Author: admin

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருட்களை மாத்திரம் இன்று (செவ்வாய்க்கிழமை) விநியோகிக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னதாக அறிவித்தது. இந்த நிலையிலேயே, எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எவ்வித தடையும் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்தோடு, தவறான செய்தி எச்சரிக்கைகள் மற்றும் அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

தென்பத்திரகாளி அம்மன் கோயில் கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பில் அமைந்துள்ள வரலாற்றுக் காலத்துக் கோயில் ஆகும். அமைவிடம் மட்டக்களப்பின் தென் கோடியில் கல்முனைக்கு மேற்காக வாவியும் வயலும் ஒருங்கே தழுவிடும் சொறிக்கல்முனைக் கிராமம் இருக்கிறது. இப் பதியிலே ஆதிமாகாளியாக ஆட்சியும் மாட்சியும் கொண்டு அம்பாள் அருள் பாலித்துவந்தாள். சொறிக்கல்முனை ஆதிமாகாளி ஆலயம் எப்போது நிறுவப்பட்டது என்பது பற்றி சரியான ஆதாரக் குறிப்புகள் கிடைக்க வில்லை. ஆயினும் இவ்வாலயம் 16ம் நூற்றாண்டுக்கும் முந்தியது என்பதை மற்றைய வரலாற்றுக் காரணிகளுடன் ஒப்பிட்டு ஊகிக்க முடியும். வரலாறு மன்னன் இராசசிங்கனின் மறைவிற்குப் பின்னர் மட்டக்களப்பின் மீது கண்டி இராட்சியத்தின் ஆளுகை சற்று நலிவுற்றே இருந்தது. பயிர் விளைச்சல் குன்றி பஞ்சமுண்டாயிற்று. இவ் வேளையில் ஒல்லாந்தர் தமது நாட்டிலிருந்து தானியங்களைத் தருவித்துக் கொடுத்துத் தாபரித்தனர். இவ்வாறாக ஏற்பட்ட இறுக்கம் கிபி 1718 இல் மட்டக்களப்பில் ஒல்லாந்தர் ஆட்சியை நிலை கொள்ளச் செய்தது. 1728 ஆம் ஆண்டுகளில்…

Read More

“சகல பிள்ளைகளும் சிறந்ததொரு எதிர் காலம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் கல்முனை உவெஸ்லி உயர் தரப்பாடசாலையில் அதிபர் எஸ்.கலையரசன்தலைமையில் இடம்பெற்றது ( எஸ்.எம்.எம்.றம்ஸான்)

Read More

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் அதுசார்ந்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளரின் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல், விநியோகம் என்பனவும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வைத்தியசாலைகள் உட்பட நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்களிப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More

பெரும்போகத்தில் சோள பயிர்ச்செய்கைக்கு அவசியமான யூரியா உரத்தை, மொனராகலை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் முதலான மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த 3 மாவட்டங்களுக்கும், ஒரு இலட்சத்து 75 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரம் விநியோகிக்கப்படுவதாக விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் அவசியத்தன்மைக்கு அமைய, அடுத்த தொகை யூரியா உரத்தை விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேயர் சோள பயிர் நிலத்துக்காக, 200 கிலோகிராம் யூரியா உரம் வழங்கப்படுகிறது. இதற்கமைய, 50 கிலோகிராம் யூரியா உர மூடை ஒன்று, கமநல சேவை திணைக்களம் ஊடாக, விவசாயிகளுக்கு 15,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

இலங்கை பொருளாதாரமானது அடுத்த ஆண்டில் 10 பில்லியன் டொலர்களுக்கும் மேல் சுருங்கக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளதாகவும் இதன் மூலம் இலங்கை மிக மோசமான பொருளாதர நிலைமையை நோக்கி தள்ளப்படக்கூடும் எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக கற்கைப் பிரிவின் பொறுப்பாளர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கம் வரிகளை அதிகரித்தால், பொருளாதார சரிவு வேகம் அதிகரிக்கும் என்பதுடன் வங்கி உட்பட நிதி கட்டமைப்புகள் மட்டுமின்றி அவற்றுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் ஆபத்து உள்ளாகலாம் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கம் மேலும் வரிகளை அதிகரிக்க முயற்சித்தால், அது முழு நாட்டு மக்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும். அதேபோல் வட்டி வீதத்தை அதிகரித்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். அது இலங்கை மத்திய வங்கி எடுக்க வேண்டிய நடவடிக்கை. எனினும் அது பொருளாதாரத்தில் அதிர்வை ஏற்படுத்தும். பொருளாதாரத்திற்கு ஏற்படும் இந்த அதிர்வு ஏனையவற்றிலும் பிரதிபலிக்கும். வர்த்தகர்களுக்கு பிரதான பாதிப்பு ஏற்படும். அவர்கள்…

Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் மருந்துப்பொருள் இறக்குமதியில் 428 கோடி ரூபா நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதம் வரை அரசாங்க மருத்துவமனைகளுக்கான மருந்துப்பொருள் இறக்குமதி விடயத்தில் இந்த நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் உள்ளது. பிரதான மருந்துப்பொருள் இறக்குமதியாளர்களுக்கு 311 கோடி ரூபாவும், மக்கள் வங்கிக்கு 92 கோடி ரூபாவும், இலங்கை வங்கிக்கு 25 கோடி ரூபாவும் இவ்வாறு நிலுவைத் தொகையாக செலுத்தப்பட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறான நிலுவைத்தொகை காரணமாக வெளிநாடுகளில் இருந்து மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதில் கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கடந்த காலங்களில் இலங்கையில் தீவிர மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

Read More

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 605,891 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்களும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பெண்கள் தமக்கான முன்னேற்றத்தின் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஹயாத்து முஹம்மது ஜலீலா முஸம்மில் தெரிவித்தார். அவர் எழுதி வெளிட்டு வைத்த “சிறகு முளைத்த மீன்;” கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நூல் ஏற்புரையின்போது அவர் இதனைத் தெரிவித்தார். ஏறாவூர் வாவிக்கரை கலாசார மத்திய நிலையத்தில் ஏற்பாட்டுக் குழுத் தலைவி ஆசிரியை என்.எம். ஆரிபா தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய வைத்தியர் ஜலீலா, சமகாலத்தில் பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு நிறைய சுதந்திரம் இருக்கின்றது. வரையறைகளை தகர்க்கத் தொடங்கியிருக்கும் பெண்கள் மீது விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்த விமர்சனங்களில் அர்த்தமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பெண்களுக்கான வெளிப்படை உலகம் முன்னரைக் காட்டிலும் இப்பொழுது பரந்து விரிந்து கிடக்கிறது. அது ஈர்க்கிறது. திசை காட்டுகிறது. பெண்களது ஆற்றல்கள் படைப்புக்களாக சுதந்திரமாக வெளி வந்தவண்ணமுள்ளன.…

Read More

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளன. உலக மது விலக்கு தினத்தை முன்னிட்டு, இன்று மதுபான விற்பனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சின் அறிக்கையின்படி, நாட்டில் உள்ள மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 4,092 என்பது குறிப்பிடத்தக்கது.

Read More