Author: admin

அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு இருவர் படுகாயமடைந்தனர். இது குறித்து தெரிவித்த விர்ஜீனியா பல்கலைக்கழக பொலிஸார். தாக்குதல் நடத்தியவரை தேடும் பணிகள் நடந்து வருவதாகவும் குறித்த சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என விர்ஜீனியா பல்கலைக்கழக நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளதோடு. பல்கலைக்கழகத்தின் அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கபபடும் குற்றவாளியான கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ்ஸின“ புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளதோடு குறித்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Read More

ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தோபாவில் இன்று பகல் 1.38 மணியளவில் 84 கி.மீ. தொலைவில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் உள்ளதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை நிலைகுலையச் செய்கின்றன. சில நேரங்களில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. இந்நிலையிலேயே இன்று பகல் 1.38 மணியளவில், ஜப்பானின் தென்கிழக்கு குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுரை வெளியாகவில்லை.

Read More

நாடு முழுவதும் உள்ள 300 சதொச வர்த்தக நிலையங்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க, கலால் திணைக்களம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் அனைத்து சதொச நிறுவனங்களுக்கும் உடனடியாக மதுபான உரிமங்களைப் பெறுவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், பொதுமக்களின் ஆட்சேபனை மற்றும் சில சதொச வர்த்தக நிறுவனங்கள் அடிப்படை நியமங்களுக்கு இணங்கவில்லை என்பதனால் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விதிகளுக்கு இணங்காத சில சதொச நிறுவனங்களுக்கு இந்த அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுக்கும் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் தேவையான அனுமதிப்பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்டதும், சதொச கடைகளில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கலால் திணைக்களம் இதுவரை சுமார் 6,000 மதுபான உரிமங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

துருக்கியின் மத்திய இஸ்தான்புல்லின் பரபரப்பான பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 81பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சுமார் 16:20 மணியளவில், தக்சிம் சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு கடை வீதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக துருக்கிய நகர ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்தார். சந்தேக நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக உட்துறை அமைச்சர் சுலேமான் சொய்லு தெரிவித்துள்ளார். மேலும், வெடிகுண்டை விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் இந்த தாக்குதலுக்கு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (Pமுமு) பொறுப்பு எனவும் குற்றஞ்சாட்டினார். துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே முன்னதாக, இந்த குண்டுவெடிப்பு ஒரு பெண்ணால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் கூறினார். இஸ்தான்புல்லில் ஒரு ஊடகசந்திப்பில், இதுவொரு கொடூர தாக்குதல் எனவும் பயங்கரவாதத்தின் வாசனை காற்றில்…

Read More

அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று (திங்கட்கிழமை) இந்த பேச்சுவார்தை இடம்பெறவுள்ளது. உலகின் முன்னணி பொருளாதாரங்களைக் கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு பாலியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது. இதில் கலந்துகொள்வதற்காக பாலி வருகை தரும் நிலையில், இவர்கள் பேச்சுவார்தை நடத்தவுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்று இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை அவர் நேரில் சந்தித்துப் பேச இருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 5 முறை காணொளி, தொலைபேசி வாயிலாக அவர்கள் உரையாடியுள்ளனர். பருவநிலை மாற்றம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக போர், கொவிட் தொற்றுப் பரவல், தாய்வான் விவகாரம், உள்ளிட்டவையால் இருநாடுகளுக்கும் இடையே…

Read More

2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரை இலங்கை நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உறுதி செய்தது. அதேவேளை, அடுத்த தொடரை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சிம்பாப்வே மற்றும் நமீபியா கூட்டாக இணைந்து நடத்தும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு பெண்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் தொடர்களை நடத்துபவர்களை ஐசிசி உறுதி செய்தது. மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தொடரின் 2025 பதிப்பை நடத்தும் அதே வேளையில், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகியவை 2027ஆம் ஆண்டு பதிப்பை இணைந்து நடத்துவார்கள். மார்ட்டின் ஸ்னெடன் தலைமையிலான சபை துணைக் குழுவின் மேற்பார்வையில் போட்டி ஏல முறை மூலம் தொடரை நடத்தும் நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

Read More

சூரியவெவ – மஹாவெலிக்கட ஆரா வாவியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்த மூன்று சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்றுப் பிற்பகல் காணாமல்போயிருந்த மூன்று சிறுமிகளில் 10 வயது சிறுமியின் சடலம் நேற்று மாலை கடற்படையினரால் மீட்கப்பட்டது. இந்நிலையில், இன்று பொலிஸ் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், ஏனைய இரண்டு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுடைய இரண்டு சகோதரிகளே இன்று சடலங்களாக மீட்கப்பட்டனர். 8 பேர் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவர்களில் எட்டு மாதக் குழந்தை உட்பட 5 பேரைப் பிரதேச மக்கள் காப்பாற்றியிருந்த போதிலும் மூன்று சிறுமிகள் காணாமல்போயிருந்தனர். மூவரையும் தேடி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போதே அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். நேற்றுப் பிற்பகல் குருநாகலிலிருந்து சூரியவெவ பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற குழு ஒன்று, மீன்பிடிப் படகு ஒன்றில் மஹாவெலிக்கட ஆர வாவியைப் பார்வையிடச் சென்றிருந்தனர்…

Read More

உலக வங்கியின் உதவியுடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட 22,000 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரண்டாவது கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய நேற்று இரவு 8 மணி முதல் உரத்தை இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார். இம்முறை பெரும்போகத்தில் நெல் மற்றும் சோளப் பயிர்களுக்குத் தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி 105 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டை வழங்கியது. அதன் கீழ், 13,000 மெற்றிக் தொன் உரம் இதற்கு முன்னர் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது

Read More