Author: admin

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மேலும், தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்பட்டு, தேர்தலை நடத்தும் திகதியும் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசி கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார். இந்நாட்டில் ஜனநாயகத்தை சீர்குலைத்து தேர்தலை நிறுத்துவதற்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதியே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண் ஒருவரை செருப்பால் தாக்கியதாகக் கூறப்படும் 27 வயதான நபரை பண்டாரவளை பொலிஸாரால் நேற்று கைது செய்யதுள்ளனர். குறித்த சுற்றுலாப் பயணி புதன்கிழமை (21) மாலை உடரட மெனிக்கே புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வெளிநாட்டுப் பெண் புகையிரதத்தில் ஜன்னல் ஓரத்தில் இருந்து செல்லும் போது, புகையிரதத்திற்கு வெளியில் நின்ற இளைஞன் தனது செருப்பை அவர் மீது வீசியுள்ளார். இதன்போது, செருப்பு குறித்த பெண்ணின் முகத்தில் பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பிந்தைய சீன சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு இலங்கையை வந்தடையவுள்ளது. குறித்த சீன சுற்றுலா பயணிகளுடன் மார்ச் 3 ஆம் திகதி ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீன விமானம் புறப்படும். “சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் அவர்களின் குறிப்பிட்ட ஆர்வம் சீனாவுக்கு நெருக்கமான நாடுகளுக்கு உள்ளது” என்று ஷாங்காய் நகரில் உள்ள இலங்கையின் தூதரகத்தின் தூதரக அதிகாரி அனுர பெர்னாண்டோ, சீனா ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார். 20 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு பயணிக்க பயண முகவர் குழுக்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கும் முடிவை சீன கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இ.இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடத்திற்கான பூஜை இடம்பெற்றதுடன், சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளரும் வடமாகாண திரைசேரியின் பிரதம கணக்காளருமான ஜெயராஜா, உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், உத்தியோகத்தர்கள், தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் முதல் வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மாகாண ரீதியான சேவைகள் குறித்த ஆலவலகத்திலிருந்து இடம்பெறவுள்ளது. குறித்த அலுவலகத்தின் சேவைகளை பொதுமக்களும்…

Read More

——- (எம்.என்.எம்.அப்ராஸ்) சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட பனிச்சங்கேனி கண்டத்தில் 16 வாரமாக நடைபெற்ற நெற் பயிர் செய்கை மேற்க்கொள்ளும் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவ பயிற்சி நெறியின் இறுதி நிகழ்வும், அறுவடை மதிப்பீட்டு விழாவும்,சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி எம்.டீ.எம்.நளீர் தலைமையில் நிலையத்தின் விவசாயப்போதனாசிரியர்களின் ஒத்துழைப்புடன் (23)நடைபெற்றது. இதில் பிரதம அதிதிகளாக அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர்,உதவி விவசாயப் பணிப்பாளர் சமந்த குமார,பாடவிதான உத்தியோகத்தர்களான ஏ.ஜெயிலாப்தீன், ஏ.ஐ.ஏ.பெரோஷ்,மல்வத்தை நிலையப் பொறுப்பு விவசாயப்போதனாசிரியர் எம்.டி.ஏ.கரீம்,நிந்தவூர் நிலையப் பொறுப்பு விவசாயப்போதனாசிரியர் பெளசுல் அமீன்,விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாயப்போதனாசிரியர்களான கே.ஆர்.எப். இம்லா,எம்.எச்.எம்.இர்சாத்,டி.ஜானானன் உட்பட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது விவசாயிகளுக்கு இலவசமாக சேதனத் திரவப் பசளைகள்,சேதனப்பீடைநாசினிகள்,கூட்டெரு போன்றன தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்ற வழிகாட்டல்களுக்கு விவசாயிகள் இதன் போது நன்றியினை தெரிவித்தனர்.…

Read More

பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவிற்கு கடந்த புதன்கிழமை(22) நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்றினை கல்முனை மாநகர சபை பெண் உறுப்பினர் முறைப்பாடு ஒன்றினை வழங்கி இருந்தார். இதற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த பாடசாலை மாணவியை காதலிப்பதாக சந்தேகிக்கப்பட்ட திருக்கோவில் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை மாணவியின் ஒத்துழைப்புடன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்தனர். இதன் போது 2 வருடங்களாக காதலிப்பதாக ஏமாற்றி அவ்விளைஞன் அக்கால கட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்துகுறித்த மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன்…

Read More

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்துகொள்ளவில்லை. ஜேர்மனி முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக மொத்தம் 141 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, மாலி, எரித்திரியா மற்றும் நிகரகுவா ஆகிய ஏழு நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன. சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்கவில்லை.

Read More

ஹெட்டிபொல – மடஇன்ன பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 48 வயதான எம்.எம். வசந்த பெர்னாண்டோ என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுண்டவரின் மனைவி சந்தேகத்தின் பேரில், ஹெட்டிபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் 3,000 கிலோகிராம் எடையுடைய போதை பொருள் களஞ்சியத்தில் உள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த போதை பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும், சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Read More

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பரீட்சை அட்டவணை திட்டமிடல் மேலும் தாமதமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்; “.. விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அது ஏனைய பரீட்சைகளையும் பாதிக்கும். எனவே, உரிய மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நேற்று ஆரம்பிக்கப்படவிருந்தும் அது ஆரம்பிக்கப்படாததாலும், விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காததாலும் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பாகும். செயல் முழுமையற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை வழங்க திறைசேரியில் பணம் இல்லை என கூறுவது வேடிக்கையானது. சுதந்திர விழா, குடியரசு அணிவகுப்பு போன்றவற்றை நடத்தி…

Read More