Author: admin

இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது. நேற்று (27) மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 350.49 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று (28) இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “களவாஞ்சி பொலிஸாரினால் எனக்கு எதிராகவும், நான் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில், என் சார்ந்தவர்கள் யார் என தெரியவில்லை. இலங்கையில் வாழும் அனைவருமே நான் சார்ந்தவர்கள்தான். அவ்வாறு இருக்கும்போது, 14 நாட்களுக்கு எந்தவிதமான விடயங்களும் வீதியை மறித்தோ பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு விடயமும் செய்யக்கூடாது என நீதிமன்றத்தினால் ஒரு தடை உத்தரவி வழங்கியுள்ளனர். இதான் இன்று நாட்டில் அராஜகமான நிலை, ஏன் என்றால் இன்று இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலுமே மக்கள் வீதியிலேயே போராடும் போது, இன்று களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாத்திரம் ஒரு நீதிமன்ற தடை…

Read More

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே இன்று கடமைக்காக வந்துள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. ஏற்கனவே சுமார் 5 சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அவற்றின் கொள்கலன்களை இறக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக் குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இன்று வழமையாக இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

2021 இல் நாட்டிலிருந்து மொத்தம் 410 பேர் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் / எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 2019 உடன் ஒப்பிடும்போது 2020 மற்றும் 2021 இல் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையில் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செயலமர்வின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் தற்போது சுமார் 3,700 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எச்.ஐ.வி. கட்டுப்பாட்டு திட்டத்தின் வைத்திய அதிகாரி, ஆலோசகர் வெனரோலாஜிஸ்ட் டாக்டர் தர்ஷனி மல்லிகாராச்சி தெரிவித்தார். ‘எச்.ஐ.வி வைரஸை நாங்கள் கண்டறிந்து கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் ஆகிறது. இந்த எச்.ஐ.வி வைரஸ் உலகம் முழுவதும் ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. உலகில் கிட்டத்தட்ட 79 மில்லியன் மக்கள் பயங்கரமான இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘உலகில் கிட்டத்தட்ட 36 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். இந்த வைரஸால், இன்னும் மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள்,’…

Read More

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பின்வருமாறு பதிவிட்டிருந்தார். “பொது மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆளும் கூட்டணி பிளவுபட்டு பெரும்பான்மையை உருவாக்க முயல்கிறது, அதே வேளையில் நாடு பாதிக்கப்பட்டுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ட்வீட் செய்துள்ளார். “நாங்கள் உண்மையில் கையில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்கிறோமா அல்லது வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களில் பிஸியாக இருக்கிறோமா?” என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More

சமகால அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகள் முடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இந்த அந்நிய செலாவணி நன்கொடை மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய வங்கி தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்நியச் செலாவணி பெறுகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு என்பவற்றை வெளிப்படைத் தன்மையை பேணுவதற்காக மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றையும் மத்திய வங்கியின் ஆளுநர் நியமித்துள்ளார். நன்கொடைகள் தொடர்பான தகவல்களை fdacc@cbsl.lk என்ற மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Read More

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இது ஜனாதிபதியினுடைய மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில், அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து புதிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு நிறைவேற்று ஜனாதிபதி என்கின்ற வகையில், தாம் இணங்குவதாகவும் அரசாங்கத்தினில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி எழுத்துமூலம் தெரியப்படுத்தியுள்ளார். நாட்டின் தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர். அனைத்துக் கட்சி அரசாங்கத்த்தினை அமைக்க ஜனாதிபதி இணங்கிஇருக்கின்றார். இதற்கமைவே, முதல் கட்டமாக நாளை தினம் (29) ஜனாதிபதி மாளிகைனுள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளுக்குமான விசேட கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

அடையாள வேலை நிறுத்தம் காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று இடம்பெறாது என அத்திணைக்களத்தின் ஆணையாளர் வியானி பெர்னாண்டோ அறிவித்துள் ளார்.

Read More

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணியளவில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கையளித்த உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் யோசனைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பிலும் இன்று ஆராயப்படவுள்ளது.

Read More