Author: admin

இம்மாதத்தின் பின்னர் ஏனைய நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது முற்றாக நிறுத்தப்படும் என் அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு அறியத் தந்துள்ளார்.

Read More

மோசமான வானிலை காரணமாக அப்-கன்ட்ரி ரயில் சேவைகள் தற்போது நாவலப்பிட்டி வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சு  ஒகஸ்ட் 7 (இன்று) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை முதல் பதுளை வரை சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

அவுஸ்திரேலிய அரசாங்கம் 450 மெற்றிக் டொன் எரிபொருளை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, நன்கொடையாக எரிபொருள் இருப்பு கையகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். இதேவேளை, இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலியா 27,000 லீற்றர் எரிபொருளையும் வழங்கியுள்ளது. ஜெட் விமானத்தின் செயற்பாட்டிற்காக எரிபொருள் இருப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

கடந்த வெள்ளிக்கிழமை(05) முதல் காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டதில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர் என ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

Read More

நவகமுவ பொலிஸ் நிலையத்தினுள் 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக இன்று (07) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

குரங்கு அம்மை நோய் தொற்றாளர்கள் நாட்டில் காணப்படுகின்றார்களா என்பது தொடர்பில் நாளை  முதல் பரிசோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவ தொழிநுட்ப சேவை பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி  சகோதரமொழி  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார் . பொரளை மருத்துவ ஆராச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைத்து  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும்  அவர் தெரிவித்தார்.

Read More

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீன அரசுக்கு சொந்தமான “எக்ஸிம் வங்கி” நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது அரசாங்கத்தை புதிய நெருக்கடியில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடவத்தைக்கும் – மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இதன் விளைவாக உள்ளூர் மக்களின் 2000 வேலைகள் ஆபத்தில் இருப்பதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைக் கருத்தில் கொண்டு சீனாவின் எக்ஸிம் வங்கியின் நிதி விடுவிப்பு முக்கியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திறைசேரி தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த வேலைகளை முடிப்பதாக 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் 33 பில்லியன் ரூபா நிதியில் இதுவரை சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக…

Read More

தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவதாக நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை நித்யா மேனன் தமிழில் தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 18 ஆம் திகதி திரைக்குவரவிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நித்யா மேனன் கலந்துகொண்டு பாடல்கள் பாடி அசத்தினார். முன்னதாக விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன் இணைந்து நடித்த 19(1)(ஏ) என்ற மலையாளத் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹொட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகியிருந்தது. இந்தப் பட நிகழ்வில் இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். சந்தோஷ் வர்க்கி என்பவர் நடிகை நித்யா மேனனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக பேசியது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நித்யா மேனன், “அவர் சொல்வதை நம்பினால் நீங்கள் முட்டாள். அவர் என்னைப் பல ஆண்டுகளாக துன்புறுத்தி வருகிறார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக…

Read More

நாளை(08) ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம் வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது. வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு வீட்டிலிருந்து கல்வி நடவடிக்கையை முன்னெடுத்தல் அல்லது இணைய வழி மூலமான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சேவை அசௌகரியங்கள் காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் 3 தினங்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இவ்வாறான பாதிப்புகள் இல்லாத மாவட்டங்களில் வாரத்தின் ஐந்து தினங்களிலும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை…

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல் போன போது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார். சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் காணாமல் போன நிலையில் பொலிஸ் முறைப்பாடு செய்தும் இதுவரை யுவதி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 0760777615 , 0740961230

Read More