Author: admin

பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெதுப்பக தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது என இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான மண்ணெண்ணெயை பெற்றுக் கொடுப்பதற்காக, சலுகைத் திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் காலங்களில் மண்ணெண்ணெயை பெற்றுக் கொள்வதில் சலுகை வசதி கிடைக்குமென அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். நேற்று முன்தினம்(21) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 340 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு தரப்பினரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. இலங்கையில், மாதாந்தம் 19 மெட்ரிக் டொன் மண்ணெண்ணெய்க்கான தேவை காணப்படுகின்றது. நாட்டு மக்களுக்கான மண்ணெண்ணெய் தேவையானது, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் கிளைச் சேவையாக பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

Read More

துருக்கிய அரசாங்கம் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது. Filgasstrin ஊசிகளை உள்ளடக்கிய முதலாவது சரக்கு விமானம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, 14 ஒகஸ்ட் 2022 அன்று இலங்கை சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் பெறப்பட்டது. மற்ற மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் 17 ஆகஸ்ட் 2022 அன்று துருக்கியில் உள்ள இஸ்மித் கடல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு 2022 செப்டம்பர் நடுப்பகுதியில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 மே மாதம் துர்க்கிய-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவர் அஹ்மத் ஹம்டி காம்லி மற்றும் துருக்கியின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து இலங்கையின் நிலைமையை விளக்குவதற்காக தூதுவர் ஹசன் விடுத்த கோரிக்கையின் விளைவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, துருக்கியின் சுகாதார அமைச்சகம் துருக்கியின் வெளியுறவு…

Read More

´மிஸ் யுனிவர்ஸ்´ அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் பெண்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் பட்டம் பெற்றால் அந்த காலம் முழுவதும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது, குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற விதிகள் உள்ளன. இந்நிலையில், ´மிஸ் யுனிவர்ஸ்´ அழகிப் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டுவர அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. அழகிப் போட்டியில் திருமணமான பெண்களும் குழந்தை பெற்றுக்கொண்ட இளம் பெண்களும் கலந்துகொள்ளும் வகையில் விதிகள் தளர்த்தப்பட உள்ளதாக ´பாக்ஸ் நியூஸ்´ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் நடப்பாண்டு முதலே கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 72 வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டிகள் அடுத்தாண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் நடைபெறவுள்ளது. 2020ல் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஆண்ட்ரியா மெசா, இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Read More

ஒரு பவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745.81 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதேவேளை இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 181,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேநேரம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இருப்பினும் செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்க நகையொன்றின் விலையானது சுமார் 2 இலட்சம் ரூபாவாக காணப்படுகின்றதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Read More

சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் பெறுமதியான மோட்டார் மற்றும் மின் உபகரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களை காரைதீவு பொலிஸார் இன்று(22) கைது செய்துள்ளனர். அம்பாறை – காரைதீவு பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள உருக்கு இரும்பு தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய தொழிற்சாலை உரிமையாளரால் இந்த சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க தலைமையிலான குழுவினரால் விசாரணைகள் முன்னனெடுக்கப்படுகின்றது. இதன்போது கொள்ளைச் சம்பவத்தினுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இனங்காணப்பட்ட நிலையில் அவருடன் இணைந்து செயற்பட்ட ஏனைய நால்வர் இனங்காணப்பட்டு இன்று காரைதீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல வருடங்களாக தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகவும் சுமார் ஒருகோடியே ஐம்பது இலட்சம் பெறுமதியான மோட்டார், உபகரணங்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது எனவும்…

Read More

கடந்த எட்டு மாதங்களில் 140,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 300,000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என அரசாங்கத்தின் செயலாளர் திரு.ஆர்.பி.ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

Read More

அண்மைய பொருளாதார நெருக்கடி பலரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது, திடீரென மேலே போனவர்கள் இப்போது கீழ் நோக்கிச் சரிய ஆரம்பித்திருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, தாறுமாறாக விலைகளையும், கட்டணங்களையும் உயர்த்தியவர்களிடம் இருந்து நுகர்வோர் விலகிச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இது இன்றைய நிலையில் சந்தையில் முக்கியமானதொரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. டொலர் நெருக்கடி, பணவீக்கம், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் என்பன போன்ற காரணங்களால், பல்வேறு அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள், பல மடங்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால், இது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட மக்களின் தாங்கு சக்திக்குப் பெரிதும் சோதனைக்குள்ளாக்கியிருந்தது. அதன் விளைவாக, மக்களின் நுகர்வுப் பழக்க வழக்கங்களில், கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தையில் பிஸ்கட் பொதிகள் சலுகை விலைக்கு விற்கப்படுவது குறித்து அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. 580ரூபா பொறிக்கப்பட்ட பிஸ்கட் பொதி, 480 ரூபாவாக குறைக்கப்பட்ட விலையில் விற்கப்படும், படத்துடன் பகிரப்பட்ட…

Read More