Author: admin

கோட்டா கோகம போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள டான் பிரியசாத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைத்தொலைபேசிகள் கையளிக்கப்படும் வரை சந்தேகநபர்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே மேலும் உத்தரவிட்டுள்ளார். தொலைபேசிகளை கையளித்த பின்னர் குறித்த சந்தேக நபர்களை விடுவிக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

Read More

சந்தையில் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சியும், முட்டைக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க கூறுகையில், முட்டைக் கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக முட்டை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கோழிகளை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 700 ரூபா வரை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தையில் முட்டையின் பல்வேறு விலைகள் காரணமாக, முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து அரசாங்கம் அண்மையில் வர்த்தமானியை வெளியிட்டது. இதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சில உடன்பாடுகள் ஏற்பட்டாலும், அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைக்கு சந்தையில் முட்டை விற்பனை செய்யப்படுவதில்லை என நுகர்வோர் குற்றம் சாட்டிவருகின்றனர். இதேவேளை, எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ சாவை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பதவியிலிருந்து இடை நிறுத்தியுள்ளது. பதவிக்கால வரம்பின் சட்டப்பூர்வ மறு ஆய்வு முடிவு வரை, அவரை உத்தியோகபூர்வ பணியிலிருந்து நீதிமன்றினால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2014 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்த்து பிரயுத் ஆட்சியைப் பிடித்தார். அவர் தனது பதவிக்கால வரம்பை மீறியதாக தாக்கல் செய்யப்படடுள்ள மனுவை பரிசீலிக்க காரணம் இருப்பதாக நீதிமன்றம் ஏகமனதாக ஒப்புக்கொண்டது. அதற்கமைய, நீதிபதிகள் குழாமினர், தமது குழாமின் பெரும்பான்மை (4/5) தீர்மானத்துக்கமைய இன்று முதல் பிரயுத்தை அவரது பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்ய ஒப்புக்கொண்டனர். பிரதமர் பிரயுத் அரசியலமைப்பில் உள்ள எட்டு ஆண்டு பதவி வரம்பு விதியை மீறியுள்ளாரா என்பது குறித்த முடிவு எப்போது வெளியிடப்படும் என்று நீதிமன்றம் அறிவிக்கவில்லை. அவருக்கு எதிராக முடிவுகள் வெளியானால், அவர் உடனடியாக தனது பதவியை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அந்நாட்டு சட்டத்துக்கமைய,…

Read More

தங்களது சுதந்திர தினத்தின்போது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போலந்து ஜனாதிபதி அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகர் கீவில் செய்தியாளர்களை சந்தித்த ஜெலென்ஸ்கி, இதனை தெரிவித்தார். சோவியத் யூனியனிலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக உக்ரைன் இன்று கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு, ரஷ்யா மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும், இத்தகைய நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Read More

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்ட உரை ஓகஸ்ட் 30ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஓகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஐரோப்பாவில் 500 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தின் பாதிப் பரப்பளவுக்கு மோசமான வறட்சி பரவக்கூடும் என்று ஐரோப்பிய வறட்சி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பால பகுதிகளில் நிலவும் அதீத வெப்ப அலையால் பல பகுதிகள் கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு நீர்மட்டம் குறைந்து, நீர்மின் உற்பத்தி மற்றும் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்ணின் ஈரப்பதமும் வறண்டு கோடைகால பயிர்களான சோயாபீன், சூரியகாந்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் குறைந்துள்ளதோடு, காட்டுத்தீ ஏற்படக்கூடிய மோசமான விளவுகளும் ஏற்பட்டுள்ளன.

Read More

தொடங்கொட-மலபட பிரதேசத்தில் வேன் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி யடதொல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டு மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும், வேன் களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் தொடங்கொட சப்புகஹவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இம்மாதம் 25,26 மற்றும் 27ஆம் திகதிகளில் பகல் வேளையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கந்தளாய் குளத்தின் சுத்திகரிப்பு பணிகள் காரணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, திருகோணமலை-கந்தளாய், தம்பலகாமம், கிண்ணியா, ஆண்டான்குளம், நிலாவெளி, பட்டினபுரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

Read More

இலங்கையின் கடற்பரப்பில் கடந்தாண்டு தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியான கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு 90 கோடியே 37 இலட்சத்து 57,293 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுப் பொருட்கள் மன்னாரில் இருந்து ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையான கடற்பரப்பில் பரவியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, சமுத்திரபாதுகாப்பு சம்மந்தமான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதற்கான சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்று, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கு, நீதியமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து துரிதமான நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி இன்று காலை (24) பயணித்த ராணி புகையிரதத்தில் பயணித்த சிலர் பளை புகையிரத நிலையத்தில் இடை நடுவில் இறங்கி தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுண, வழமை போன்று யாழ் ராணி புகையிரதத்த்தில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்களில் சிலர் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர். மிக குறைந்த கட்டணமாக உள்ள போதும் அதனை பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர். ஆனால் இன்றைய தினம் பயணச் சீட்டு பரிசோதனை செய்யும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பயணிகளிடம் பரிசோதனைகளை மேற்கொண்ட போது ஒரு சிலர் பயணச்சீட்டு இன்றி பயணித்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பயணக்கட்டணமும் தண்டப் பணமும் அறவிடப்பட்டடுள்ளது. அத்தோடு மூன்றாம் வகுப்புக்கு பயணச்சீட்டைப் பெற்றுவிட்டு இரண்டாம் வகுப்பில் பயணித்தவர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த மேலும் சிலர் புகையிரத திணைக்கள அதிகாரிகளின் பரிசோதனைக்கு முன்பாகவே இடைநடுவில் பளை புகையிரத நிலையத்தில் இறங்கி சென்றமையினையும் அவதானிக்க முடிந்ததாக…

Read More