Author: admin

இரத்மலானை, பெலெக் கடே சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஆயுதம் ஏந்திய இருவரினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் 1,158,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் நிதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் நுழைந்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய நிதி இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாததால் கர்ப்பிணி பெண் ஒருவர், கடனை வசூலிக்கும் முகவரால் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டதாக ஜார்க்கண்ட் மாநில ஹசாரிபாக் மாவட்டம் இச்சாக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இச்சாக் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு மாற்றுத்திறனாளி விவசாயியின் மகள் என்பதோடு அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் “நிதி நிறுவன உதவியுடன் வாங்கப்பட்ட டிராக்டரை மீட்க, விவசாயி வீட்டிற்கு அந்த முகவர் சென்றபோது, ​​நிதி நிறுவன முகவருக்கும் விவசாயிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் முடிவில்தான் விவசாயியின் மகள் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்துள்ளார்” என்று தெரிவித்தார். மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக கடன் மீட்பு முகவர், தனியார் நிதி நிறுவன…

Read More

நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் வரை எதிலும் ஜனநாயகம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுவாக தமது அரசியல் நோக்கங்களை அடைய முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சுற்றியே அதிகப்படியான அதிகாரங்கள் குவிந்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார். கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் மீண்டும் சலுகைகளை வழங்குவதாகவும் அவர்கள் ஏற்கனவே அரசியல் குடும்பங்களை மையமாகக் கொண்ட அதிகாரங்களைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வருவதை தாம் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் தகுதியின் அடிப்படையில் அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். இந்த போக்கு தொடரும் வரை, இளைஞர்கள் தாங்கள் விரும்பும்…

Read More

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்துள்ள பகுதியில் இருந்து பெரும் திரளான வெடிபொருட்களை நேற்று (16) வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவு புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் பொலிஸாருடன் இணைந்து வாழைச்சேனை நீதிமன்றத்தில் நிலத்தை தோண்டுவதற்கு அனுமதியை கோரியதையடுத்து நீதவான் அனுமதி வழங்கினார். இதனையடுத்து சம்பவதினமான நேற்று (16) வாழைச்சேனை மற்றும் வாகரை நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் குறித்த முகாம் அமைந்துள்ள பகுதியின் நிலத்தை மண் அகழ்வும் இயந்திரம் கொண்டு தோண்டினர். இதன் போது அங்கு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிபொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்தவொரு நபரோ அல்லது அதிகாரக் குழுவோ முயற்சித்தால் அது பாரிய இரத்தக்களரியில் முடிவடையும் என கருணாரத்ன இணையமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இணைய அலைவரிசையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன் இலங்கை அரசியல் தொடர்பில் பல கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தபடி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய கட்சித் தலைமை தயாராகி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக அவர்களை கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு குற்றப்பத்திரத்தை சமர்ப்பித்து பின்னர் கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதுடன், இவ்விடயம் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது. அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாகவும், இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட லசந்த அழகியவண்ண பொருளாளராகவும் செயற்படுகின்றனர். கட்சி உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் பிரதிச் செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதன்படி,…

Read More

கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடக்கம் ரஷ்யப் படையினரால் கார்கிவ் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கார்கிவ் பிரதேசம் விடுவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையர்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Read More

இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே கடந்த மே 20 ஆம் திகதியன்று 3 மில்லியன் டொலர்களை ஜப்பான், இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக வழங்கியிருந்தது இந்தநிலையில், நேற்று வழங்கப்பட்ட 3.5 மில்லியன் டொலர்களையும் சேர்த்து 6.5 மில்லியன் டொலர்களை ஜப்பான், இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த உதவிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம்,ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படுகின்றன. இதேவேளை இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்குவதற்கு இந்த உதவி பங்களிக்கும் என ஜப்பான் அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Read More

மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்களுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தலாக இருந்த முதலை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டு குமண காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியின் பெரியகல்லாறு, மற்றும் கோட்டைக்கல்லாறு பகுதியில் அதிகளவு மக்கள் மீன்பிடித் தொழிலை நம்பியே தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த ஆற்றுப்பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக முதலைகள் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு தமக்கு அச்சுறுத்தலாக உள்ள முதலைகளைப் பிடிக்குமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் அப்பகுதி உறுப்பினர் த.சுதாகரணிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்ததற்கு இணங்க, அவர் எடுத்த முயற்சியின் பலகாக வியாழக்கிழமை(15) இரவு குறித்த ஆற்றுப் பகுதிக்க வந்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகஸ்த்தர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் முதலையைப் பிடிப்பதற்கு இரும்புக் கூடு வைத்துள்ளனர். இந்நிலையில் வைத்த கூட்டுக்குள் அகப்பட்ட குறித்த முதலையை வெள்ளிக்கிழமை(16) ஆற்றுக்குள்ளிருந்து வெளியில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு…

Read More