்பவர்களும் தொடர்ந்தும் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று காலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – அட்டன், நுவரெலியா – டயகம போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்தன. இதனால் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமாகியிருந்தன. இதனையடுத்து, நுவரெலியா வீதி அதிகார சபை ஊழியர்கள், நுவரெலியா இராணுவத்தினர், நானுஓயா பொலிஸார் ஆகியோர் இணைந்து மண்மேட்டை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் ஒரு வழி போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகின்றது. அத்தோடு, இவ்வீதிகளில் பல இடங்களில் ஆங்காங்கே மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வீதிகளின் ஊடாக வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். மேலும் சரிந்து விழுந்துள்ள மண் மேடுகளை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அத்துடன், தமது கட்சி சார்பில் ஜனாதிபதியிடம் 7 அம்ச கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

ஒரே சீனா கொள்கைக்கான உறுதியான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhengong ஐ சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் செய்தியில், ஒரே சீனா கொள்கைக்கான உறுதியான அர்ப்பணிப்பை இலங்கை மீண்டும் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய ஐ.நா. சாசனக் கோட்பாடுகளுக்கு இலங்கையும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்றார். “தற்போதைய உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார். பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகியவை அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதலின்மைக்கான முக்கியமான அடித்தளங்களாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அமெரிக்க அதிகாரி நான்சி பெலோசியின் அண்மைய தாய்வான் விஜயம் தொடர்பில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து…

Read More

ஹட்டன் பன்மூர் குளத்தில் வீழ்ந்த இளைஞன் நேற்று (03) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எபோட்சிலி மொன்டிபெயார் தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய மைக்கல் பவன் எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டியிலிருந்து வரவழைக்கப்பட்ட சுழியோடிகள் மூலம் மீட்கப்பட்ட சடலம் பிரதே பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த முதலாம் திகதி இரவு எட்டு மணியளவில் ஹட்டன் நகரிலிருந்து 02 நண்பர்களுடன் குறித்த இளைஞன் மென்டிபெயார் தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்ற போதே வீதியோரத்திலுள்ள குளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களையும் ஹட்டன் பொலிஸார் கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நேற்று (03) இரவு காலி முகத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி முகத்திடலில் தங்கியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை மாலை 05 மணிக்கு முன்னர் குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் வழங்கிய அறிவித்தலின் பேரில் கூடாரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு போராட்ட களத்தில் சுடர் ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது. காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் இன்று 118வது நாளாக தொடர்கிறது.

Read More

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஓகஸ்ட் 4 ஆம் திகதி வியாழக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஸ்டாலின் நேற்று ஓகஸ்ட் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவை மீறி மே 28ஆம் தேதி கொழும்பு இலங்கை வங்கி மாவத்தையில் போராட்டம் நடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Read More

ஓகஸ்ட் 9 ஆம் தேதி பாராளுமன்றம் கூடுகிறது மற்றும் அடுத்த வாரம் ஓகஸ்ட் 9, 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் அமர்வுகள் நடைபெறும். வரவு செலவுத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், நாளை மறுதினம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிக்கப்படும் எனவும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றம் ஓகஸ்ட் 9 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு கூடும், அதன் பிறகு மாலை 4:30 மணி வரை விவாதம் தொடரும். அடுத்த இரண்டு நாட்களில் பாராளுமன்றம் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை கூடும்” என தஸநாயக்க தெரிவித்தார். ஓகஸ்ட் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய தசாநாயக்க, பல கட்சித் தலைவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அடுத்த வாரம் மூன்று நாட்களிலும் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படும் என்று கூறினார். விவாதம்…

Read More

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியில் அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றது. அத்துடன் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கடித்ததுக்கு சாதகமான பதிலை அனுப்புவதற்கு எதிர்பார்க்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் பல்வேறு விடயங்கள் பாராட்டுக்குரியவை. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சிந்தனைகள் அதில் உள்ளடங்கியிருந்தன. அவற்றை சாத்தியமாக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் அவரது உரையில் வெளிப்பட்டன. அனைத்து தரப்பினரதும் யோசனைகளை பெற்றுத் தருமாறு இப்போதும் அவர் கடிதம் மூலம் எமக்குத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது ஆலோசனைகளுடன் மேலும் சில விடயங்களை உள்ளடக்கி நாட்டை…

Read More